For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுமையான வரதட்சணை கேட்டு பெண் வீட்டாரை வியப்பில் ஆழ்த்திய மாப்பிளை, வேர்ல்டு லெவல் வைரலானார்!

By Staff
|

சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்பிய ஓடிஸா பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வருங்கால மாமனாரிடம் வினோதமான வரதட்சனை கேட்டு உலக அளவில் ட்ரெண்ட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.

இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்து பசுமை திருமணம் தான் செய்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி ஓடிஸா கேந்த்ரபரா கடற்கரை கிராமத்தை சேர்ந்த சரோஜ்கண்டா பிஸ்வால் தனது மாமனாரிடம் இருந்து வரதட்சணையாக ஆயிரத்து ஒரு மரக்கன்றுகளை பெற்றுள்ளார். சரோஜ்கண்டா ஜகன்னாத் வித்யபித் என்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆவார்.

Odisha Teacher Who Demanded Tree Saplings in Dowry

thelogicalindian

ஆரம்பத்தில் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்பதை அறிந்து திடுக்கிட்டிருக்கிறார் மாமனார். ஆனால், இதெல்லாம் சமூகத்தில் ஒரு கடமை தானே என்று கூறி மாப்பிளையை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால், மாப்பிள்ளை இப்படி ஒரு வினோதமான வரதட்சணை கேட்டவுடன் உறவினர்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருப்பம் இல்லை!

விருப்பம் இல்லை!

தனக்கு எப்போதுமே வரதட்சணை பெறுவதில் விருப்பம் இல்லை, சிறுவயதில் இருந்தே வரதட்சணை வாங்கக் கூடாது என்பதை எனக்கு கற்பித்துள்ளனர். நான் அதை என் ஆசிரியர் கற்பித்த வண்ணம் கடைபிடித்து வருகிறேன் என்று சரோஜ்கண்டா பிஸ்வால் கூறி இருக்கிறார்.

எனக்கு எந்தவிதமான வரதட்சணை வாங்குவதிலும் விருப்பம் இல்லை. ஆனால், என் மாமனார் வரதட்சணை வாங்கியே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். ஆகையால் தான் அவர்களிடம் பழங்கள் தரும் வகையிலான ஆயிரத்து ஒரு மரக்கன்றுகள் வரதட்சணையாக தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன் என்கிறார் சரோஜ்கண்டா.

வியப்பில் உறவினர்!

வியப்பில் உறவினர்!

வியப்பில் ஆழ்த்திய மாப்பிளையின் வரதட்சணையை கேட்டு அதிர்ந்த போன மாமனாரும் அதற்கு உடனே சம்மதம்தெரிவித்தார். திருமணம் வைபவத்தின் முன்பே மாப்பிளை கேட்ட மரக்கன்றுகள் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. அதை மறுநாளே ஒரு வாகனத்தில் ஏற்றி சென்று கிராமம் முழுவம் வாழ்ந்து வந்த மக்களுக்கு பரிசாக அளித்து வந்தனர் புதுமண தம்பதியினர். ஆயிரத்து ஒரு மறக்கன்றுகளில் எழநூறு மரக்கன்றுகள் மாமர கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமை திருமணம்!

பசுமை திருமணம்!

பசுமை திருமணத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஓடிஸா ஆசிரியர் தனது திருமண விழாவின் போது பட்டாசுகள் வெடிக்கவோ, பலமான இசை கச்சேரிகள், டிஜே மியூசிக் நிகழ்சிகள் ஏற்பாடுகளோ கூடாது என்று தடை விதித்துவிட்டார். விகாஸ் பரிஷத் என்ற சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார் பிஸ்வால். எங்கள் அமைப்பின் மூலமாக இயற்கை வளம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மேலாண்மையை பாதுகாத்தல், வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும். மரங்களை நடுவதன் மூலமாகவே புவி வெப்பமயம் ஆதலை தடுக்க முடியும் என்றும் கூறுகிறார் பிஸ்வால்.

மனைவி பெருமிதம்!

மனைவி பெருமிதம்!

பழங்களை அளிக்கும் மரக்கன்றுகளை குறிப்பாக கேட்டதன் காரணம், அவற்றை தான் மக்கள் மிகுந்த கவனத்துடன் பார்த்து, பார்த்து வளர்ப்பார்கள் என்று கூறுகிறார் பிஸ்வால். இவரது மனைவி ராஷ்மியும் ஒரு ஆசிரியை தான். தனது கணவரின் இந்த புதுமையான வரதட்சணை மூலம் தான் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறுகிறார் ராஷ்மி.

கணவரின் இந்த வழியை அனைவரும் பின்பற்றினால் இயற்கையை காப்பற்ற முடியும் என்கிறார் ராஷ்மி. திருமண விழா முடிந்த பிறகு, புதுமணப்பெண்ணை வரவேற்கும் வகையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றை உறவினர்கள், நண்பர்கள் பெற்றுக் கொண்டனர். மேலும், இவர்கள் திருமண அழைப்பிதழில் பிளாஸ்டிக் தீய தாக்கத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன.

மகிழ்ச்சி!

மகிழ்ச்சி!

தற்போது தனது திருமணம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்திருப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருப்பதாக கூறுகிறார் பிஸ்வால். மேலும், அரசாங்கம் இதுக்குறித்து மக்களை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

வினோதமான வரதட்சணை கேட்ட தனது மருமகனை எண்ணி தான் பெருமை கொள்வதாகவும், இயற்கையை காக்க முயன்று வரும் இவரது செயலை குறித்து பாராட்ட வார்த்தைகள் போதாது என்றும் கூறியுள்ளார் பெண் கொடுத்த மாமனார் மகேஷ்வர்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Odisha Teacher Who Demanded Tree Saplings in Dowry

In an attempt to spread environmental awareness, an Odisha school teacher asked for an unusual present from his would-be father-in-law. The 32-year-old demanded 1,001 tree saplings as a token of gift to the couple. He says it was his childhood dream to have a “green wedding”.
Story first published: Monday, July 2, 2018, 18:58 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more