For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான் நிக்கும்...

கடைசியாக நான் எப்போது ஓய்வெடுத்தேன் என்று எனக்கே தெரியாது... - Real Life Story

|

வாழ்க்கையில எது பெரிய சோகம்... நாம ஆசைப்பட்ட பைக் வாங்க முடியாதது? நம்ம பதிவிட்ட முகநூல் பதிவுக்கு நூறு லைக்ஸ் வராதது? ஞாயிற்றுக்கிழமை பிரியாணி இல்லாதது? வாடகை வீடு? இன்கம்டாக்ஸ்ல கூடுதலா ஐநூறு ரூபாய் பிடிச்சுட்டாங்களே... இதெல்லாமா?

தீபாவளிக்கு கூட பட்டாசு வாங்கி வெடிக்க முடியாம, பிறந்த நாளுக்கு கூட புது ட்ரெஸ் வாங்கி உடுத்த முடியாம, மாசத்துக்கு, வருசத்துக்கு ஒரு நாள் கூட நல்ல சாப்பாடு கிடைக்காம, தனக்கான உரிமை இந்த சமூகத்துல கிடைக்காம, படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம, திறமை இருந்தும் வாய்ப்பு கிடக்காமன்னு ஒரு பெரிய கூட்டம், மிகப்பெரிய சோகத்தோட சுத்திக்கிட்டு இருக்கு.

ஆனா, நாம எதுமே இல்லாத விஷயத்த ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல ஸ்டேடஸா வெச்சுட்டு Feeling Sadனு போஸ்ட் போட்டுட்டு போயிடுவோம். தப்பு இல்ல.. அவங்க அவங்க வாழ்க்கை, அவங்க அவங்க அனுபவம் என்னமோ அதுக்கு எத்த மாதிரியான இன்பமும், சோகமும் தான அவங்களுக்கு தெரியும்.

இதோ... தன்னோட குடும்பத்து விட்டு பல மைல் தூரம் கடந்து வந்து ரிக்ஷா ஓட்டிக்கிட்டு... ஆறு மாசத்துக்கு ஒருமுறை தான் பெத்தவங்களையும், பெத்த பிள்ளைங்களையும் பார்க்க முடியும்ங்கிற நிலைமையில வாழுற இந்த ஏழை அப்பாவோட கதைய பாருங்க...

காம்போ, ஆஃபர்னா ஐநூறு, ஆயிரம் அசால்டா செலவு பண்ற நம்ம வாழ்க்கைக்கு மத்தியில ஆறு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு ஸ்கூல் பேக் வாங்கிட்டு வரேன்னு சத்தியம் பண்ணியிருக்கேன்.. வாங்கிட்டு போகணும்... பிள்ளைங்க ஆவலா காத்து கிடப்பாங்கன்னு சொல்லி ஏங்குற அப்பாவோட குரல கேளுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Poor and Young Rickshaw Puller Daddy's Real Life Story!

I don't know when the last time I took any rest or ate well at dinner. I work whole the day. This work is keeping my mother and my family alive. My mother is suffering from a stomach disease for which I am providing her treatment by sending money every week. Along with my mother and father I have to take care of all of our 6-member family.
Desktop Bottom Promotion