பார்க்க நேற்று இறந்தவர் போல இருக்கும் 2000 ஆண்டு பழைய மம்மி - சீனர்களின் அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky
Things To Know About 2000 Years Old Chinese Women Preserved Mummy Xin Zhui!

ஜின் சூய் இறந்தது 16 BCயில். இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது 1971ல். ஏறத்தாழ 2000 ஆண்டுகள் கழிந்திருந்த நிலையிலும் ஜின் சூயின் முடி அப்படியே இருந்தது, அவரது சருமம் ஓர் இளம் பெண்ணின் சருமத்தை போல மிருதுவாக இருந்தது. இரத்த நாளங்கள் அதே நிலையில் இருந்தன. இரத்த பரிசோதனை செய்த போது, ஜின் சூயின் இரத்தப்பிரிவு A க்ரூப் என்பது அறிய வந்தது.

ஜின் சூய் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிறது. இவரை லேடி தய் (Lady Dai)என்றும் அழைத்து வந்துள்ளனர். இவரது உடல் கெட்டுப் போகாமல் இருக்க மம்மி போல பதப்படுத்தி வைத்திருந்தனர். இவர் சீனாவின் பழமை வாய்ந்த ஹான் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்தவர் என்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறந்த மம்மி!

சிறந்த மம்மி!

இவர் 206 BC - 220 ADக்கு இடைப்படக் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இவரது முடி, சருமம், இரத்த நாளம், தசை நார்கள் எல்லாம் உயிருடன் வாழ்ந்து வரும் நபரின் உடலில் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்கிறது. எனவே, உலக வரலாற்றில் பதப்படுத்தி வைக்கப்பட்ட சிறந்த மம்மி ஜின் சூய் என கருதப்படுகிறது.

Image Courtesy: David Schroeter/Flickr

1971!

1971!

ஜின் சூயின் உடலை 1971ல் தான் கண்டெடுத்தனர். சாங்க்ஷா எனும் இடத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு புனல் போன்ற இவரது நிலவறையில் ஆயிரக்கணக்கான கலைப் பொருட்கள் இருந்தன. அதில் அலங்காரப் பொருட்கள், கழிவறை பயன்பாட்டு பொருட்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மரத்திலான ஆபரணங்கள் மற்றும் 162 செதுக்கப்பட்ட உருவங்கள் போன்றவை இவரது நிலவறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

Image Courtesy: Wikimedia Commons

கடைசியாக உண்ட உணவு...

கடைசியாக உண்ட உணவு...

இவற்றுக்கு எல்லாம் மேலாக வியப்படைய செய்யும் விஷயம் என்னவெனில், ஜின் சூய் இறப்பதற்கு முன் கடைசியாக சாப்பிட்ட உணவு செரிக்காமல், அப்படியே அவரது உடலுக்குள் இருந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கும் படியாக எப்படி இவர்கள் பதப்படுத்தி வைத்தனர் என்பது இன்றுவரையிலும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

முக்கியமாக ஜின் சூயின் உடல் பரமாரிப்பு அப்படியே இருக்கிறது என ஆய்வாளர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.

தோண்டி எடுத்தப்போது...

தோண்டி எடுத்தப்போது...

ஜின் சூயின் உடலை தோண்டி எடுத்தப்போது, அவரது உடல் சருமமானது, உயிருடன் வாழும் ஒரு பெண்ணின் சருமம் எப்படி இருக்குமோ, அதே நிலையில் இருந்தது. ஈரப்பதம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை (Moisture and Elasticity) போன்றவை அப்படியே இருந்தன.

மேலும், ஜின் சூயின் உண்மை கூந்தலும் அங்கே கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவரது உடலில் இமை முடி, புருவம், மற்றும் மூக்கு பகுதிகளுக்குள் இருக்கும் முடிகள் அப்படியே இருந்ததாகஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

பிரேத பரிசோதனை!

பிரேத பரிசோதனை!

மேலும், ஆராய்ச்சியாளர்கள், ஜின் சூயின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்க்க முற்பட்டனர். அப்போது தான் அவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவராக இருக்கலாம் என்றும், அவர் 163 BCயில் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் கிடைத்தன. ஆனால், ஜின் சூயின் உடலானது சமீபத்தில் இறந்த நபரின் உடல் எப்படி இருக்குமோ, அந்நிலையில் தான் இருந்தது.

ஆக்ஸிஜன்!

ஆக்ஸிஜன்!

பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஜின் சூயின் உடல், வெளிஎடுக்கப்பட்ட பிறகு, ஆக்ஸிஜன் பட்ட சில நேரத்திலேயே மோசமடைய துவங்கியது. இதனால், பதப்பாடுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் எப்படி இருந்தது என்பது ஆய்வாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகள்!

மேலும், ஜின் சூய் உடல் பற்றி ஆய்வாளர்கள் கூறிய தகவலில், அவரது இரத்தப் பிரிவு A க்ரூப் என்றும், அவரது உடலில் இருந்த பாகங்கள் எல்லாம் அப்படியே கெடாமல் இருந்தன என்றும் கூறி இருந்தனர். மேலும், ஜின் சூயின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று அவர்கள் அறிந்தனர். அவரது இரத்த நாளங்களில் இருந்த அடைப்புகளை வைத்து, ஜின் சூயின் மரணம் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கணித்துள்ளனர்.

உடல்நிலை!

உடல்நிலை!

இரத்த நாளங்களில் அடைப்பு, பித்தப்பைக் கற்கள், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை ஜின் சூயிக்கு இருந்திருக்க கூடும் என, பிரத பரிசோதனைக்கு பிறகு ஆய்வாளர்கள் கூறினார்கள்.

மேலும், பிரேத பரிசோதனை செய்திருந்த போது, சூயின் உடலில் வயிறு மற்றும் குடலில் செரிக்காத நிலையில் 138 மெலன் விதைகள் இருந்தன என்றும் கண்டறிந்தனர்.

மரணம்?

மரணம்?

பொதுவாக இந்த விதைகள் செரிக்க ஒரு மணி நேரமாவது ஆகும். இவர் சாப்பிட்ட கடைசி உணவாக இதுதான் இருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர் இந்த மெலன் விதைகளை உண்ட சில நிமிடங்களில் மாரடைப்புக் காரணமாக இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

40 அடி!

40 அடி!

ஜின் சூயின் உடலானது பூமியில் இருந்து நாற்பது அடி கீழே புதைக்கப்பட்டிருந்தது. இவரது உடலை இருபது லேயர் சில்க் துணியால் சுற்றியிருந்தனர். அது ஏறத்தாழ 80 லிட்டர் தண்ணீரில் நினைக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என அறியப்படுகிறது. மேலும், அதில் அசிடிக் மற்றும் மக்னீசியம் கலப்பு இருந்ததாக ஆய்வு செய்யப்பட்ட போது கண்டறியப்பட்டது.

Image Courtesy: DeAgostini

இடம்!

இடம்!

ஜின் சூயின் உடல் பதப்படுத்தி புதைக்கப்பட்ட இடத்தின் நிலத்தை சுற்றியும் ஈரப்பதம் உறிஞ்சும் கரி மற்றும் சேறு கொண்டு, ஆக்சிஜன் அல்லது உடல் கெட்டுப்போக செய்யும் பாக்டீரியாக்கள் அண்டாதபடி அமைத்துள்ளனர். இந்த லேயர்களுக்கு எல்லாம் மேல, மூன்று அடிக்கு சேறு கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு இருந்தது.

லீ காங்கின் மனைவி!

லீ காங்கின் மனைவி!

லேடி தய் என அழைக்கப்பட்ட ஜின் சூய் என்பவர் ஹான் சாம்ராஜ்ஜியத்தின் உயர் அதிகாரியாக திகழ்ந்த லீ காங்கின் மனைவி என்றும். இவர் இறந்த போது வயது 50 இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு மாரடைப்பு ஏற்பட இவரது உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை அல்லது சரியான டயட் இன்றி இருந்தது என ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எது என்னவாக இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகள் உடல் கெடாமல் இருக்க இவர்கள் செய்த செயலானது, இன்று வரலாற்றிலேயே சிறந்த மம்மி ஜின் சூய் தான் என பறைசாற்ற வைத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Know About 2000 Years Old Chinese Women Preserved Mummy Xin Zhui!

Things To Know About 2000 Years Old Chinese Women Preserved Mummy Xin Zhui!
Story first published: Monday, January 1, 2018, 16:00 [IST]