For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

22 வயதில் தன் உயிரை கொடுத்து தன் பயணிகளை காப்பாற்றிய இந்தியாவின் உண்மையான சிங்கப்பெண் யார் தெரியுமா?

|

இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையே இங்கு தகுதியானவர்களுக்கு பதவியும் கிடைப்பதில்லை, அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இதில் அரசியல்வாதிகள் மீது மட்டும் தவறல்ல பொதுமக்களாகிய நம் மீதும் தவறு உள்ளது. இங்கு மக்களுக்காக தியாகம் செய்தவர்கள், உயிரையே கொடுத்து மக்களைக் காப்பாற்றியவர்கள் போன்றவர்களை பெரும்பாலும் மக்கள் மறந்து விடுகின்றனர்.

மக்களின் மறதியால் மறைந்து போன ஒரு இளம் வீராங்கனைதான் நீர்ஜா பானட். இவர் விளையாட்டு வீராங்கனை அல்ல, தன்னுடைய 23 வது வயதில் மக்களை காப்பாற்றுவதற்காக தன் உயிரை தீவிரவாதிகளிடம் பறிகொடுத்த நிஜ வீராங்கனை ஆவார். இவரைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்றால் மிகவும் சொற்பமானவர்கள் மட்டுமே கையை உயர்த்துவார்கள். இவரைப் பற்றிய திரைப்படம் வந்ததால் மட்டுமே அந்த சொற்ப நபர்களும் இவரை அறிவர், இல்லையெனில் இந்தியா மறந்த எத்தனையோ உண்மையான தியாகிகளின் பட்டியலில் இவரும் இருந்திருப்பார். இந்த பதிவில் நீர்ஜா பானட் யார் அவரின் மரணம் எப்படி மற்றவர்களை காப்பாற்றியது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நீர்ஜா பனோட்

நீர்ஜா பனோட்

Pan Am 73 விமானத்தில் மூத்த விமான உதவியாளராக நீர்ஜா பானட் இருந்தார். அவர் விமானத்தில் இருந்த பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது விலைமதிப்பற்ற உயிரைத் தியாகம் செய்தார். இந்த உன்னதமான காரணத்திற்காக இவர் தனது 23 வது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் தனது உயிரை விட்டார்.

 நீர்ஜா பானட் எப்படி இறந்தார்?

நீர்ஜா பானட் எப்படி இறந்தார்?

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், நீர்ஜா உட்பட பலர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர், அதே நேரத்தில் இவரின் வீரமான செயலால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இரக்கமும் பொறுப்புணர்வு உணர்வும் கொண்ட இந்த செயல் வெறும் 22 வயதுடைய ஒரு இளம் பெண்ணுக்கு சாதாரணமானது அல்ல. அவரின் இதயத்தில் கோழைத்தனமும், சுயநலமும் கொஞ்சமும் இல்லை.

 Pan Am 73 விமானம்

Pan Am 73 விமானம்

செப்டம்பர் 5, 1986 இன் இனிமையான காலையில், Pan Am 73 விமானம் மும்பையிலிருந்து வானத்தை நோக்கி நியூயார்க்கிற்குப் பயணித்தது. கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், இந்தியர்கள், ஜேர்மனியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் சில தேசிய இனங்களை உள்ளடக்கிய பயணிகளுக்கு தங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி தெரியாமல் இருந்தனர். அதிர்ச்சியூட்டும் வகையில் டார்மாக்கில் நிறுத்தப்பட்டிருந்தபோது விமானம் கடத்தப்பட்டது.

MOST READ:இந்த ராசிக்காரங்க பண்றதெல்லாமே பொய் சத்தியம்தானாம்.. தெரியாம கூட இவங்கள நம்பிராதீங்க...!

எப்படி கடத்தப்பட்டது?

எப்படி கடத்தப்பட்டது?

விமான நிலைய பாதுகாப்பு காவலர்களின் சீருடையில் அணிந்திருந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நான்கு பேர் விமானத்தின் உள்ளே நுழைந்தனர் மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டை எடுக்க தானியங்கி துப்பாக்கிகள் மூலம் கண்மூடித்தனமாக சுட்டனர். பயணிகள் விமானத்திற்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் பயத்தில் அலறினர்.

நீர்ஜாவின் தைரியம்

நீர்ஜாவின் தைரியம்

பயங்கரவாதிகளை பார்த்ததும் நீர்ஜா சமயோசிதமாக செயல்பட்டார். காக்பிட்டில் ஒரு மேல்நிலை ஹட்ச் வழியாக விமானத்திலிருந்து தப்பிய காக்பிட் குழுவினரை அவர் உடனடியாக எச்சரித்தார். அதன்பிறகு நீர்ஜாதான் விமானத்தில் இருந்த மூத்த உதவியாளராக இருந்தார். பயங்கரவாதிகளில் ஒருவர் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட்டையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறினார்.

 நீர்ஜாவின் சமயோசித புத்தி

நீர்ஜாவின் சமயோசித புத்தி

பயங்கரவாதிகள் முதன்மையாக அமெரிக்க பயணிகளை குறிவைக்கிறார்கள் என்பதை நீர்ஜாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகையால், அவர் அவர்களுடைய பாஸ்போர்ட்களை எடுத்து, யாரும் பாரக்காத நேரத்தில் குப்பைத் தொட்டியில் போட்டார். அவரது புத்திசாலித்தனமான நடவடிக்கை காரணமாக, மொத்தம் 41 அமெரிக்க பயணிகளில், 2 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.

MOST READ:இந்திய வரலாற்றின் முக்கிய காதல் கதையான ஜோதா-அக்பரில் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?

 நீர்ஜாவின் சிந்தனை

நீர்ஜாவின் சிந்தனை

பயங்கரவாதிகள் பயணிகளையும் பணியாளர்களையும் சுமார் 17 மணி நேரம் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். விமானத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளைப் பற்றி நீர்ஜா ஒருபோதும் சிந்திக்கவில்லை, அவர் நினைத்திருந்தால் எளிதில் தப்பித்து இருக்க முடியும். பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்கான வழியை அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

 நீர்ஜாவின் தியாகம்

நீர்ஜாவின் தியாகம்

பயணிகளை அவசர வழி வழியாக வெளியேறி தப்பிக்க வைத்துக்கொண்டிருந்த போது நீர்ஜா தீவிரவாதிகளால் சுடப்பட்டார். மூன்று குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தீவிரவாதிகளின் துப்பாக்கியில் இருந்து அவர்களை நோக்கி வந்த தோட்டாக்களை தன் உடலில் வாங்கிக்கொண்டார்.

 நீர்ஜாவின் நினைவுகள்

நீர்ஜாவின் நினைவுகள்

இரண்டு அண்ணன்களைக் கொண்ட நீர்ஜாதான் அவர்கள் குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை ஆவார். குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையை விரும்பிய தனது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற 1962 செப்டம்பர் 7 ஆம் தேதி பிறந்தார். இயற்கையாகவே எப்போதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நினைக்கும் குணம் கொண்டவராக நீர்ஜா இருந்ததாக அவரின் பெற்றோர்கள் கூறினார்கள்.

MOST READ:தனது மரணத்தை முன்கூட்டியே கனவில் பார்த்த அமெரிக்க ஜனாதிபதி...தீர்க்கதரிச கனவு என்றால் என்ன தெரியுமா?

நீர்ஜாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள்

நீர்ஜாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள்

அவரின் பிறந்த நாளுக்கு சில மணி நேரத்திற்கு முன்தான் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் வீரச்செயலுக்காகவும், தியாகத்திற்காகவும் அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. மிகச்சிறிய வயதில் அசோக் சக்ரா விருது பெற்றது இவர்தான். மும்பையின் காட்கோபரில் இவரது நினைவில்லம் கட்டப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Who Was Neerja Bhanot and How Did She Die

Read to know who was Neerja Bhanot and how did she die.
Story first published: Thursday, March 12, 2020, 13:10 [IST]