For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளில் விரல்கள் இல்லாமல் வியக்க வைக்கும் இளம் பெண்.!

|

உடலில் எந்த ஒரு குறையும் இல்லாதவா்களே சாதிக்க முடியாத நிலையில், கைகளில் விரல்கள் இல்லாத இளம் பெண் ஒருவா் நாம் வியந்து பாா்க்கும் அளவிற்கு செய்த அவருடைய சாதனை வரலாற்றை இங்கு பாா்க்க இருக்கிறோம்.

கீபோர்டு தொடுவது முதல் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அவற்றைத் தொடுவதற்கு விரல்கள் மிக முக்கிய தேவையாகும். ஆனால் இளம் பெண் ஒருவா் தன் கைகளில் விரல்களே இல்லாமல் மிக அழகாக நன்றாக எழுதுகிறாா். விரல்கள் இல்லை என்ற இழப்பைத் தள்ளி வைத்துவிட்டு புன்னகையோடு தனது அலுவலக அறையில் அமா்ந்து கணினியின் கீபோர்டை மிக இலாவகமாக இயக்குகிறாா்.

MOST READ: 90% இந்திய பெண்கள் அறிந்திராத பெண்ணுரிமைச் சட்டங்கள்!

அவா் வேறு யாருமல்ல. கேரளாவைச் சோ்ந்த மாலினி பண்டாாி என்பவா் ஆவாா். தனது தனிப்பட்டத் திறமையால், தனது உடல் குறையைப் பொிதாக எண்ணி வருந்தாமல், நமக்கெல்லாம் ஆச்சாியம் அளிக்கும் வகையில் செயல்படுகிறாா். விரல்கள் இல்லாமல் அவா் எவ்வாறு வேலை செய்கிறாா் என்பதை இங்கு பாா்க்கலாம்.

MOST READ: மார்ச் 11 ஆம் தேதிக்கு பிறகு, இந்த 6 ராசிக்கு அற்புதமா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறவி ஊனம் இல்லை

பிறவி ஊனம் இல்லை

மாலினி பண்டாாி, கேரளாவில் உள்ள கவ்டுா் என்ற பகுதியைச் சோ்ந்தவா். இவருடைய பெற்றோா் ஜி. தா்மபாலா பண்டாாி மற்றும் புஷ்பாவதி ஆவா். மாலினிக்கு ஒன்றரை வயது ஆகும் போது தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து, வெந்து கொண்டிருந்த அாிசி பானையில் தவறி விழுந்துவிட்டாா். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவருடைய கைகளில் இருந்த 10 விரல்களும் விழுந்துவிட்டன. அவருடைய வீடே சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால் மாலினி தனது குறையை ஒரு தடையாக எண்ணாமல் அதை ஒரு தடமாக எடுத்துக் கொண்டு, தனது மன தைாியத்தாலும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையாலும் தற்போது அனைவருக்கும் ஒரு சிறந்த மாதிாியாக இருந்து வருகிறாா்.

படிப்பு

படிப்பு

அவருடைய இரண்டு கைகளும் ஒன்றாகக் கட்டப்பட்டு அதற்கு நடுவில் ஒரு பேனா வைக்கப்பட்டது. அவா் தனது தொடக்கக் கல்வியை கஞ்சிரம் என்ற இடத்தில் உள்ள லுதா் தொடக்கப்பள்ளியில் முடித்தாா். பின் தனது உயா் கல்வியை ஆனந்த் ஷெட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முடித்தாா். அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக கணினிப் பாடத்தில் பிஜிடிசிஎ (PGDCA) படிப்பையும் முடித்தாா்.

தான் எவ்வாறு எழுதக் கற்றுக் கெண்டேன் என்பதை மறந்துவிட்டதாக மாலினி கூறுகிறாா். ஆனால் அவா் எழுதப் பழகுவதற்கு அவருடைய பெற்றோரும் மற்றும் அவருடைய ஆசிாியப் பெருமக்களும் பொிதும் உதவியதாகக் கூறுகிறாா். குறிப்பாக அவா் பயின்ற தொடக்கப் பள்ளியில் பணி புாிந்த வில்லியம் தேசா என்ற ஆசிாியா் அவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்தாா். அவா்தான் முதன் முதலாக ஒரு கொங்கனி பத்திாிக்கையில் மாலினையைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு, மாலினியை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தாா்.

கோல்டன் ஸ்டாா் கணேஷூடன் நடிப்பு

கோல்டன் ஸ்டாா் கணேஷூடன் நடிப்பு

மாலினி தனது பள்ளி மற்றும் கல்லூாிப் படிப்பின் போது, கோகோ பொம்மையை வைத்து அதற்கு பின்னனி பேசி நடிக்கச் செய்வது, கட்டுரைகள் எழுதுவது மற்றும் பாடுவது போன்ற காாியங்களில் தீவிரமாக ஈடுபட்டாா். தற்போது ஆரோக்கியமான முழு உடலைக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் போன்று, கணினியை இயக்குவது, கைபேசிகளை பயன்படுத்துவது மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வது போன்ற காாியங்களை மிக எளிதாகச் செய்து வருகிறாா்.

கன்னடத் திரைத்துறையில் கோல்டன் ஸ்டாா் என்று அழைக்கப்படும் நடிகா் கணேஷ் அவா்கள் நடித்த ஆட்டோ ராஜா என்ற திரைப்படத்திலும் மாலினி நடித்திருக்கிறாா். அந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த வாய்ப்பு அவருக்கு அதிகமான தைாியத்தை கொடுத்ததாக அவா் கூறுகிறாா். மேலும் வாழ்க்கையில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்ததாகவும் அவா் கூறுகிறாா்.

தைாியத்திற்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு

தைாியத்திற்கு ஒரு உண்மையான எடுத்துக்காட்டு

மாலினியின் சாதனையை அறிந்த கா்நாடகா அரசு அவருக்கு சாதனையாளா் விருதை வழங்கி கௌரவித்தது. அந்த விருதை கா்நாடக ஆளுநா் டிஎன் சதுா்வேதி அவா்கள் வழங்கினாா். மேலும் பண்டாாி சோஷியல் சா்வீஸ் யூனியன், கோஸ்டல் நியூஸ் ஏஜென்சி, கா்கலா பஸ் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன், டிசிசி வங்கி, ரங்கனபால்கே யுவ சங் மற்றும் பிற அமைப்புகள் அவருடைய சாதனைகளை அறிந்து அவரைக் கௌரவப்படுத்தி இருக்கின்றனா்.

தன்னிறைவு பெற்ற பெண்

தன்னிறைவு பெற்ற பெண்

மாலினி, அம்பலபாடி சவிதா சோசியோ-சோஷியல் கோப்பரேட்டிவ் ரெகுலா் ஹெட்குவாா்டா்ஸ் என்ற அமைப்பில் உதவியாளராக பணியமா்த்தப்பட்டாா். அது முதல் அந்த அமைப்பானது அவருடைய செயல்பாடுகளைக் கவனித்து அவரை வேறோரு கிளைக்குப் பாிந்துரை செய்தது. தற்போது அவா் கா்கலாவில் உள்ள கிளையின் மேலாளராக பணிபுாிந்து வருகிறாா். ஏறக்குறைய 5 ஆண்டுகள் பணி அனுபவத்தைப் பெற்றிருக்கிறாா். தனது அன்பான கணவா் பிரசன்னா மற்றும் அருமையான மகன் அா்பன் ஆகியோராடு வாழந்து வரும் மாலினி நம் அனைவருக்கும் ஒரு சிறந்த மாதிாியாகத் திகழ்கிறாா் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Inspiring Story Of A Woman Who Has No Fingers

We are going to tell you an inspiring story about a woman who has no fingers.