For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனுதினமும் அந்த எச்சை கண்கள் என் மேல் உமிழ்நீர் வடிக்கின்றன... # Her Story

அனுதினமும் அவ்வெச்சை கண்கள் என் மேல் உமிழ்நீர் வடிக்கின்றன... # Her Story

|

குடும்பத்திற்காக, பொருளாதார சிக்கலுக்காக... வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் இத்தகைய கொடுமைகளை அனுதினமும் எதிர்கொள்கிறார்கள். ஆனால், சென்ற திங்கள் கிழமை என் வாழ்விலேயே மிகவும் கொடுமையான நாள் என்பேன். தினமும் பல கண்கள் என்னை கொத்தித் தின்பது போல காணும். ஆனால், அன்றைய தினம் மிகவும் மோசமானதாக அமைந்தது.

நான் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அன்று தொடர்ந்து மழை பெய்துக் கொண்டே இருந்தது. பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதே கொடுமை எனில், மழை நாட்களில் பயணம் செய்து சொல்லில் அடங்காத அளவுக்கு ரணமானது. எப்படியோ, அந்த கொட்டும் மழையிலும் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறிவிட்டேன். உடலில் துளியளவு பாக்கி இன்றி முழுவதும் நனைந்துவிட்டேன்.

மழையில் நனைந்த காரணத்தால்... பேருந்தில் இருந்த ஆண்களின் கண்கள் என் மீது மொய்க்க துவங்கின. எப்போதுமே மழை காலத்தில் என தற்காப்புக்காக மாற்று உடை வைத்திருப்பேன். உடனே அதை எடுத்து என் மீது போர்த்திக் கொண்டேன். இப்படியான சூழல் எனக்கு புதியதல்ல. பல வருடங்களாக... பல மழை நாட்களில் இதை நான் கடந்து வந்திருக்கிறேன். ஆயினும், சில கண்கள் வாய்ப்பு வேண்டி என்னிலிருந்து நகராமல் கொத்தி திங்க கொக்கினை போல காத்திருக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழைப்பு!

அழைப்பு!

மழை காரணமாக பலத்த போக்குவரத்து நெரிசல். இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு என்னை தற்காத்துக் கொண்டு அலுவலகம் சென்றடைந்தேன்.

திடீரென மதியம் என்பது கணவர் பதட்டமாக கால் செய்தார். எங்கள் மகளுக்கு தீக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அருகே இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க சென்றுக் கொண்டிருப்பதாக கூறி, என்னை உடனே கிளம்பி வா என்று அழைத்தார்.

உடனடியாக விடுப்பு கேட்டு பெறுவது என்பது எங்கள் நிறுவனத்தில் மிக அரிதான காரியம். ஆனால், எனது சூழலை எடுத்துக் கூறி என்பது மேலாளரிடம் இருந்து பாதி நாள் விடுப்பு பெற்று கிளம்பினேன்.

விடாத மழை!

விடாத மழை!

ஒரு பக்கம் மகளுக்கு என்ன ஆனது என்ற பரிதவிப்பு. மறுபுறம் எனது சூழ்நிலையை புரிந்துக் கொள்ளாமல்... இயற்கை பெரும் மழை பொழிந்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வரவில்லை. மழை காலத்தில் இப்படியாக நடப்பது சாதாரணம் என்றாலும், என் வாழ்க்கையில், அந்த தருணத்தில் இது நரகத்தை விட கொடியதாக இருந்தது.

ஒருவழியாக டாக்ஸி பிடித்து தான் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

என் வசதி...

என் வசதி...

நான் வேலை செய்வதோ ஏழாயிரம் ரூபாய் மாத வருமானத்திற்கு. எனக்கு டாக்ஸி என்பது மிக பெரிய விஷயம். அத்தனை ரூபாய் ஒருமுறை பயணிப்பதற்கு நான் ஒருபோதும் செலவு செய்ய மாட்டேன்.

ஆனால், அன்று எனக்கு வேறு வழியில்லை. என் மகளை உடனடியாக சென்று மருத்துவமனையில் பார்க்க வேண்டும் என்றால்... பணத்தை பற்றி எல்லாம் அக்கறைப்பட முடியாது. அவசரநிலை காரணமாக டாக்ஸி புக் செய்தேன். வந்தது... உடனடியாக புறப்பட்டேன்.

மிக மோசமானது...

மிக மோசமானது...

அன்று என் நாள் மிகவும் மோசமானதுக்கு காரணம் அந்த டாக்ஸி பயணம் தான்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையில் வெளியே பேருந்துக்காக காத்திருந்த காரணத்தால் நான் மீண்டும் முழுக்க நனைந்திருந்தேன். நான் பயணம் செய்துக் கொண்டிருந்த டாக்ஸி ஓட்டுனர் நொடி விலகாமல் என்னையே கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு வந்தான்.

அவனது கண்களில் அந்த இச்சை வெறியும், காம ஆசையும் வழிந்தோடிக் கொண்டிருந்தது. உள்ளூர மிகவும் அச்சம். அவனது முகத்தில் இருந்த வெட்டுக் காயங்களும்... அருவருப்பான அவனது பார்வையும் கற்பழிப்பை விட மோசமான உணர்வை ஏற்படுத்தியது.

ஒருத்தியை விட்டு வைக்கவில்லை...

ஒருத்தியை விட்டு வைக்கவில்லை...

கொட்டும் மழையில் சாலை ஓரம் உடல் முழுக்க நனைந்து நடந்து சென்ற ஒரு பெண்ணை கூட அவனது பார்வை விட்டுவைக்கவில்லை. மிகவும் மோசமானவனாக அவன் என் கண்களுக்கு காட்சியளித்தான்.

அவன் செல்லும் பாதை சரியானதா? என்னை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பானா? என்று பல கேள்விகள், அச்சங்கள். ஒருவழியாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் நான் மருத்துவமனையை சென்றடைந்தேன்.

இனிமேல், என் வாழ்வில் ஒருபோதும்... ஏன் சாகும் நிலை ஏற்பட்டாலும் கூட தனியாக டாக்ஸியில் பயணிக்க மாட்டேன் என்று எனக்கு நானே சத்தியம் செய்துக் கொண்டேன்.

அசௌகரியமானது...

இந்த உலகின் ஏழை நாடுகளில் வசிக்கும் அனைத்து பெண்களும் இத்தகைய சூழலை கடந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய தருணங்கள் அவர்களுக்கு பழக்கபப்ட்டதாகிவிட்டது. ஏதோ இறைச்சி துண்டின்னை ருசிக்க பார்ப்பது போல தான் உமிழ்நீர் வழிய பெண்களின் உடலை கண்டு ரசிக்கிறார்கள். ஒரு பெண்ணை இப்படியான சூழலுக்கு ஆளாக்கும் போது.. இவர்கள் ஒருபோதும் அவர்களது வீட்டில் வசிக்கும் அம்மா, மனைவி, சகோதரி, மகள்கள் குறித்து யோசிக்க மாட்டார்களா? என்ற சந்தேகம் என்னுள் அனுதினமும் உண்டாகிறது.

அவர்கள் வீட்டு பெண்களும் வெளியே போகும் போது இப்படியான சூழலை கடந்து செல்வார்களே என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்காதா?

ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் என் கணவர் தோளில் சாய்ந்து அன்று நடந்த நிகழ்வினை கூறி அழுததுண்டு. என்ன செய்ய? மறு நாள் மீண்டும் அதே சூழலை எதிர்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும்...

- சல்மா

வங்காள தேசத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மற்றும் மனித நேய ஆர்வலர் ஜி.எம்.பி. ஆகாஷ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த உண்மை சம்பவத்தின் தமிழாக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Every day is hard for women who work for feeding their families!

Every day is hard for women who work for feeding their families but last Monday was the hardest day of my life. Nothing was going well from the early morning that day.
Desktop Bottom Promotion