இந்தியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை பற்றிய தகவல்கள்!!

By: John
Subscribe to Boldsky

நூற்றாண்டு கால இந்திய திரையுலக பயணத்தில் சில திரைப்படங்கள், இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவினால் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளது.

விவாகரத்தில் முடிந்த பிரபலங்களின் காதல் திருமணங்கள்!!!

இந்தியாவில், நம் நாட்டு மொழித் திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆங்கிலம், கொரியன், ஜப்பானீஸ், சீனா என்று பல்வேறு நாட்டு திரைப்படங்களும், அந்நாட்டு நடிகர்கள் நடித்த வேற்று மொழித் திரைப்படங்களும் கூடத் திரையிடப்படுகின்றன. மற்றும் திரைப்பட திருவிழாக்களில் உலக படங்கள் பலவன திரையிடப்படுகின்றன.

நடிகைகளுடனான உறவினால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த இந்திய பிரபலங்கள்!!!

அந்த படங்களில் கூறப்பட்டிருக்கும் அதே கருத்தினை கூறிய நம் நாட்டு திரைப்படங்கள் சில தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்டது தான் ஏன் என்ற குழப்பம் நிலவுகிறது. ஜாதி, மதம், இனம், நமது கலாச்சாரம் என பல காரணங்களினால் பல திரைப்படங்கள் இந்தியாவில் திரையிட தடை செய்யப்பட்டிருகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டிட் குயின் - 1994

பண்டிட் குயின் - 1994

இந்த திரைப்படத்தில் பெரும்பாலான நிர்வாணக் காட்சிகள், ஆபாச மொழிகள் மற்றும் தகாத உறவுக் குறித்து இருந்ததால் தணிக்கைக் குழு இந்த படத்தை வெளியிட தடை செய்தது.

ஃபயர் - 1996

ஃபயர் - 1996

உலக அளவில் நிறையப் பாராட்டுதல் மற்றும் விமர்சனங்கள் வாங்கிய இந்த திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட காரணம், இந்த திரைப்படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிக் கூறப்பட்டது தான். இது நமது தேசத்திற்கு முற்றிலும் புறம்பானது என்று கூறி தடை செய்யப்பட்டது.

காமசூத்ரா - 1996

காமசூத்ரா - 1996

காமசூத்ராவை இயற்றிய நாடான நமது நாட்டில் காமசூத்ரா பற்றிய திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த திரைப்டதிலும் நிறைய தகாதக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் மற்றும் முறைகேடான முறையில் இருந்ததால் இப்படம் தடை செய்யப்பட்டது.

"தி பிங்க் மிரர்" - 2003

தி பிங்க் மிரர் (The Pink Mirror)எனும் இந்த திரைப்படம் ஓர் சோதனை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து பேசப்பட்டிருந்தது. நிறைய ஆபாசக் காட்சிகள் இருந்ததால் இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டது.

பான்ச் - 2003

பான்ச் - 2003

"பான்ச்" (ஐந்து) இந்த திரைப்படத்தில் நிஜமாகவே நடந்த ஓர் தொடர் கொலைக் குற்றத்தைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து எடுக்கப்பட்டிருந்தது.. இந்த திரைப்படத்தில் வன்முறைகள் அதிகமாக இருந்ததாலும், போதை மருந்துகள் குறித்து பல விஷயங்கள் காட்டப்பட்டிருந்ததாலும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

"ப்ளாக் ஃப்ரைடே" - 2004

மும்பையில் நடந்த ஓர் குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றி தழுவி எடுக்கப்பட்ட படம் தான் "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday). இதனால் ஏதேனும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆக வாய்ப்புகள் இருக்கின்றது என மும்பை உயர் நீதிமன்றம், இந்த திரைப்படத்தை வெளியிட தடைவிதித்தது.

பார்சானியா - 2005

பார்சானியா - 2005

குஜராத்தில் நடந்த ஓர் கலவரத்தை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நல்ல விமர்சனங்கள் வந்த போதிலும் எதிர்ப்புகளும் நிறைய கிளம்பின. தேசிய விருது வாங்கிய ஓர் திரைப்படம், தடை செய்யப்பட்டது வியப்பாக இருந்தது.

சின்ஸ் (Sins) - 2005

சின்ஸ் (Sins) - 2005

கேரள மதகுரு ஒருவருக்கும் ஓர் அழகிக்கும் இடையே இருந்த ஓர் தகாத உறவை பற்றிய திரைப்படம் இது. இதில் ஆபாசக் காட்சிகள் அதிகம் இருந்ததால் தணிக்கைக் குழு தடை செய்தது.

வாட்டர் (Water) - 2005

வாட்டர் (Water) - 2005

விதவை பெண்களில் வாழ்கையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டது. வாரணாசி பகுதியை மையமாகக் வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம், போராட்டங்கள், எதிர்ப்புகள் நிறைய கிளம்பியதால் இந்தியாவில் வெளியாக தடை செய்யப்பட்டது.

அன்ஃப்ரீடம் (Unfreedom) - 2015

அன்ஃப்ரீடம் (Unfreedom) - 2015

இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் ஓரின சேர்கையாளர்கள் பற்றியும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றியும் எடுக்கப்பட்டிருந்தது. இரண்டு வகைகளில் பல எதிர்ப்புகள் வரும் என்பதால் இந்த திரைப்படம் வெளியாக தணிக்கைக் குழு தடைவிதித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மண் மனம் மாறாத மணப்பாறை முறுக்கு..!!

English summary

Indian Movies That Got Banned By The Censor Board

Do you know about the indian movies that got banned by the sencor board? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter