இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள்!!!

By: John
Subscribe to Boldsky

1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள், அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் பீ. இரா. அம்பேத்கர் (தலைமை), கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில அரிய தகவல்கள்!!!

இவர்கள் வகுத்த சட்டத்திட்ட புத்தகம், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 1950 ஆம் ஆண்டு முறைப்படி இந்தியாவின் சட்டப்புத்தகமாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இந்தியாவின் முதன்முதல் குடியரசு தலைவராக இராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இனி, இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்....

இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியானப் புராணக் கதைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கையால் எழுதப்பட்டது

கையால் எழுதப்பட்டது

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கையால் எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிப்புகளும் ஹீலியம் நிரப்பப்பட்ட பைகளில் மிக பத்திரமாக பாராளுமன்றத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மிகப்பெரிய சட்டப்புத்தகம்

இரண்டாவது மிகப்பெரிய சட்டப்புத்தகம்

உலகிலேயே இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் இரண்டாவது பெரிய சட்டப்புத்தகம் ஆகும். முதல் இடத்தில், அயர்லாந்து சட்டப்புத்தகம் இருக்கிறது.

நல்ல சகுனம்

நல்ல சகுனம்

இந்திய சட்டப்புத்தகம் கையெழுத்தான பொழுது மழை பொழிந்ததாம். அன்றைய தினம், இதை நல்ல சகுனமாகக் கருதி அனைவரும் மகிழ்ந்தனர்.

ஏறத்தாழ மூன்று வருடங்கள்

ஏறத்தாழ மூன்று வருடங்கள்

இந்திய சட்டப்புத்தகத்தை எழுதி முடிக்க, ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகின. சரியாக கூறினால், இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினேழு நாட்கள்.

உலகின் சிறந்த சட்டப்புத்தகம்

உலகின் சிறந்த சட்டப்புத்தகம்

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் சிறந்தது என்று ஒருமனதாகக் கூறப்பட்டிருக்கிறது.

284 கையொப்பங்கள்

284 கையொப்பங்கள்

ஜனவரி 24,1950 ஆம் நாள் 284 நபர்களால் கைய்யொப்பமிடப்பட்டு அங்கீகரித்து, பின் இரண்டு நாள் கழித்து நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசின் சட்டப்புத்தகம்.

பிரிட்டிஷ்ஷை தழுவியது

பிரிட்டிஷ்ஷை தழுவியது

இந்தியாவின் சட்டப்புத்தகமும், பிரிட்டிஷின் சட்டப்புத்தகமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. ஏனெனில், நமது சட்டப்புத்தகம் அவர்களுடையதை தழுவி எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Story first published: Monday, May 25, 2015, 16:08 [IST]
Subscribe Newsletter