உள்ளாடை விவகாரம்: மாணவியை மாணவர் முன் அசிங்கப்படுத்திய பள்ளி நிர்வாகம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பெண்களின் உடல் சார்ந்து 'பாடி ஷேம்' எனும் வகையில் அவமானப்படுத்தப்படும் முறை உலகளாவி பறந்து கிடக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஆங்கில மாத இதழ் ஒன்று ஐஸ்வர்யா ராயை அழகாக காண்பிக்க அவரது உடலை மெலிசாக போட்டோஷாப் செய்திருந்தது. இதனை, ஏன் ஒல்லியாக இருந்தால் தான் அழகா என்ற கேள்வி பலரும் எழுப்பினார்கள்.

Teen Girl Has Pulled Out From School for Not Wearing Bra

பொது இடங்களில் பெண்கள் தாய் பாலூட்டுவதை கூட வக்கிரமாக பார்க்கும் கூட்டம், அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அட்டைப்படத்தில் விளம்பரம் செய்ய வேண்டிய சூழல். இப்படி பெண்களின் உடல் சார்ந்த ஏற்றத்தாழ்வு கருத்துகள் சமூகத்தில் காலங்கள் கடந்து நிலைத்து வருகிறது.

அப்படியான ஒரு முறையில் தான் இப்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவி ஒருவர் பிரா அணிந்து வகுப்புக்கு வரவில்லை என்று கூறி, அவரை பள்ளியில் இருந்து ஒரு நாள் நீக்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

லிசி மார்டினெஸ்

லிசி மார்டினெஸ் (17) எனும் மாணவி மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். சென்ற வாரம் ஒரு நாள் இவர் பள்ளிக்கு பிரா அணிந்து வரவில்லை என்பதை அறிந்து, இவர் வகுப்பில் இருக்கும் ஆண் மாணவர்களின் கவன சிதறல் உண்டாக்குகிறார் என்று கூறி பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நல்ல உடை!

நல்ல உடை!

லிசி பள்ளிக்கு பெரிய லாங் ஸ்லீவ் கல்வின் கிளெயின் உடை அணிந்து சென்றுள்ளார். ஆனால், அவர் உள்ளே பிரா அணியவில்லை. அன்றைய தினம் பிரா அணியவில்லை என்பதை தவிர லிசாவிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை. அவரை கண்ட பலரும் சாதாரணமாக தான் கடந்து சென்றனர். ஆனால், சில வக்கிர புத்தி கொண்டவர்களை தவிர. அவர்களால் லிசியின் மேல்சட்டை மீதிருந்த கண்களை எடுக்க முடியவில்லை போல.

சில மணி நேரத்தில்..

சில மணி நேரத்தில்..

லிசி பள்ளிக்கு சென்ற சில மணி நேரத்தில், நர்ஸ் ஆபீஸ் அறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அங்கே பள்ளியின் கோட் ஆப் கண்டக்ட் படி லிசி நடந்துக் கொள்ளவில்லை என்று கூறியும், விதிகளை மீறியதாக கூறியும், அவரை நிப்பிள்ஸ் மீது பேன்டேய்டு ஒட்டிக் கொள்ள அறிவுரைத்துள்ளனர்.

மீண்டும், மீண்டும்..

மீண்டும், மீண்டும்..

லிசி அன்றைய தினம் பள்ளிக்கு பிரா அணியாமல் சென்றதை மீண்டும், மீண்டும் கூறியும், லிசி மனம் புண்படும் படி தரக்குறைவாக பேசியும், அவரை அவமானப்படுத்தி உள்ளனர் பள்ளியின் நர்ஸ் அறையில் இருந்தவர்கள். மேலும், லிசியின் மார்பு மற்றும் நிப்பிள் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த தருணத்தில் மற்ற ஆண் மாணவர்கள் லிசியை பார்த்து கேலியாக சிரித்துள்ளனர்.

இருவர்!

இருவர்!

லிசியை அன்று பள்ளியில் கடந்து சென்ற யாரும் தவறாக காணவில்லை, லிசி தங்கள் கவனத்தை சிதறடிப்பதாக பெரிதாக பலரும் குற்றமும் கூறவில்லை. இருவரை தவிர. ஒரு ஆண் மாணவரும், ஒரு வகுப்பாசிரியரும் தான். டீன் அலுவலகம் சென்று லிசி மீது ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்பது பிறகு தெரியவந்தது.

யாரும் அறியாமல் இருந்த ஒரு விஷயத்தை பள்ளி நிர்வாகம் அழைத்து அவரை அவமானப்படுத்தி பள்ளி முழுவதும் தெரியும்படி செய்துள்ளனர்.

நான்கு பேன்ட்டேய்டுகள்!

நான்கு பேன்ட்டேய்டுகள்!

பிறகு நர்ஸ் அறையில் இருந்தவர்கள் நான்கு பேன்ட்டேயிடுகள் கொடுத்து லிசியை கிராஸ் வடிவத்தில் நிப்பிள் மீது ஒட்டிக் கொள்ளும்படி அறிவுரைதுள்ளனர். நிப்பிளில் ஒட்டிய பிறகு, குதித்து காண்பி என்று அசிங்கமாக கேட்டு கண்காணித்துள்ளனர். இந்த தருணத்தில் லிசி மிகவும் மனம் வருந்தியுள்ளார்.

தடை!

இந்த விஷயத்தை ஊர் அறிய வேண்டும் என்று விரும்பிய லிசி தனது பள்ளியின் ட்விட்டர் அக்கவுண்டை உடன் இணைத்து நடந்த சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். இது ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கருத்துகளுடன் வைரலாக பரவியது. இதை கண்ட பள்ளி நிர்வாகம் லிசியை தனது ட்விட்டர் அக்காவுண்டை உடன் இணைக்காமல் செய்ய தடை செய்தது.

கல்வி அமைப்பில்?

கல்வி அமைப்பில்?

ஒரு மேல்நிலை பள்ளி கல்வி அமைப்பில் இப்படி உடல் ரீதியாக மாணவிகளை பாடி ஷேம் செய்வது மிகவும் கொடுமையாக இருக்கிறது. ஒருவேளை ஏதேனும் உடல்நல பாதிப்பால் கூட உள்ளாடை அணிய முடியாமல் வந்தாலும் இப்படி தான் செய்வார்களா? அல்லது பெண் மாணவி யாரேனும் உடல் பருமனாக இருந்தால், அதன் காரணத்தால் அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றுவார்களா?

முட்டாள்தனம்!

முட்டாள்தனம்!

இருவர் கொடுத்த புகாரின் பெயரில் ஒரு பெண் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அவரை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர் பள்ளி நர்ஸ் அறை நிர்வாகிகள். இங்க பெண் கல்வி தடைப்படுவது மட்டுமின்றி, வளர்ந்து வரும் ஆண் மாணவர்கள் மத்தியில் அவர்கள் பார்வையில் குளறுபடி ஏற்படுத்தும் தவறும் நடக்கிறது.

மாணவர்களுக்கே தெரியாத ஒரு கண்ணோட்டத்தை ஒரு ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளது தான் வருத்தத்திற்குரியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Teen Girl Has Pulled Out From School for Not Wearing Bra

Australian School Pulled Out a Teen Student, Because She Did Not Wear Bra. They says, She is Distracting Boys in the Class room.