அர்ஜுனன் அம்புக்கு பயந்து அஞ்சிய இந்திரன் முதலிய தேவர்கள் பற்றிய மகாபாரத கதை!!!

By: John
Subscribe to Boldsky

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் வித்தைகள் பல பயின்றனர். பாண்டவர்கள் மிகவும் புத்திக் கூர்மை உடையவர்கள் அதனால், துரோணர் கற்று தந்த வித்தைகளை மிக கச்சிதமாகவும், நுட்பமாகவும் கற்றுக் கொண்டு சிறப்பாக திகழ்ந்தனர்.

சிவனுடன் சண்டையிட்டு, அனுமானிடம் வீழ்ந்த ''காண்டீபன்'' அர்ஜுனன் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

கௌரவர்கள் எவ்வளவு முயன்றும் பாண்டவர்கள் அளவிற்கு சிறப்பாக விளங்க முடியவில்லை. பிறவியிலேயே மிகவும் ஆக்ரோஷமும், பழிவாங்கும் எண்ணமும் கொண்ட துரியோதனனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால், ஐராவத பூஜைப் பெருவிழா நடத்தினால் தாங்களும் பாண்டவர்கள் போல மிகவும் புத்திசாலியாக ஆகலாம் என்று கருதி, ஐராவத பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்தனர்...

யாருக்கும் தெரியாத மகாபாரதத்தில் உலூபி மற்றும் அர்ஜுனனின் காதல் கதை!

கௌரவர்கள் செய்த ஐராவத பூஜை தான், அர்ஜுனன் அம்புக்கு இந்திரன் முதலிய தேவர்கள் பயந்து அஞ்சிட காரணமாக இருந்தது. அது ஏன் என்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்துப படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரும் பொருட் செலவு

பெரும் பொருட் செலவு

கௌரவர்களின் ஆசைக்கு இணங்க, பெரும் பொருட் செலவில் ஐராவத பூஜை செய்யப்பட்டது. பெரிய ஐராவத யானையின் உருவம் அமைத்துப் பூஜை செய்யப்பட்டது. தானம், தட்சணைகள் எல்லாம் தாரளமாக வழங்கினார்கள் கௌரவர்கள்.

குந்தியின் ஆசை

குந்தியின் ஆசை

கௌரவர்களுக்கு ஐராவத பூஜை நடத்தியதால், தனது மக்களான பாண்டவர்களுக்கும் ஐராவத பூஜை நடத்த ஆசைப்பட்டால் குந்தி. ஆனால், அந்த அளவிற்கு செல்வ செழிப்பு இல்லை என எண்ணி வருந்தினால்.

அர்ஜுனன் முனைப்பு

அர்ஜுனன் முனைப்பு

தனது அன்னை, தங்களுக்கு ஐராவத பூஜை செய்ய இயலவில்லை என எண்ணி மனம் வருந்துவதை உணர்ந்தான் அர்ஜுனன். கௌரவர்களை விட மிக பெரிதாக ஐராவத பூஜை செய்யவேண்டும் என்று முனைப்பாக இருந்தான்.

ஐராவத யானை

ஐராவத யானை

கௌரவர்கள் ஐராவத யானை உருவத்தை தானே பூஜை செய்தனர். நாம், அந்த உண்மையான ஐராவத யானையையே வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான்.

இந்திரனுக்கு கடிதம்

இந்திரனுக்கு கடிதம்

ஐராவத யானையைக் கொண்டுவருவது எப்படி? என யோசித்து, இந்திரனுக்கு கடிதம் அனுப்பினான் அர்ஜுனன். தனது அம்பின் மூலமாக அவன் அனுப்பிய கடிதம் வானுலகில் இருந்த இந்திரனின் காலடியில் சென்று விழுந்தது.

கடிதத்தின் செய்தி

கடிதத்தின் செய்தி

இந்திரனுக்கு அர்ஜுனன் அனுப்பிய கடிதத்தில், "தந்தையே, கௌரவர்கள் எங்களுக்கு இழைத்துவரும் அநீதியை நீங்கள் நன்கு அறிவீர். அண்மையில் ஐராவத பூஜை பெரும் விழா நடத்தி புகழ் பெற்றமையால் அவர்கள் இறுமாப்பு அதிகமாகிவிட்டது. அதனால், அவர்கள் எங்களுக்கு மேலும் அதிகமான தீமையை செய்ய இயலும். எனவே, அதேப் போல தாங்களும் ஐராவத பூஜை செய்ய, நீங்கள் தங்களது ஐராவதத்துடன் வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் என்று கூறியிருந்தான்.

தேவர்கள் மறுப்பு

தேவர்கள் மறுப்பு

அர்ஜுனனின் கடிதத்தைப் படித்த இந்திரன் தனது தேவர் குழுவுடன் கிளம்ப தயாராகினான். ஆனால், அப்போது தேவர்கள், ஓர் மானிடனின் அழைப்பை ஏற்று தேவலோக தேவர்கள் செல்வதா? இது இழுக்கல்லவா என்று வர மறுத்தனர்.

இந்திரன் தவிப்பு

இந்திரன் தவிப்பு

தேவலோக தேவர்கள் இன்றி தாம் மட்டும் எப்படி தனியாக போவதென்று அறியாது இந்திரன் தவித்து வந்தார். இதை நாரதரிடமும் கூறினார்.

அர்ஜுனன் செய்தி அறிதல்

அர்ஜுனன் செய்தி அறிதல்

நாரதர் மூலமாக தேவர்கள் வர மறுப்பதை அறிந்த அர்ஜுனன். அடங்கா கோபம் கொண்டான். தேவர்களை எப்படியாவது வரவழைக்க வேண்டும் என்று முனைப்போடு இருந்தான்

அம்பு மழை

அம்பு மழை

ஆகவே, தனது வில் வித்தியை பயன்படுத்தி, தனது காண்டீபத்தின் அம்புகளை விண்ணோக்கி செலுத்தத் தொடங்கினான். வானுலகில் தேவர்கள் அர்ஜுனனின் தொடர் காண்டீபா அம்புகளின் தாக்குதலால் நிலைகுலைந்துப போயினர்.

வியாழபகவான் உதவி

வியாழபகவான் உதவி

இந்திரன் முதலிய தேவர்கள் அர்ஜுனனின் கோபத்தின் விளைவாக ஏற்பட்ட அம்பு தாக்குதல்களினால் தப்பித்து, அர்ஜுனனை எப்படி சாந்தப்படுத்துவது என்று யோசித்து வந்த சமயத்தில் தான் வியாழபகவான் வந்தார். அவர் கூறிய அறிவுரையின் படி தேவர்கள் ஐராவத பூஜைக்கு செல்ல தயாராகினர்.

அம்பு ஏணி

அம்பு ஏணி

தேவர்கள் வர முடிவு செய்ததும், மீண்டும் தனது காண்டீபத்தைப் பயன்படுத்தி அம்புகளால் ஏணி அமைத்து அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தான் அர்ஜுனன்.

சிறப்பான பூஜை

சிறப்பான பூஜை

இந்திரன் உட்பட அனைத்து தேவர்களின் ஆசியோடும், பங்களிப்போடும் பாண்டவர்களின் ஐராவத பூஜை சிறப்புப் பெற்றது. பூஜையின் அனைத்து ஏற்பாடுகளையும் தேவர்களே ஏற்று நடத்தினர்.

துரியோதனனின் கோபம்

துரியோதனனின் கோபம்

பாண்டவர்களின் ஐராவத பூஜை அனைவராலும் வெகுவாக புகழப்பட்டது. ஆனால், துரியோதனன் உட்பட கௌரவர்களை தவிர்த்து. சினத்தால் காட்டியே எரிக்கும் அளவு கோபம் கொண்டிருந்தான் துரியோதனன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indiran Afraid Of Arjunas Arrow Strange Story

Do you know about the strange story about indiran afraid of arjunas arrow? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter