For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: காந்தாரிக்கு உண்மையிலேயே 101 குழந்தைகள் இருந்தார்களா?

By Ashok CR
|

மகாபாரதம் ஒரு புதிரான பழங்கால காவியமாகும். அதனை ஆழமாக படிக்க முற்படும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கும். கண்டிப்பாக நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க கூடிய அப்படி ஒரு மர்மம் இருக்கிறது. அதைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் கண்டிப்பாக அந்த காவியத்தில் வரும் சம்பவங்களை மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்திருப்போம். அது நடந்திருப்பதற்கான சாத்தியங்களையும் நாம் யோசித்திருந்திருப்போம். இந்த காவியத்தைப் படித்து முடித்தவுடன் இயற்கையாகவே நமக்கு தோன்றும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்க முடியும் - காந்தாரிக்கு உண்மையிலேயே 101 குழந்தைகள் இருந்ததா?

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

பாண்டவர்கள் என்பது ஐந்து சகோதரர்கள் என்றும், அதில் மூவர் குந்தி தேவிக்கும் மற்ற இருவர் பாண்டு அரசரின் இரண்டாவது ராணியான மாதுரிக்கும் பிறந்தவர்கள் என மகாபாரதம் கூறுகிறது. இருப்பினும் கௌரவர்கள் கதைக்கு வரும் போது, அவர்கள் மொத்தமாக 100 சகோதரர்கள் மற்றும் 1 சகோதரி ஆவார்கள். இந்த தகவலை ஜீரணிக்க தான் சற்று கடினமாக இருக்கும்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

இயற்கையின் சட்டப்படி பார்த்தால், ஒரு குழந்தையை பெற்றெடுக்க தோராயமாக 9 மாதங்கள் தேவைப்படும். அதனால் ஒரு பிரசவத்திற்கு ஒரு குழந்தை என வைத்துக் கொண்டாலும், 100-ஆவது குழந்தையை பெற்றெடுக்கும் போது அவரின் முதல் குழந்தைக்கு 75 வயதாகியிருக்கும். இதனால் 101-ஆவது குழந்தையை பெற்றெடுக்கும் போது காந்தாரிக்கு வயது என்னவாக இருக்கும் என நம்மை வியப்புக்குள்ளாக்கும். அவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் அல்லது 3 பிள்ளைகள் அல்லது 2 பிள்ளைகளாக பெற்றெடுத்திருந்தாலும் கூட, மகாபாரதம் போர் முடிவடைந்த வேளையில், கண்டிப்பாக அவர் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் ஒரே மூச்சாக 101 குழந்தையையும் பெற்றெடுப்பது என்பது முடியாத காரியமாகும். அப்படியே ஆனாலும் கூட அனைத்து குழந்தைகளும் உயிருடன் பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா?

மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர் பற்றி தெரியுமா?

பின்னே இது எப்படி நடந்தது? கௌரவர்கள் 100 பேர் என்ற கதை வெறும் கட்டுக்கதையா அல்லது ஏதேனும் அதிசயமா அல்லது நமக்கு தெரியாத ஏதேனும் மேம்பட்ட தொழில்நுட்பமா? காந்தாரியின் 101 குழந்தைகள் பற்றி மகாபாரதம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியாசரின் வரம்

வியாசரின் வரம்

காந்தாரியின் சேவையால், மகாபாரதத்தை எழுதிய மகரிஷி வியாசர் குளிர்ந்த காரணத்தினால், ஒரு முறை அவருக்கு வரம் ஒன்றினை அளித்தார். அதன் படி அவர் 100 மகன்களை பெற்றெடுப்பார். அக்காலத்தில் இம்மாதிரியான வரங்களை அளிப்பது எல்லாம் உணர்ச்சியின் வெளிப்பாடே. இருப்பினும் இந்த வரம் '100 மகன்கள்' என்பதையே குறித்தது.

காந்தாரியின் வெறுப்புணர்வு

காந்தாரியின் வெறுப்புணர்வு

குரு ராஜ்யத்தின் மூத்த மகனான திருதராஷ்டிரனை திருமணம் செய்து கொண்டார் காந்தாரி. ஆனால் அவர் சிறு வயது முதலேயே கண் பார்வை அற்றவர் என்பதால், அவரின் தம்பியான பாண்டுவிடம் ராஜ்ஜியம் சென்றடைந்தது. திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் இது வெறுப்பை ஏற்படுத்தியது. அதனால் பாண்டு-குந்தி தேவிக்கு முன் ஆண் பிள்ளையை முதலில் பெற்றெடுக்க வேண்டும் என விரும்பினர். இதனால் அந்நாட்டின் அரசராக தங்கள் மகனுக்கு முடி சூட்டி விடலாம் என நினைத்தனர்.

காந்தாரியின் வெறுப்புணர்வு

காந்தாரியின் வெறுப்புணர்வு

குந்தி தேவிக்கு முன் கர்ப்பமானதை எண்ணி காந்தாரி மகிழ்ச்சியடைந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக தான் கண்ட கனவு எல்லாம் பாழாய் போனது. இரண்டு வருடங்களாக காந்தாரியால் குழந்தையை பிரசவிக்க முடியவில்லை. மறுபுறம், பாண்டுவுடன் காட்டிற்கு பயணம் கொண்டிருந்த போது, தன் முதல் மகனை பெற்றெடுத்தார் குந்தி தேவி. இதன் காரணமாக மிகுந்த வெறுப்புணர்ச்சிக்கு ஆளான காந்தாரி, கருவில் இருந்த தன் சிசுவை அடிக்க ஆரம்பித்தார்.

தசைகளின் குவியல்

தசைகளின் குவியல்

வெறிகொண்டு அடித்த காரணத்தினால், தசைகளின் குவியலை தான் காந்தாரி பெற்றெடுத்தார். இந்த தருணத்தில் மகரிஷி வியாசர் உடனடியாக அழைக்கப்பட்டார். அவர் உடனடியாக நெய்களுடன் கூடிய நூறு ஜாடிகளை அடுக்க சொன்னார். தனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என இந்நேரத்தில் தன் விருப்பத்தை தெரிவித்தார் காந்தாரி. ஜாடிகள் வந்தவுடன், இந்த தசைகளை நூற்றி ஒன்று பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு ஜாடியில் வைத்தார் வியாசர். அவைகளை மூடி விடும் படி கூறினார். சீக்கிரமே 100 மகன்களுக்கும், 1 மகளுக்கும் (துஷாலா) தாயானார் காந்தாரி.

அதிசயமா அல்லது மேம்பட்ட அறிவியலா?

அதிசயமா அல்லது மேம்பட்ட அறிவியலா?

இந்த அதிசய பிறப்பைப் பற்றி பலரும் பலவித கோட்பாடுகளை கொண்டு வந்தனர். ஆனால் அதில் சில மட்டுமே பொருந்திய வகையில் இருந்தது. அதில் ஒரு பரிந்துரை தான் ஆய்வுக்கூடச் சோதனை முறையில் கருத்தரிப்பது (IVF). குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இது தற்போது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. வியாசருக்கு சில மேம்பட்ட தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது என இந்த ஆய்வுகள் கூறுகிறது. அதன் படி, செயற்கை முறையில் கருக்களை ஜாடியில் போட்டு, அது குழந்தைகளாக வளர முறையான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இருப்பினும் அக்காலத்தில் இது சாத்தியமா என பல விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.

அதிசயமா அல்லது மேம்பட்ட அறிவியலா?

அதிசயமா அல்லது மேம்பட்ட அறிவியலா?

மற்றொரு கோட்பாடு இப்படி கூறுகிறது - இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர் (துரியோதனன் மற்றும் துச்சாதனன்). 100 மகன்களில் இந்த இருவரைப் பற்றி தான் மகாபாராதம் முழுவதும் பேசப்படுகிறது. இருப்பினும் விகர்ணா மற்றும் யுயுட்சு ஆகியவர்களைப் பற்றியும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவர்கள் கௌரவர்கள் என்றாலும் கூட பாண்டவர்களின் குணங்களையும், உணர்வுகளையும் கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதனால் இந்த கோட்பாட்டையும் முழுவதுமாக ஒப்புக் கொள்ள முடியாது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shocking Facts: Did Gandhari Really Have 101 Children?

Let us see what the epic has to say about Gandhari's 101 children. After reading the epic, the first question which is natural to strike anyone is whether Gandhari really had 101 children?
Desktop Bottom Promotion