திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

பல இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் முதல் படியே, மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஜாதக பொருத்தம் பார்ப்பது தான். எந்த ஒரு பிரச்சனையுமின்றி இரண்டு பேர்களின் ஜாதகமும் பொருந்தி விட்டால், அந்த தம்பதி சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்திடுவார்கள் என நம்பப்படுகிறது.

ஜாதக பொருத்தம் பார்க்கும் சடங்கை பல பேர் நம்பி வந்தாலும் கூட, இந்த செயல்முறைக்கு பின்னணியில் இருக்கும் சரியான காரணத்தைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அதனால் நாங்கள் சில ஜோசியக்காரர்களை சந்தித்து, இதனைப் பற்றி விரிவாக விளக்கவும், திருமணங்களில் ஜாதகங்களின் உண்மையான முக்கியத்துவத்தைப் பற்றியும் கேட்டுக் கொண்டோம். அதன் முக்கியத்துவத்தை சொன்னதோடு நிற்காமல், பல்வேறு டிப்ஸ்களையும் ஜாதக பொருத்தம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அவர்கள் கூறினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாதக பொருத்தம் எப்படி நடைபெறுகிறது?

ஜாதக பொருத்தம் எப்படி நடைபெறுகிறது?

கிரகங்கள் சுழற்சியின் கண்ணோட்டத்தில் இருந்தே ஜோசியக்காரர்கள் ஜாதகத்தை பார்க்கின்றனர். கிரகங்களின் சுழற்சியை பொறுத்தே ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆளுமை அமையும் என அவர்கள் கூறுகிறார்கள். தம்பதிகள் ஒன்றாக வாழப் போவதால், அவர்களின் நட்சத்திரங்களும், கிரகங்களும் தங்களுடைய செல்வாக்கை தங்கள் துணையின் விதி மீதும் செலுத்தும். அதனால் இரண்டு பேர்களின் நட்சத்திர பொருத்தங்களை ஜோசியக்காரர்கள் சரிப்பார்ப்பார்கள். இதுப்போக, இருவருடைய குணங்களுக்கு இடையே பொருத்தம் இருக்குமா என்பதையும் அவர்கள் கூறி விடுவார்கள்.

ஜாதக பொருத்தத்தின் முக்கியத்துவத்தை ஜோசியக்காரர்கள் விளக்குகின்றனர்

ஜாதக பொருத்தத்தின் முக்கியத்துவத்தை ஜோசியக்காரர்கள் விளக்குகின்றனர்

தம்பதிகள் இருவரும் சந்தோஷமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவர்களின் ஜாதக பொருத்தம் பார்க்கப்படுகிறது. உங்கள் திருமணம் வெற்றிகரமானதாக அமைய வேண்டுமானால், ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டிய முக்கியத்துவம் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும். அதற்கு காரணம் ஒருவருடைய தன்மையை அவருடைய ஜாதகத்தை வைத்து கணித்து விடலாம். உங்கள் துணை அந்த திருமணத்தில் நேர்மையானவராக இருப்பாரா, உங்கள் இருவருக்கும் இடையேயான உறவுமுறை எப்படி அமையும், உங்கள் மாமியாருடனான உறவு எப்படி இருக்கும் போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மிக முக்கியமாக உங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், அதில் எந்தளவுக்கு நீங்கள் திருப்தியடைவீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இவையெல்லாம் முன்பே தெரிந்து கொண்டால், சந்தோஷமான திருமண வாழ்க்கையை உங்களால் பெற முடியும்.

ஜாதகத்தில் உள்ள குணங்கள்

ஜாதகத்தில் உள்ள குணங்கள்

ஜாதக பொருத்தம் பார்க்கும் போது, குணங்கள் என அழைக்கப்படும் 8 புள்ளிகளும் கருதப்படும். ஒவ்வொரு குணங்களுக்கும் குறிப்பிட்ட மதிப்பு உள்ளது. இந்த 8 குணங்களின் கூட்டு தொகை 36 ஆக வரும். ஒரு தம்பதி சந்தோஷமாக இணைந்து வாழ்ந்திட குறைந்தது 18 புள்ளிகளாவது பொருந்தியிருக்க வேண்டும். ஒரு வேளை, பொருந்திய புள்ளிகள் 27-க்கு மேலாக இருந்தால், அது தான் சிறந்த பொருத்தமாக இருக்கும். ஒரு வேளை, 18 புள்ளிகளுக்கு குறைவான பொருத்தம் இருந்தால், அந்த திருமணம் நடக்க அறிவுறுத்தப்படமாட்டாது.

ஜாதகத்தில் உள்ள குணங்கள்

ஜாதகத்தில் உள்ள குணங்கள்

ஜாதக பொருத்தம் பார்க்கும் போது கீழ்கூறிய 8 குணங்களையும் கருத வேண்டும்:

வர்ணா

வஷ்யா

தாரா

யோனி

க்ரஹ மைத்ரி

கன்

பகூட்

நாடி

ஒரு ஜோசியக்காரர் கூறியதன் படி, "திருமணம் பேரின்பமாக அமைய வேண்டுமானால் அதற்கு முதல் படி ஜாதக பொருத்தமாகும். 36 குணங்களில் குறைந்தது 50% ஆவது பொருந்தியிருந்தால் தான் அது நல்ல சம்பந்தமாக மாறும். இதுப்போக, மாங்கல்ய தோஷம் (செவ்வாய் கிரகத்தின் தீய தாக்கங்கள்), கால சர்ப்ப தோஷம் (அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு நடுவே இருக்கும்) போன்றவைகளையும் சரியாக கவனிக்க வேண்டும். அப்போது தான் சந்தோஷமான சம்பந்தம் ஏற்பட்டு வெற்றிகரமான திருமணம் முடியும்."

அதனை சார்ந்திருக்க வேண்டுமா?

அதனை சார்ந்திருக்க வேண்டுமா?

இந்தியாவில் காதல் திருமணங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், பல இளைஞர்கள் ஜாதக பொருத்தத்தின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். ஜாதக பொருத்தத்தின் முக்கியத்துவத்தை கருதியும், அதன் மீது நம் பெரியவர்கள் வைத்துள்ள திடமான நம்பிக்கையினாலும், நம் மனதில் வரும் ஒரே கேள்வி "நம் வாழ்க்கையில் ஜாதக பொருத்தத்தை நம்ப வேண்டுமா?"

ஜோசிய வல்லுனர்களின் படி, "வாழ்க்கையில் மிக முக்கியமானது நல்ல மனிதனாக இருப்பது. தனிப்பட்ட முயற்சி, நேர்மை, அனுசரிப்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் ஈகோவை விட்டெறிதல் போன்றவைகள் உங்கள் திருமணத்தை வெற்றியடையச் செய்யும். ஜோசியக்காரர்களான எங்களால் உங்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்க முடியும். அதனை நீங்கள் நம்புவதோ, பின்பற்றுவதோ உங்களை பொருத்ததாகும். ஜாதக பொருத்தம் மேற்கொள்ளப்படுவது, முன்கூட்டியே அந்த தம்பதிகள் சந்திக்க போகும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதற்கே." திருமணம் என்பது முடிவு பெறாத பந்தமாகும். அதில் கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழவே ஆசைப்படுவார்கள். அது நடப்பதற்கு ஜோசியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.

பொருத்தமில்லாத ஜாதகங்களுக்கு தீர்வுகள்

பொருத்தமில்லாத ஜாதகங்களுக்கு தீர்வுகள்

ஒரு திருமணம் வெற்றியடைவதற்கு அனைத்து கிரகங்களும், ஜாதகமும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால் ஜாதக பொருத்தம் இல்லையென்றால், அனுபவப்பட்ட ஜோசியக்காரரை சந்தித்து கலந்தாலோசிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் தோஷங்களுக்கு பரிகாரங்களை அளிப்பார்கள். அதனால் இரு நபர்களின் ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் கூட அவர்களின் திருமணம் நடக்க ஜோதிடம் வழிவகுக்கும்.

தம்பதிகளுக்கு டிப்ஸ்

தம்பதிகளுக்கு டிப்ஸ்

சந்தோஷமான திருமண வாழ்க்கையை பெற்றிட தம்பதிகளுக்கு சில டிப்ஸ். ஜாதக பொருத்தம் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் கூட, ஒரு திருமணம் வெற்றியடைவது, 70% மனிதர்களின் கையில் தான் உள்ளது. ஒவ்வொரு தம்பதிகளும் விநாயகர் படம் போட்ட டாலரை அணிந்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. திருமண நாளின் போது மணமகனோ அல்லது மணமகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ கருப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு நிறத்திலோ ஆடை அணியாத மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். மணப்பெண் சிகப்பு அல்லது பிங்க் நிற ஆடையை அணிந்து கொள்ளலாம். அதற்கு காரணம் அந்த நிறங்கள் திருமண வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். ஏதேனும் பிரச்னையை சந்தித்தால், நீங்கள் விநாயகரை வழிபட வேண்டும். அவர் உங்கள் வாழ்க்கையில் அனைத்து கட்டத்திலும் உங்களுக்கு கைக்கொடுப்பார்.

குறிப்பு

குறிப்பு

தனிப்பட்ட முயற்சியில் தான் ஒருவருக்கொருவான புரிதலும் பொருத்தமும் அமையும். ஆனாலும் கூட ஜாதகங்கள் என்பது திருமண பந்தத்தில் இருந்து என்ன எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கான ட்ரைலெர் மட்டுமே. அதனால் நீங்கள் ஜோசியத்தை நம்பினால், உங்கள் திருமண வாழ்வு சந்தோஷமானதாக அமைய ஜாதக பொருத்தம் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Importance Of Kundli Matching In Weddings

While a large number of people believe in this ritual of kundali milan (matching of the astrological charts), not all might be aware of the exact reason behind this process. So, we asked some astrologers to explain in detail, the actual significance of kundalis in a wedding.