கொக்கோகோலா உங்க தாகத்த மட்டும் தான் அடக்குதுன்னு நினைக்கிறீங்களா?? இதப்படிங்க பாஸ்!!!

By: John
Subscribe to Boldsky

பல பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் தாகத்திற்கு இப்போது எல்லாம் நீரைக் குடிப்பதை விட கொக்கோகோலாவை தான் அதிகம் குடிக்கின்றனர். இரண்டும் ஒரே விலையில் விற்கப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும். ஸ்டைல், கெத்து போன்றவை தான் முக்கிய பங்கு வகுக்கின்றன.

ஒருவேளை கொக்கோகோலா உங்களது தாகத்தை மட்டும் தான் அடக்குகிறது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. கோக்கோகோலாவில் இருக்கும் அசிடிக் தன்மை என்னவெல்லாம் செய்யும் என்று பாருங்கள், கொக்கோகோலா எதையெல்லாம் அடக்குகிறது என்று தெரிந்துக் கொள்ளத் தொடர்ந்துப் படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தக் கறைகள் போக்க

இரத்தக் கறைகள் போக்க

கொக்கோகோலாவை பயன்படுத்தி துணி சலவை செய்தால் இரத்தக்கறைக் கூட போய் விடுமாம். (அடடே!! ஆச்சரியக்குறி!!!)

அடிப்பிடித்த பாத்திரங்கள்

அடிப்பிடித்த பாத்திரங்கள்

ஏதேனும் வீட்டு விசேஷங்கள் அன்று சமைத்த போது உங்கள் வீட்டு சமையல் பாத்திரம் அடிப்பிடித்துவிட்டதா? கவலையை விடுங்கள் கொக்கோகோலாவை பயன்படுத்தினால் எளிதாக அதைப் போக்கிவிடலாம். (ஓஹோ, இது வேறயா... இன்னும் என்னென்னெல்லாம் இருக்கோ..)

கார் பேட்டரி

கார் பேட்டரி

உங்கள் கார் பேட்டரி துருப்பிடித்து போனால் நீண்ட நாள் உழைக்காது. அதை சரி செய்ய கோக்கோகோலாவை அவ்வப்போது அதன் மேல் ஊற்றி வைத்தால் துருவேப் பிடிக்காதாம். (அட, இது கொஞ்சம் வித்தியாசமே இருக்கே.!!)

கடினமான கறைகள்

கடினமான கறைகள்

பேனா மைக் கறையை எல்லாம் துணி, தரைவிரிப்பில் இருந்து அகற்றுவது சிரமம். ஆனால், கோக் பயன்படுத்தினால், மிக எளிதாக அந்த கறைகளை எல்லாம் அகற்றிவிடலாம்.

தலைமுடி சாயம் போக்க

தலைமுடி சாயம் போக்க

சில சமயங்களில் தலைமுடியில் ஏதாவது வண்ண சாயங்கள் புதியதாய் அடித்து வந்திருப்போம், ஆனால், அது அடித்த பிறகு தான் நமக்கு பொருந்தவில்லை என்று தெரியும். அதை எப்படி போக்குவது? அதற்கும் உதவுகிறது கோக்கோகோலா. அதை தலையில் ஊற்றி கழுவினால் சாயம் முழுதும் போய் விடுமாம்.

தரையில் எண்ணெய் கறை

தரையில் எண்ணெய் கறை

ஒருவேளை உங்கள் வீட்டு தரையில் எண்ணெய் கொட்டி கறைப்படிந்துவிட்டால் என்ன செய்வதென்று கவலைப்பட வேண்டாம். அதற்கும் உதவுகிறது கோக்கோகோலா.

துருவை போக்கும்

துருவை போக்கும்

எந்த வகையான துருவாய் இருந்தாலும் அதை எளிதாய் போக்கிட உதவும் கோக்கோகோலா. பழையக் காசுகளில் பிடித்திருக்கும் துருவினை போக்கிட நல்ல முறையில் உதவுகிறதாம் கோக்கோகோலா.

பல் கரைந்துவிடும்

பல் கரைந்துவிடும்

உங்களுக்கொன்று தெரியுமா? கோக்கோகோலாவில் ஓர் பல்லை போட்டு வைத்தால் அது கரைந்தே போகுமாம். (எப்ப்ப்பூடீ...!!!)

கக்கூஸ் கழுவ உதவுமாம்

கக்கூஸ் கழுவ உதவுமாம்

அதிகபட்சக் கொடுமையே, கோககோலா கக்கூஸ் பளிச்சிட செம்மையாக உதவுமாம். (பாஸ் இன்னுமா நீங்கள் தாகத்துக்கு தண்ணி குடிக்க ஆரம்பிக்கல??)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About Coca-Cola The Company Does NOT Want You To Know

Do you know about the Facts About Coca-Cola The Company Does NOT Want You To Know? read here.
Story first published: Friday, May 29, 2015, 16:46 [IST]
Subscribe Newsletter