For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பத்து வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட குழந்தையின் இன்றைய நிலை!

  |

  ஒவ்வொருவரும் உறவை மறந்து, நேரத்தை துரந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு ஒரேயொரு காரணம் பணம். பணம் என்ன அவ்வளவு முக்கியமானதா ? என்று தோன்றினால் நீங்கள் இன்னமும் இந்த உலகத்தோடு ஒன்றவில்லை என்று அர்த்தம்.... ஆம், பணம் முக்கியமானது மட்டுமல்ல அத்தியாவசியமானதும் கூட.

  நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய பொருளைத் தேடுவதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இருந்து விடப் போகிறது. ஆனால் அந்த அத்தியாவசியத்தையும் தாண்டி சுயலாபம், பிறரை விட இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்கிற எண்ணமே நம்மை அதளபாதாளத்திற்கு தள்ளிவிடுகிறது.

  பெரும்பாலான வீடுகளில் பெண் குழந்தைகள் மீதான பாகுபாடு மிகவும் பரிதாபகரமானதாக இருக்கிறது. இப்போது அப்படிப்பட்ட ஒரு வீட்டின் பெண்குழந்தையைப் பற்றிய கதையைத் தான் பார்க்கப்போகிறோம். அந்த பரிதாபகரமான நிலை அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது என்பதை இந்த கதையின் முடிவில் உங்களுக்கு புரியும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆறு வயதில் :

  ஆறு வயதில் :

  Image Courtesy

  நான் மிகச்சிறிய ஓர் கிராமத்தில் தான் பிறந்தேன். சந்தோசமும் கூடவே ஏன் நிறையவே வறுமை நிறைந்திருந்தது. அப்பாவால் என்னை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. அந்த அளவிற்கு வசதியுமில்லை.

  எனக்கு ஆறு வயதிருக்கும் போது எங்களின் உறவினர் ஒருவர், எனக்கு அண்ணன் முறை வேண்டும் அவர் என் அப்பாவிடம் அடிக்கடி வந்து பேச ஆரம்பித்தார்.

  பாம்பேக்கு போகலாம் :

  பாம்பேக்கு போகலாம் :

  Image Courtesy

  ஒரு நாள் என்னிடம் என்ன படிக்கிறீங்க? என்று கேட்க நான் பள்ளிக்குச் செல்லவில்லை என்றேன்.... சரி படிக்க ஆசையிருக்கா என்று கேட்டார் ஆமாம்... நான் நிறைய படிக்க வேண்டும் என்றேன்.

  உடனே சரி நான் ஒரு யோசனை சொல்கிறேன்.நான் உன்னை இங்கிருந்து பாம்பே கூட்டிச் செல்கிறேன். அங்கே உன்னை படிக்க வைக்கிறேன். அங்கே உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நீ நிறைய படிக்கலாம் என்றார். எனக்கோ ஆசை, உடனேயே பாம்பே செல்ல வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எங்கள் ஊரில் பள்ளிக்குச் செல்லும் பிற குழந்தைகளைப் போல யூனிஃபார்ம், புத்தகப்பையுடன் நானும் பள்ளிக்குச் செல்வதாய் கனவு எல்லாம் காண ஆரம்பித்து விட்டேன்.

  முக்கியமான விஷயம் :

  முக்கியமான விஷயம் :

  Image Courtesy

  அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக என்னிடம் வந்து சொல்ல ஆரம்பிக்க.... அவ்வளவு தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்தார். பாப்பா... நான் சொல்றத கவனமா கேளு, நீ என்னோட பாம்பேக்கு வரேன்னு யார்கிட்டயும் சொல்லக்கூடாது.

  முக்கியமா உங்க வீட்ல சொல்லக்கூடாது. அப்டி சொன்னன்னா உங்கப்பா வெளியூருக்கு படிக்க அனுப்ப மாட்டாரு அப்பறம் நீ என்னோட பாம்பே வர முடியாது. உன்னால படிக்க முடியாது. நீ படிக்கணும் தான.... அப்போ நான் சொல்றத கேளு என்று என்னிடம் சொன்னான்..

  வாழ்க்கையின் முதல் தவறு :

  வாழ்க்கையின் முதல் தவறு :

  Image Courtesy

  அண்ணன் எனக்காக இவ்ளோ கஷ்டப்படுகிறதே... எனக்காகத்தானே என்னுடைய கனவுக்காகத்தானே. நான் படித்து பெரியாளாகிவிட வேண்டும் என்று அண்ணனும் விரும்புகிறது அதனால் தான் எனக்காக பாம்பே அழைத்துச் சென்று படிக்க வைக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறது என்று எனக்குள் சொல்லிக் கொண்டு.

  ஒரு நாள் வீட்டினருக்கு தெரியாமல் அண்ணனோடு ஊரைவிட்டு வந்து விட்டேன். அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று அழும் போதெல்லம என்னை அரவணைத்து பாப்பா நானிருக்கேன்டா என்று சமாதானம் செய்வான். என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு அது என்று எனக்குப் புரியவில்லை.

  பயணம் :

  பயணம் :

  Image Courtesy

  கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும் அதிகமாக பயணம், பஸ், ட்ரைன்,நடை என மாறி மாறி.... எங்கே செல்கிறோம் என்று எதுவும் சொல்லவில்லை. வழியில் நிறைய கதைகளைச் சொன்னான். நன்றாக சாப்பிட வாங்கிக் கொடுத்தான்.

  இரண்டாவது நாள் முடிந்து மூன்றாவது நாள். ஒரு வீட்டிற்குச் சென்றேன். அங்கே நேபாள குடும்பத்தினர் இருந்தார்கள்.

  விற்பனை :

  விற்பனை :

  Image Courtesy

  அந்த குடும்பத்திடம் என்னை விற்று 50,000 பணத்தை வாங்கிக் கொண்டு என் உறவுக்கார அண்ணன் சென்று விட்டான். அவன் என்னை அங்கே விற்றுவிட்டுச் செல்கிறான் என்று எனக்கு அப்போது தெரியாது.பல நாட்கள் கழித்து அந்த வீட்டினர் சொல்லித்தான் தெரியும்.

  அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். இரண்டு குழந்தைகளும் தினமும் பள்ளிக்குச் செல்ல நானோ அந்த வீட்டின் வேலைக்காரியாக வேலைகளை செய்ய வேண்டும். நானும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாலோ அல்லது அவர்கள் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றாலோ பயங்கரமாக அடி கிடைக்கும்.

  எட்டாம் வயதில் :

  எட்டாம் வயதில் :

  Image Courtesy

  ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கே நிறைய சிரமப்பட்டேன். எட்டு வயதான போது என்னை அங்கிருந்து டான்ஸ் க்ளப்பிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆபாசமான மற்றும் குறைவான ஆடைகளை அணிந்து நடனமாட அறிவுறுத்தினார்கள்.

  பாலியல் ரீதியாக சித்திரவதை ஆரம்பமானது. அப்போது தான், வீட்டிற்கு தெரியாமல் வந்து மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்தேன்.

  காமதிபுரா :

  காமதிபுரா :

  Image Courtesy

  கொடுமைகள் அதிகமானது. வீட்டினரை தேட ஆரம்பித்தேன், அம்மாவிடம் செல்ல வேண்டும், ஊருக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் அடி விழும்.

  இவ்வளவு நடந்த பிறகு வீட்டிற்கு செல்லவும் ஒரு வித பயம் இருந்தது. அப்பா அடித்தால் என்ன செய்வது என்ற தயக்கம், அதை விட வீட்டிற்கு எப்படி செல்ல முடியும், வழி தெரியாது, கையில் காசில்லை யாராவது அழைத்துச் சென்று விட்டால் தான் உண்டு. தினமும் அடி, பாலியல் சித்ரவதைகள், சிகரெட்டால் சூடு என்று கொடுமைபடுத்தினார்கள். அதன் பிறகு என்னை அங்கிருந்து காமதிபுராவிற்கு விற்றுவிட்டார்கள்.

  பத்து வயது :

  பத்து வயது :

  Image Courtesy

  அங்கேயும் இதே கொடுமை தொடர்ந்தது..... அதை விட இன்னொரு புதிய கொடுமையாக என்னிடம் கஸ்டமர்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். தினமும் கஸ்டமர்களை சந்திக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். ஒரு நாளைக்கு பத்து கஸ்டமர்கள் வரை வருவார்கள். அப்போது எனக்கு பத்து வயது தான் இருக்கும்.

  என் குழந்தைப் பருவம் முழுவதும் இப்படி கருப்பு பக்கங்களை நிரம்பியிருந்தது. அவ்வளவு தான் இனி இங்கிருந்து என்னை மீட்டு அழைத்துச் செல்ல யாரும் வரமாட்டார்கள். வீட்டினரை இனி பார்க்கவே முடியாது. கடைசி வரை இதே கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இங்கேயே இருக்க வேண்டும் என்று புரிந்தது.

  கஸ்டமர் :

  கஸ்டமர் :

  Image Courtesy

  ஒரு நாள் என்னிடம் ஒரு கஸ்டமர் அனுபப்பட்டார். என்னைப் பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.... பாப்பா உன் வயசென்ன? இங்க என்ன பண்ற... உங்க அம்மா வருவாங்களா என்று கேட்டார்... இல்லை நான் தான் உங்களுக்கு இன்பம் அளிக்கப் போகிறேன் என்று சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை அதிர்ச்சியுடன் உன் வயசென்ன என்று கேட்டார். பத்து என்றேன்... என்னுடைய ஃப்ளாஷ் பேக் கதைகளை எல்லாம் கேட்டார்.

  படிப்பதற்கு ஆசைபட்டதிலிருந்து வறுமையை காரணம் காட்டி உறவினருடன் வீட்டை விட்டு வந்த கதை, அனுபவித்த கொடுமைகள் என எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன்.

  போலீஸ் ரைடு :

  போலீஸ் ரைடு :

  Image Courtesy

  அதன் பிறகு அந்த கஸ்டமர் என்னிடம் எதுவும் பேசவில்லை. சென்றுவிட்டார், அன்றைக்கே அவர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக புகார் கொடுத்திருப்பார் போல, மறுநாள் நாங்கள் தொழில் செய்யுமிடத்தில் போலீஸ் ரைடு நடந்தது.

  என் வயதொத்த குழந்தைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு இடத்தில் குழுமினார்கள். சிலரை தரைக்கு கீழே இருக்கிற சுரங்கத்தில் தள்ளப்பட்டார்கள், சிலர் மேலே சீலிங்கில் நான் சுவற்றிலிருந்து கப்போர்டில் திணிக்கப்பட்டேன்.

  வெளியே ஒடிவிடலாம் :

  வெளியே ஒடிவிடலாம் :

  Image Courtesy

  ஒரேயிருட்டு, மூச்சு முட்டியது. என் கதவை திறக்க முடியாத படி. என் கப்போர்ட் இருக்கும் பக்கமாக வரிசையாக சிலர் நின்று கொண்டார்கள். கதவைத் திறந்தால் அவ்வளவு தான் உனக்கு சாப்பாடு கிடையாது என்று மிரட்டியதால் கதவைத் திறக்காமல் பயத்தில் அழுது கொண்டே கிடந்தேன்.

  சிறிது நேரத்தில் நான்கைந்து ஆட்கள் வருவதும், என் அறையில் பேசுவதும் கேட்டது. இப்போது விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.... கூடவே நேற்று என்னுடன் பேசிய கஸ்டமரின் குரலும் கேட்கவே..அவரும் வந்திருக்கிறார் அப்படியென்றால் என்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்துக் கொண்டு. கதவைத் திறக்க முயன்றேன். ஆனால் திறக்க முடியவில்லை.

  ஹோம் :

  ஹோம் :

  Image Courtesy

  வெளியிலிருந்து லாக் செய்திருந்தார்கள். ஐயையோ என்னடா இது... அவர்கள் இங்கிருந்து செல்வதற்குள் நான் சென்றாக வேண்டுமே என்று நினைத்து எவ்வளவோ முயன்றும் அந்த கதவை திறக்கவே முடியவில்லை. வேறு வழியின்றி அந்த கப்போர்ட்டை தட்டி கத்த ஆரம்பித்தேன்.

  ஒரு நொடி அமைதி. பின்னர் கதவைத் திறந்து என்னை மீட்டார்கள். அங்கிருந்து செம்பூரில் இருக்கிற தேவநாத் என்ற இல்லத்தில் சேர்த்து விட்டார்கள்.

  புதிய வாழ்க்கை :

  புதிய வாழ்க்கை :

  அங்கே எனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது, அதோடு கவுன்சிலிங் கொடுத்தார்கள், எழுத படிக்க கற்றுக் கொடுத்தார்கள். ஏழு வருடங்கள் அங்கேயே வாழ்ந்தேன். பின்னர் அங்கிருந்து புர்னாடா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டேன். அங்கே எனக்கு முடிவெட்ட,ப்யூட்டி பார்லர் கோர்ஸ் கற்றுக் கொடுக்கப்பட்டது.

  அவர்களே எனக்கு வேலைக்கும் ஏற்பாடு செய்தார்கள். ஒரளவுக்கு வருமானம் வந்தது. மெல்ல மெல்ல என் திறமையை வளர்த்துக் கொண்டேன்.

  சொந்த வீடு :

  சொந்த வீடு :

  இப்போது புர்னாடாவிலயே லோன் எடுத்து சொந்த வீடு கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டேன். எனக்காக நண்பர்கள், என ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டேன். என் நண்பர்களிடம் என்னைப் பற்றி இதுவரை நான் சொன்னதில்லை. என்னுடைய கறுப்புப் பக்கங்களால் நிறைந்த குழந்தைப் பருவத்தை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

  அதற்கு ஒரே காரணம், அதை தெரிந்து கொண்டு என்னை ஒதுக்கி விடுவார்களோ என்கிற பயம் தான்.

  காமதிபுரா :

  காமதிபுரா :

  Image Courtesy

  எனக்கான வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததும் காமதிபுராவை நான் மறக்கவில்லை. அப்போது என்னை மீட்டெடுக்க யாரும் வரவில்லை என்றால் என்னால் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாது.

  இன்றும் என்னைப் போலவே யாராவது வந்து நம்மை மீட்க மாட்டார்களா என்று எத்தனை குழந்தைகள் காத்திருப்பார்கள்.... அதனால் ஒவ்வொரு மாதமும் காமதிபுராவிற்குச் சென்று குழந்தைகளை போராடி மீட்கிறேன். அவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை கற்றுக் கொடுக்கிறேன், என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்.

  இனியும் அங்கே மீட்க குழந்தைகள் இல்லை என்ற நிலை வரும் வரையிலும் நான் இதை தொடர்ந்து கொண்டேயிருப்பேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync life women
  English summary

  Story Of a Women Who Rescued From Kamathipura

  Story Of a Women Who Rescued From Kamathipura
  Story first published: Tuesday, May 15, 2018, 11:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more