பேரை கேட்டாலே வாந்தி எடுக்க வைக்கும் விசித்திரமான ஐஸ்க்ரீம் ப்ளேவர்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

அனைவருக்குமே ஐஸ்க்ரீம் என்றால் பிடிக்கும். அதுமட்டுமின்றி, எப்போது ட்ரீட் என்றாலும் முதலில் பெரும்பாலானோர் சொல்வது ஐஸ்க்ரீம் தான். இத்தகைய ஐஸ்க்ரீம் பிரியர்கள் அனைத்து விதமான ஐஸ்க்ரீம்களையும் சுவைத்திருப்பார்கள். இருப்பினும் உலகில் உள்ள ஒருசில ஐஸ்க்ரீம் ப்ளேவர்களை சுவைத்திருக்கமாட்டார்கள்.

ஆனால் அத்தகையவர்கள் உலகில் உள்ள சில ஐஸ்க்ரீம் ப்ளேவர்களின் பெயர்களைக் கேட்டாலே வாந்தி எடுத்துவிடுவார்கள். ஏனெனில் அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வெரைட்டியில் வித்தியாசமான ஐஸ்க்ரீம் ப்ளேவர்களானது உலகின் சில பகுதிகளில் விற்கப்படுகின்றன. இவற்றில் சில வித்தியாசமாக இருந்தாலும், சில நினைத்துப் பார்க்க முடியாத ப்ளேவர்களாக இருக்கும். இங்கு அப்படி உலகில் உள்ள வித்தியாசமான ஐஸ்க்ரீம் ப்ளேவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து முடிந்தால் சுவைத்தும் பார்த்துவிடுங்கள்.

பன்றிக்கறி டாப்பிங்

உங்களுக்கு பன்றிக்கறி பிடிக்குமானால், இந்த ப்ளேவர் மிகவும் பிடிக்கும். அதிலும் சில இடங்களில் வென்னிலா ஐஸ்க்ரீம்மின் மேல் பன்றிக்கறியை டாப்பிங் போன்று தூவிக் கொடுப்பார்கள்.

ஸ்குவிட் டாப்பிங் (ஒருவித கடல் மீன்)

ஸ்குவிட் என்பது ஒருவித கடல் மீன். இந்த மீன் பலருக்கு பிடிக்காது. இருப்பினும் இந்த மீனின் இறைச்சியை டாப்பிங் போன்று ஐஸ்க்ரீம்மில் தூவி, சாக்லெட்டில் டிப் செய்து கொடுப்பார்கள்.

ஆக்டோபஸ் கரங்கள்

இது மற்றொரு மோசமான ஐஸ்க்ரீம் டாப்பிங் ப்ளேவர். இந்த டாப்பிங்கானது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமில் சேர்த்து கொடுக்கப்படும். இதுவும் உலகில் உள்ள வித்தியாசமான ஐஸ்க்ரீம் ப்ளேவரில் ஒன்று.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு டாப்பிங்

சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கூட உலகில் சில பகுதிகளில் டாப்பிங்காக பயன்படுத்துகிறார்கள். அதற்கு இதனை நன்கு வேக வைத்து மசித்து, ஐஸ்க்ரீம் உடன் சேர்த்து கலந்து ப்ரிட்ஜில் வைத்து கொடுக்கப்படும். இதுவும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

விலாங்கு மீன் டாப்பிங்

ஐஸ்க்ரீம்மில் மீனை சேர்த்தாலே கேவலமாக இருக்கும். அதிலும் பாம்பு போன்று இருக்கும் விலாங்கு மீன வேக வைத்து, அதனை ஐஸ்க்ரீம்மின் மேல் தூவிக் கொடுப்பார்கள்.

நூடுல்ஸ் ஐஸ்க்ரீம்

6 Weirdest Ice Cream Flavours

நூடுல்ஸ் ஐஸ்க்ரீம்மானது காரமாக இருக்கும்.  இந்த ஐஸ்க்ரீம்மின் ஸ்பெஷல் மொறுமொறுவென்று இருக்கும் நூடுல்ஸை ஸ்க்ரீம்மின் மேல் தூவி, அதன் மேல் சில்லி சாஸ் சேர்த்து கொடுப்பார்கள்.

English summary

6 Weirdest Ice Cream Flavours

Do you like ice cream? If you take a look at these weirdest ice cream flavours, you will surely won't be able to resist this dessert.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter