For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்!

கண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்!

|

'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி பாடியுள்ளார். 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடியுள்ளார் வள்ளலார் என்றழைக்கப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்.

இவர்கள் பாடிய வரிகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் எனில்... உலகத்தை பல இலட்சம் முறை அழித்திருக்க வேண்டும். வாடி, வாடியே மனிதன் செத்திருக்க வேண்டும். ஆனால், இவை இரண்டுமே நடக்கவில்லை. அதற்கு காரணம் மனிதன் கண்டுபிடித்த பணம் எனும் மனிதத்தை அழிக்கும், அழித்திக் கொண்டிருக்கும் கருவி.

ஏழ்மையில்... பட்டினியில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரின் கதை இது. சிறு பிள்ளை போல... நல்ல உணவை காணும் போது ஏங்கி போகிறேன் என்று அவர் கண்ணீர் மல்க கூறுவதை கேட்கும் போது... மனம் உடைந்து போய்விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது ரமலான் காலம்...

இது ரமலான் காலம்...

இஸ்லாமிய தோழர்கள் நோம்பிருக்கும் ரமலான் காலம் இது. சூரிய உதயத்தில் இருந்து, அஸ்தமனம் வரையில் கடினமான நோம்பு இருந்து அவர்கள் தொழுது வேண்டுவார்கள். மாலை நோம்பு நேரம் முடிந்த பிறகு தொழுது நோம்பு கஞ்சி குடித்து ருசியான உணவருந்துவது வழக்கம். பல இஸ்லாம் தோழர்கள் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியில்... தெருக்களில் விழாக்கோலத்தில் விருந்து படைப்பதும், இஸ்லாம் தோழர்களின் ஹோட்டல், உணவு விடுதிகளில் உணவு திருவிழாக்கள் நடப்பதையும் நாம் காண இயலும்.

இது பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், அப்துல் ரஹீம் என்பவருக்கு மட்டும் வருத்தத்தை அளிக்கிறது.

பசி!

பசி!

இது ரமலான் மாதம்... இந்த மாதத்தில் நாங்கள் (இஸ்லாமியர்கள்) நாள் முழுக்க நோம்பு இருப்பது வழக்கம். ஆனால், எனக்கு ரமலான் நோம்பு கடினமானது அல்ல. அனைவருக்கும் ரமலான் வருடத்தில் ஒரு மாதம் என்றால். எனக்கு மட்டும் வருடம் முழுக்க ரமலான் மாதம் தான்.

நோம்பு முடிந்து இப்தார் விருந்தின் போது அனைவரும் நல்ல உணவு உண்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ரமலான் மாதத்திலாவது நோம்பு முடிந்த பிறகு நல்ல உணவு கிடைக்காத என்ற பெரும் பசியும், ஆசையும் எனக்குள் எழும்.

கடைசி முட்டை!

கடைசி முட்டை!

நோம்பு முடிந்து நமாஸ் செய்யும் போதே நான் மிகவும் வலிமை குன்றி போய்விடுவேன். மசூதியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது தெருக்களில் உணவு அலங்காரங்களை கண்டு ஏங்கியது உண்டு.

எனது இப்தார் உணவு என்பது தண்ணீர் ஊற்றிய சாதமும் காய்ந்த பச்சை மிளகாயும் தான். கடைசியாக என் வாழ்வில் எப்போது நான் முட்டை சாப்பிட்டேன் என்பதையே நான் மறந்துவிட்டேன்.

பிச்சை!

பிச்சை!

என் மனைவி எங்கள் கிராமத்து விவசாயிகளிடம் பிச்சை எடுத்து சிறிது காய்கறி வாங்கி வருவாள். அதை சமைத்து சில சமயம் உண்போம். அது கொஞ்சம் பசியை ஆற்றினாலும். மனதுக்குள் மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

ஒரே ஒரு நாள் மட்டும் ரமலான் மாதத்தில் நோம்பு முடிந்து பால் சோறு உண்ண வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், இப்படியான சொர்க்கமான உணவை யார் எனக்கு தருவார்?

ஐந்து வருடங்களாக...

ஐந்து வருடங்களாக...

கடந்த ஐந்து வருடங்களாக எனது மகளின் வீட்டில் தான் வசித்து வருகிறேன். அவளும் ஏழ்மையில் தான் வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு மூன்று வேலை உண்ண சாப்பாடு இல்லாத போதிலும், எங்களுக்கு குறைந்தபட்சம் தங்க இடமாவது கொடுத்திருக்கிறாள் என்பதை நினைத்து நிறைவு கொள்கிறேன்.

நான் இறந்து விட்டால் இந்த துயரத்திற்கு ஒரு விடிவு காலம் வந்துவிடும். அதுவரை இந்த பசி, பட்டினியுடன் காலத்தை நகர்த்த வேண்டியது தான்.

சாபம்!

வயதாவது என்பது ஒரு சாபம். நீங்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டும். பசியை தீர்த்துக் கொள்ள கூட உழைக்க முடியாத நிலை. உடலில் தெம்பில்லை.

ஒவ்வொரு வேலையும் யாராவது உணவளிக்க மாட்டார்களா என்ற நிலைமை நரகத்தை விடவும் கொடியது. தினமும் தண்ணீர் ஊற்றிய சாதத்துடன் கொஞ்சம் உப்பு, காய்ந்த மிளகாய் சாப்பிடுவது மிகவும் கடினம். அதை விழுங்குவதே கடினமாக இருக்கும்.

சாமி! என் வேதனை மட்டும் தீராத பசியை யாருக்கும் என்னால் புரிய வைக்க முடியாது. இந்த முதிய வயதில் நல்ல உணவுக்காக ஏங்குவது.. யாருக்கும் வரக் கூடாத நிலை.

- அப்துல் ரஹீம்.

வங்காள தேச புகைப்படக் கலைஞர் மற்றும் மனித நேய ஆர்வலர் ஜி.எம்.பி. ஆகாஷ் அவர்களது முகநூல் பதிவிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

The Hunger Journey of 80 years old Abdul Rahim

"Eating rice with water and salt and sometimes with dried chilies every day at this old age is very difficult! It feels very hard to swallow sometimes." The Hunger Journey of 80 years old Abdul Rahim
Desktop Bottom Promotion