உலகத்தில் உள்ள அமானுஷ்யம் நிறைந்த சில கல்லறைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

கல்லறையில் நுழைவது பாதுகாப்பானது என யார் சொன்னது? கல்லறைக்குள் நுழைந்து இறந்தவர்களுடன் பேசுவதெல்லாம் ஒரு காலத்தில் பாதுகாப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ, இதையெல்லாம் நீங்கள் செய்ய முயன்றால் உங்களுக்கு ஆவி பிடிக்கலாம்.

பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!

கிடைத்த தகவலின் படி, வழக்கத்திற்கு மாறான கல்லறைகள் 300-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இந்த உலகத்தை சுற்றியுள்ளது. இவைகளெல்லாம் பேய்களின் குடியிருப்புகளாக கருதப்படுகிறது. அனைத்து கல்லறைகளைப் பற்றி நம் பட்டியலில் சேர்க்க முடியாததால் அவற்றில் 10 கல்லறைகளைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!

உலகத்தில் அமானுஷ்யம் நிறைந்த கல்லறைகளில் பேய்களும் சாத்தான்களும் குடி கொண்டுள்ளன. மேலும் தொலைந்த ஆன்மாக்கள் வெளிச்சம் தேடி இந்த கல்லறைகளில் சுற்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஆன்மாக்கள் எல்லாம் கோபமாக இருப்பதாகவும், தங்கள் பழியை தீர்த்துக் கொள்ள உரிய நபரை கண்டு கொள்ளும் வரை ஓயாது என்றும் நம்பப்படுகிறது.

உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....

எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கல்லறைகள் எல்லாம் சுற்றுலா தளங்கள் அல்ல. ஆனால் இவ்வகையான அமானுஷ்யம் நிறைந்த கல்லறைக்கு நீங்கள் சென்றிருந்தால் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி சேஸ் வால்ட் (The Chase Vault)

தி சேஸ் வால்ட் (The Chase Vault)

பார்படோஸ் என்ற இடம் சேஸ் வால்ட்டிற்காக நன்றாக அறியப்படுபவை. அமானுஷ்யம் நிறைந்த இந்த கல்லறையில் சவப்பெட்டிகள் நகருமாம். நன்றாக சீல் செய்யப்பட்ட பெட்டகங்களை திறக்கும் போது அதனுள் உள்ள சவப்பெட்டி நகர்ந்து காணப்படுகிறது என ஒரு வல்லுநர் கூறியுள்ளார். எப்படி இந்த அமானுஷ்யம்?

Pic Courtesy

செயின்ட் லூயிஸ் கல்லறை (St. Louis Cemetery)

செயின்ட் லூயிஸ் கல்லறை (St. Louis Cemetery)

வூடு என்னும் பெண் பாதிரியாரின் ஆவியை சம்பந்தமே இல்லாத பல்வேறு நபர்கள் பல முறை பார்த்திருப்பதால், இந்த கல்லறை அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த கல்லறை முழுவதும் இந்த பெண் பாதிரியார் தன் மகளோடு இரவு நேரத்தில் உலா வருகிறார் என நம்பப்படுகிறது.

Pic Courtesy

காட்டாகோம்ப் டேய் கேப்புசின்னி (Catacombe dei Cappuccini)

காட்டாகோம்ப் டேய் கேப்புசின்னி (Catacombe dei Cappuccini)

காட்டாகோம்ப் டேய் கேப்புசின்னி என்றழைக்கப்படும் காட்டாகோம்ப் ஆப் தி கேப்புசின்ஸ் ஒரு சிறிய கல்லறையாகும். இது இத்தாலியில் உள்ள சிசிலியில், பலேர்மோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள நிலவறை சுவர்களில் நறுமணமூட்டி பாதுகாக்கப்பட்ட உடல்கள் உங்களை நோக்கிய படி அமைந்திருக்கும். அதனால் இது அமானுஷ்யம் நிறைந்த இடமாக கருதப்படுகிறது.

Pic Courtesy

ப்ரூக்வூட் கல்லறை (Brookwood Cemetery)

ப்ரூக்வூட் கல்லறை (Brookwood Cemetery)

அமானுஷ்யம் நிறைந்த இந்த கல்லறையை 'லண்டன் நெக்ரோபோலிஸ்' என்றும் அழைக்கின்றனர். காலம் கடந்து இங்கே செல்ல அறிவுறுத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் நடு ஜாம நேரத்தில் இறந்தவர்களின் ஓலம் இங்கே மிக சத்தமாக கேட்கப்படும்.

Pic Courtesy

காட்டாகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ் (Catacombs Of Paris)

காட்டாகோம்ப்ஸ் ஆஃப் பாரிஸ் (Catacombs Of Paris)

உலகத்தில் உள்ள கல்லறைகளில் காட்டாகோம்ப்ஸ் தான் மிக மோசமான அமானுஷ்யத்தைக் கொண்டுள்ளது. இந்த காட்டாகோம்ப்ஸில், நகரத்திற்கு கீழே உள்ள சுவர்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகளையும் இதர எலும்புகளையும் காணலாம். இங்கே 60 லட்சத்திற்கும் மேலான நபர்கள் புதைக்கப்பட்டிருப்பதால், இந்த இடம் அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படுகிறது.

Pic Courtesy

ஊஸுவரி செக் (Oossuary Czech)

ஊஸுவரி செக் (Oossuary Czech)

காட்டாகோம்ப்ஸில் உள்ள அமானுஷ்யத்தைப் பார்த்த நாம், ஊஸுவரியின் கதையைப் பற்றி பார்க்கலாமா? இறந்தவர்களின் எலும்புகளை கொண்டு பயங்கர அலங்காரத்துடன் கட்டப்பட்ட கிறிஸ்துவ ஆலயம் இது. சாமி கும்பிடுவதற்கு எப்படிப்பட்ட இடம் பார்த்தீர்களா?

Pic Courtesy

ரெகோலெடா கல்லறை (Recoleta Cemetery)

ரெகோலெடா கல்லறை (Recoleta Cemetery)

ப்யூனொஸ் ஏரீஸ் என்ற இடத்தில் உள்ள இந்த ரெகோலெடா கல்லறையை வெளியில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் கல்லறைக்குள் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இது அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படுகிறது. உயிருடன் புதைக்கப்பட்ட சிறிய பெண்ணான ருஃபினா கேம்பசெரெஸ் மற்றும் தற்கொலை செய்து கொண்ட இரவு காவலாளியான டேவிட் அல்லெனோவும் இங்கே தான் இன்றளவும் உள்ளனர்.

Pic Courtesy

அக்டுன் துனிசில் முக்னலிஸ் (Actun Tunichil Muknalis)

அக்டுன் துனிசில் முக்னலிஸ் (Actun Tunichil Muknalis)

குகை போன்ற இந்த கல்லறை பெலிஸ் என்ற இடத்தில் உள்ளது. உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் இங்கே சென்று பாருங்கள். அறைகள் முழுவதும் வீசப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மீது தான் இங்கே நடந்தே செல்ல முடியும். இங்கே 'கிறிஸ்டல் மேடனை' நீங்கள் கடந்து சென்றால், உங்களை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக கருதிக் கொள்ளுங்கள். இந்த எலும்பு பலி கொடுக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணுடையது ஆகும். கிறிஸ்டல் போன்ற தோற்றத்தை அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Pic Courtesy

 நியூ லக்கி ரெஸ்டாரண்ட் (New Lucky Restaurant)

நியூ லக்கி ரெஸ்டாரண்ட் (New Lucky Restaurant)

இந்தியாவில் நீங்கள் இதை போன்ற ஏதேனும் அனுபவிக்க வேண்டுமா? அப்படியானால் நியூ லக்கி ரெஸ்டாரண்ட்டுக்கு செல்லுங்கள். இங்கே பிணங்களுடன் நீங்கள் உணவருந்தலாம். காரணம் இந்த உணவகம் முழுவதும் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளை காணலாம். இன்னொன்று, இவையாவும் அசல்.

Pic Courtesy

பழைய யூதர் கல்லறை (Old Jewish Cemetery)

பழைய யூதர் கல்லறை (Old Jewish Cemetery)

பழைய யூதர் கல்லறை ப்ரேக்கில் உள்ளது. இந்த கல்லறையில் மொத்தம் 1 லட்சம் உடல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கே ஒரு சவத்தின் மேல் அடுக்குகளாக மற்ற சவங்கள் புதைக்கப்பட்டிருப்பதால், இந்த இடம் அமானுஷ்யம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இப்படி இருக்கையில் யாரால் தான் இறந்த பின் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும்.

Pic Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Creepiest Burial Grounds In The World

According to sources, in total there are more than 300 odd burial grounds in the world which are haunted and creepy to look at.
Subscribe Newsletter