மர்மமான முறையில் விபத்தில் இறந்த இளவரசி டயானா பற்றிய முக்கியமான தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

வேல்ஸ் இளவரசியான டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி ஆவார். இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹேரி என இரு மகன்கள். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா.

சார் ஐசாக் நியூட்டன் பற்றிய விந்தையான தகவல்கள்!!!

பிரிட்டிஷ் இராஜ குடும்பத்தில் இணைந்ததில் இருந்தே உலகின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் டயானா. திருமணமானது முதல் இவர் இறந்து பல வருடங்கள் வரை ஊடகங்களுக்கு நல்ல இரையாக (செய்தியாக) இருந்தார் இளவரசி டயானா. இவரது மரணம் விபத்தா அல்ல கொலையா என்பது நீண்ட வருடங்களாக பெரும் குழப்பமாக இருந்து வந்தது.

தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய பிரபலங்கள்!!!

இளவரசி டயானா இறந்து 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2008ஆம் ஆண்டு நீதிமன்றம், "இளவரசி டயானா இறந்த போது பயணித்த காரின் ஓட்டுனர் தான் அவரது இறப்பிற்கு காரணம். சாலை விதிகளை பின்பற்றாதது தான் மரணம் ஏற்பட காரணமாக அமைந்தது" என்று தீர்ப்பு வழங்கியது.....

எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயானாவிற்கு தொடர்பு இருந்தது

டயானாவிற்கு தொடர்பு இருந்தது

இளவரசர் சார்லசும், டயானாவும் அதிகாரப்பூர்வமாக 1992ஆம் ஆண்டு பிரிந்தார்கள். இதற்கு பிறகு நான்கு வருடங்கள் கழித்து 1996ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதற்கு காரணம், டயானாவிற்கும் வேறு ஓர் நபருக்கும் தொடர்பு இருந்தது தான் என்று பல செய்திகள் கூறுகின்றன.

பி.பி.சி.'யின் அதிர்ச்சியான செய்தி

பி.பி.சி.'யின் அதிர்ச்சியான செய்தி

கடந்த 1995 ஆண்டு பி.பி.சி'யின் ஓர் பேட்டியில், இளவரசி டயானா சார்லசிற்கு துரோகம் செய்துவிட்டார். அவர் வேறு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி வெளியானது. அதன் பிறகு இனிமேலும், அவரை எப்படி இளவரசியாக மக்கள் ஏற்றுகொள்வார்கள் என கேள்விகள் எழுந்தன.

இராஜ மரியாதை இழந்தார்

இராஜ மரியாதை இழந்தார்

1996ஆம் ஆண்டு இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவிற்கும் விவாகரத்து ஆனதுடன், அவருக்கு வழங்கப்பட்டு வந்த இராஜ மரியாதை இரத்தானது. ஆனால், இன்று வரை டயானா வேல்ஸின் இளவரசி என்ற பெயருடன் தான் அழைக்கப்பட்டு வருகிறார்

ஒப்பற்ற புகழ்

ஒப்பற்ற புகழ்

பல்வேறுபட்ட செய்திகள், வதந்திகள், இரகசியங்கள் என பல வலைகளில் சிக்கித்தவித்த போதிலும் கூட, இன்று வரை ஒப்பற்ற புகழ் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

சதி செயல்களினால் இறந்தார்

சதி செயல்களினால் இறந்தார்

பாரிஸ் நகரில், இரவு காரில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் குடித்துவிட்டு கட்டுப்பாட்டினை இழந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இளவரசி டயானா இறந்தார் என செய்திகள் வெளியாயின. பிறகு நீதிமன்றம், சாலை விதிகளை மீறி அவர் வண்டியை ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என தனது தீர்ப்பில் கூறியது.

சீட் பெல்ட் அணியாயது

சீட் பெல்ட் அணியாயது

டயானா தனது ஆண் நண்பருடன் ஹோட்டலில் இருந்தது ஓர் செய்தியாளருக்கு தெரிந்து அவர் புகைப்படம் எடுத்துவிட்டதாகவும். அவரிடம் இருந்து தப்பிக்க முயலும் போது அவசரத்தில் அவர் சீட் பெல்ட்டை அணியாததாலும் தான் அவர் விபத்தின் போது இறந்ததற்கு காரணம் என்றும் அந்நாளில் செய்திகளில் கூறப்பட்டது.

எண்ணற்ற அறக்கட்டளைகளுக்கு உதவினார்

எண்ணற்ற அறக்கட்டளைகளுக்கு உதவினார்

உலகம் முழுதும் கண்ணிவெடிகளை எதிர்த்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இளவரசி டயானா. மற்றும் எண்ணற்ற அறக்கட்டளைகளுக்கு நிறைய உதவியும் செய்தார்.

 அமைதிக்கான நோபல்பரிசு

அமைதிக்கான நோபல்பரிசு

இளவரசி டயானா இறந்த சில மாதங்களில், கண்ணிவெடிகளை எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.

சோகங்கள் நிறைந்த சுயசரிதை

சோகங்கள் நிறைந்த சுயசரிதை

திருமணமான புதிதில் நிறைய மனநல பிரச்சனைகளும், பசியின்மை கோளாறு, தற்கொலை முயற்சிகள் போன்றவற்றில் சிக்கி தவித்ததாக டயானா தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தையும் கடந்து தான் ஓர் நல்ல தாயாக இருந்ததாக மேலும் அவர் அதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 எச்.ஐ.வி குறித்த டயானாவின் பார்வை

எச்.ஐ.வி குறித்த டயானாவின் பார்வை

எச்.ஐ.வி ஓர் உயிர்கொல்லி, அந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் ஒன்றுமே செய்ய இயலாது என்று பலதரப்பட்ட மக்கள் எதிர்வினை உணர்வுகளை பகிர்ந்து வந்த போது, அதையும் கடந்து வர முடியும், வாழ முடியும் என்று அதன் மேலான பார்வையை மாற்றினார் டயானா. அவர்களையும் கருணையின் அடிப்படையில் நாம் அரவணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important Facts About Princess Diana

Do you know about the important facts about Princess Diana? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter