இந்த 5ல, ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க ஆத்மாவின் தீராத தாகம் என்னன்னு நாங்க சொல்றோம்!

Posted By: Staff
Subscribe to Boldsky
உங்க ஆத்மாவின் தீராத தாகம் என்ன தெரியுமா?- வீடியோ

இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனுஷனே இருக்க முடியாது. அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் இயந்திரத்தனமாக வாழ்ந்து வருகிறார் என்பதை நாம் மிக எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.

பிரச்சனைகள் இருக்க தான் செய்யும், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேர்வுகளிலும் பிரச்சனைகள் இருக்கும். உண்மையில், தவறு செய்பவர்களை காட்டிலும், நன்மை செய்பவர்களுக்கு தான் அதிக பிரச்சனை வரும். சிலருக்கு ஏன் தங்கள் வாழ்வில் இப்படியான பிரச்சனை ஏற்படுகிறது என்றே தெரியாது. பிரச்சனை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதற்கான பதிலும், தீர்வும் நிச்சயம் இருக்கும்.

Pick An Al-chemical Symbol and We Will Tell What Your Spirit Thirsts for

Image Soure: David Wolfe

அவ்வகையில், உங்கள் ஆத்மா / ஆன்மாவை சூழ்ந்திருக்கும் பிரச்சனை எது சார்ந்து இருக்கும், அதில் இருந்து நீங்கள் எப்படி வெளிவரலாம் என்பதை குறிக்கும் பர்சனாலிட்டி டெஸ்ட் தான் இது. இந்த ஐந்து இலட்சினைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆழ்மனத்தின் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிங்கம்!

சிங்கம்!

சிங்கம் சூரியனை குறிக்கிறது. உங்கள் விதியை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.

ஒருவேளை நீங்கள் சிங்கத்தை தேர்வு செய்திருந்தால்.,

பிரச்சனை: அல்டிமேட் சக்தி கொண்டிருக்கும் சிங்கம் சூரியனை குறிக்கிறது. சிங்கம் ஆளுமை, ஆதிக்கத்திற்கு இணையானது. இப்போது நீங்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கைகாக நீங்கள் எதையும் சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல் பட்டிருப்பீர்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் உங்கள் ஓயாத கடமையினால் நீங்கள் பிரச்சனையில் சிக்கி இருக்கலாம். அதில் இருந்து வெளிவர நீங்கள் புதிய, வித்தியாசமான பாதையை தேடலாம்...

Image Soure: David Wolfe

தீர்வு:

தீர்வு:

உங்களது தற்போதைய வாழ்க்கை உங்களை மிகவும் சோதிக்கிறதா? மீண்டும் நிம்மதியாக பெருமூச்சு விட வேண்டும் என்று கருதுகிறீர்களா? இந்நிலையில் இருந்து வெளிவர புதிய வழிகளை தேடுகிறீர்களா? நீங்கள் என்ன செய்தீர்களோ, ஏன் செய்தீர்களோ? அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது.

அக்காரணத்தை நீங்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களோ, அன்று உங்கள் பாதையில் மாற்றங்கள் தென்படும், உங்கள் தீர்வுக்கான வழி நீங்கள் காண்பீர்கள். உங்கள் கடமைகளை மீண்டும் சிறப்பாக செய்வதற்கான முறையை அறிவீர்கள்.

அறிவுரை:

அறிவுரை:

நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் உங்கள் தேர்வுகளில் முதலில் அமைதியை தேடுங்கள். இதை செய்வதால் உங்கள் வேலை, வாழ்க்கை அமைதியாக அமையுமா என்று முதலில் யோசிக்க வேண்டும்.

உங்கள் அறிவை இந்த சிந்தனைக்குள் செலுத்தினீர்கள் எனில், அது அமைதியான வழியை தான் தேர்வு செய்யும். இதனால் எந்த ஒரு தடையும், பிரச்சனையும் இன்றி நீங்கள் இருக்கலாம். மேலும், விதி உங்கள் கையில் அகப்பட்டுவிடும்.

ஹவர் கிளாஸ்!

ஹவர் கிளாஸ்!

தவிர்க்க முடியாததின் இலட்சினை தான் இந்த ஹவர் கிளாஸ். இது நேரத்தின் சுழற்சியாகும்.

ஒருவேளை நீங்கள் ஹவர் கிளாஸ் தேர்வு செய்திருந்தால்..,

பிரச்னை: ஹவர்கிளாஸ் நேரத்திற்குள் சிக்கிக் கொண்ட உணர்வை தரவல்லது. உங்கள் கடந்த காலத்தில் என்றேனும் நீங்கள் வலிமிகுந்த துயரமான அனுபவத்தை கடந்து வந்திருக்கலாம். அதனால், மெல்ல, மெல்ல நீங்கள் நீரில் மூழ்குவது போலவும், சக்தி இருந்து இருப்பது போலவும், இது தவிர்க்க முடியாத சூழல் என்றும் கருதி இருக்கலாம்.

Image Soure: David Wolfe

தீர்வு:

தீர்வு:

இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் வளர, வளர வயதாவது, மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதி. இதன் நடுவே நாம் அனைத்து அன்பவங்களையும் கடந்து வர வேண்டும். மரணத்தை விட ஒருவரை அதிகம் அச்சுறுத்திப் பார்த்துவிடக் கூடிய அனுபவம் வேறு ஏதேனும் உண்டா? எனவே, நேரத்துடன் கொஞ்சம் அமைதி காணுங்கள்.

உங்களால் முடிந்தால் பழையதை மறந்து, உங்கள் கடந்த காலத்தையும் சாந்தியடைய செய்யுங்கள். அதை மீண்டும், மீண்டும் சிந்தித்தது இறந்த காலத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். இது தான் உங்களை யார் என்று நீங்கள் தீர்மானம் செய்ய வைக்கும். இதனால் உங்களிடம் முன்பை விட வலிமை அதிகரிக்கலாம்.

அறிவுரை:

அறிவுரை:

இன்றில் இருந்து உங்கள் வாழ்வில் எப்போதும் சிறந்த முடிவை எடுங்கள் எந்தந்த நேரத்திற்கு எது சரியானது என்று யோசிக்காமல், எதிர்காலத்திற்கு எது சரியானது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். உங்களிடம் எல்லா சக்தியும் இருக்கிறது என்று நம்புங்கள். நேரம் உங்கள் நண்பன்.

நிலா!

நிலா!

நிலா உணர்வுகளோடு இணைப்பும், தொடர்பும் உடையது. இதனிடம் புதைந்த உண்மைகள் பலவன இருக்கும்.

ஒருவேளை நீங்கள் நிலாவை தேர்வு செய்திருந்தால்...

பிரச்சனை: உங்கள் மனம் ஒரு போர்க்களம் போன்றது. உங்கள் ஆள் மனதில் இருக்கும் ஒரு விஷயம் நிம்மதியாக உறங்கவிடாமல் செய்யலாம். அது உங்களை நள்ளிரவுகளில் எழுப்பிக் கொண்டிருக்கும். அந்த ரகசியம் உங்கள் ஒவ்வொரு இரவையும் சூழ்ந்திருக்கும். அது பகை, வெறுப்பு, கோபம் அல்லது பேரார்வம் என்று எதுவாக கூட இருக்கலாம்.

Image Soure: David Wolfe

தீர்வு:

தீர்வு:

உங்கள் மனம் அமைதியை தேடுகிறது. உங்கள் உணர்வுகளை ஒருமுகமாக்கி அதன் இலட்சியத்தை வெற்றியடைய செய்ய உதவும் ஒரே கருவி அமைதி தான். இரகசியங்களுக்கு பெரும் சக்தி இருக்கிறது. அது இருளில் மறைந்திருக்கும். அது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் போது இருபாலரிடமும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். இரகசியம் எத்தனை ஆழத்தில் இருக்கிறதோ, தாக்கத்தின் வீரியம் அத்தனை பெரிதாக இருக்கும்.

அறிவுரை:

அறிவுரை:

உங்கள் உணர்வுகளை இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்த துவங்குங்கள். நீங்கள் புதைத்து வைத்திருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒருநாள் உங்களையே தாக்கத்திற்கு ஆளாக்கலாம்.

சாவி!

சாவி!

சாவி வாழ்க்கையின் ஞானம் மற்றும் பாதையுடன் தொடர்பும், இணைப்பும் உடையது.

ஒருவேளை நீங்கள் சாவியை தேர்வு செய்திருந்தால்..,

பிரச்சனை: உங்கள் ஆத்மா பதில்களை தேடுகிறது. நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையில் நிறைய கேள்விகள் நிறைதிருக்கலாம். அந்த அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அந்த பதில்களை எங்கே காண்பது, எப்படி கண்டறிவது, எப்படி தேடுவது என்பது அறியாது இருக்கலாம். ஒரு கட்டத்தில் நீங்கள் அந்த பதில் தேடும் பயணத்தில் சோர்வடைந்து, போதுமடா சாமி என்ற நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம்.

Image Soure: David Wolfe

தீர்வு:

தீர்வு:

இது உங்கள் நேரம், சூரியன் போல உதிக்க வேண்டிய, ஜொலிக்க வேண்டிய காலம். சாவி உங்கள் கனவுகள் மற்றும் பேரார்வத்திற்கான வழி. இது நீங்கள் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையை மீறி, தாண்டி இருக்கும் ஒரு அட்டகாசமான, திரில்லான வாழ்க்கையின் பகுதியை திறக்க செய்யும்.

அறிவுரை:

அறிவுரை:

நீங்கள் முதலில் பயணிக்க வேண்டிய பாதையை சரியாக தேர்வு செய்ய வேண்டும், முடிவு செய்ய வேண்டும். இது நீங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும், எப்படி உதவி நாட வேண்டும், எத்தகைய மக்களுடன் பழக வேண்டும் என்ற தெளிவை அளிக்கும். செல்ல வேண்டிய ஊர் பெயர் தெரியாமல் ஏதோ ஒரு பேருந்தில் உட்கார்ந்தால், உங்கள் பயணம் திசை மாறி தான் போகும்.

ஹம்சா கை!

ஹம்சா கை!

ஹம்சா கை (Hamsa hand) கெட்ட சக்திகளிடம் இருந்து காக்கும்.

ஒருவேளை நீங்கள் ஹம்சா கை தேர்வு செய்திருந்தால்..,

பிரச்சனை: உங்கள் ஆத்மாவை ஏதேனும் கெட்ட சக்தி ஆட்கொண்டிருக்கலாம். அதில் இருந்து வெளிவந்து சுதந்திரமாக இருக்க ஆத்மா விரும்பலாம். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சில விசித்திரமான அறிகுறிகளை கண்டிருக்கலாம். அது அந்த சூழல் அறியானதாக இல்லை, உங்களுக்கு தீய தாக்கம் ஏற்படுத்தும் என்று உணர்த்தி இருக்கலாம்.

Image Soure: David Wolfe

தீர்வு:

தீர்வு:

வெற்றி மட்டுமல்ல, தோல்வியும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நம்ப கூடாத நபரை நம்பினால் தோல்வியும், நஷ்டமும் தான் ஏற்படும். எனவே, அனைத்தும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நம்புங்கள். கைதாவது மட்டுமல்ல, விடுதலை ஆவதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் செய்த தவறுகளை நீங்களே கண்டறியுங்கள், உங்களை ஏமாற்றியவர்கள் யார் என்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இது மிகவும் எளிது, உங்கள் மீது நீங்களே அனுப்பு செலுத்த ஆரம்பிக்கும் போது உங்களை சுற்றி இருக்கும் கூட்டத்தில் உங்கள் மீது உண்மையான அன்பு யார் கொண்டிருக்கிறார், போலியாக யார் நடிக்கிறார் என்பதனை அறிந்துவிடலாம். இதை நீங்கள் செய்ய துவங்கிவிட்டாலே, உங்களை சுற்றியிருக்கும் இடையூறுகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும்.

அறிவுரை:

அறிவுரை:

நீங்கள் ரிலாக்ஸாக உணர நேரம் ஒதுக்குங்கள். எனர்ஜியை புத்துயிர் பெற செய்யுங்கள். நீங்கள் யாரென்றும், உங்களை சுற்றி இருப்பவர்கள் யார், எப்படி பட்டவர்கள் என்றும் உணர இவை மிகவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pick An Al-chemical Symbol and We Will Tell What Your Spirit Thirsts for

Pick An Al-chemical Symbol and We Will Tell What Your Spirit Thirsts for