For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல்... - ஒரு கன்னியாஸ்திரியின் கதை!

  By Staff
  |

  மேரி, ஒரு கன்னியாஸ்திரி. சகித்துக் கொள்ள முடியாத அனுபவத்தினால் இவர் கேரளாவின் ஒரு கத்தோலிக்க சபையில் இருந்து தனது 40 ஆண்டுகால சேவையை துறந்து வெளியேறினார்.

  இவர் "நன்ம நிரஞ்சவரே ஸ்வஸ்தி" (Nanma Niranjavare Swasthi) என்ற பெயரில் சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இதில் அவர் தன் அனுபவத்தில் எதிர்கொண்ட பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

  Nanma Niranjavare Swasthi, An Autobiography of a Nun Talks about the Extreme Pain of her Life!

  Cover Image Source: Quiet As a Nun

  கன்னியாஸ்திரி மேரி, மன மற்றும் உடல் ரீதியாக தான் எதிர்கொண்ட மிகுதியான வலியினை தெளிவுற கூறி இருக்கிறார். இதில் கன்னியாஸ்திரிகள், குருக்கள் (Priests) இடையேயான சொல்ல முடியாத கொடுமைகளும் அவர் இடம்பெற செய்திருக்கிறார்.

  மேலும், சேவை அல்லது தியாக உணர்வுடன் கன்னியாஸ்திரியாக பணிபுரிய வரும் சிலருக்கு பரிதாபாகரமான நிலையே மிஞ்சுகிறது என்று கூறியிருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஏமாற்றம்!

  ஏமாற்றம்!

  கிழக்கு கேரளாவின் பலை (Palai) எனும் பகுதியில் பிறந்தவர் மேரி. தனது 13 வயதிலேயே கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று விரும்பி. வீட்டை விட்டு ஓடி வந்து கத்தோலிக்க சபையில் இணைந்திருக்கிறார். கடவுளுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதை இவர் தனது கணவாய் வைத்திருக்கிறார். ஆனால், கன்னியாஸ்திரியாக இவர் சேவை செய்த நாற்பது ஆண்டுகளில் கடினமும், துரோகமும், முற்றிலும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

  1999

  1999

  1999லேயே மேரி தனது அங்கிகளில் இருந்து விடுப்பட்டு வெளிவந்துவிட்டார். ஆயினும், மனிதாபிமானத்துடன் அவர் வயநாட்டில் ஒரு ஆதரவற்ற இல்லம் வைத்து நடத்தி வருகிறார். மேரியின் சுய சரிதை எழுத உதவிய எழுத்தாளர் ஜோஸ் என்பவர், கன்னியாஸ்திரியாக இருந்து அவர் செய்ய விரும்பியதை, கன்னியாஸ்திரியாக இல்லாமல் அவர் செய்து வருகிறார் என்று கூறி இருக்கிறார். ஒதுக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு மேரி ஒரு தாயாக இருந்து சேவகம் செய்து வருகிறார்.

  இவர் தனது சுய சரிதையில் தான் கடந்து வந்த பல அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார்... அது முக்கியமாக அவர் பதிவு செய்திருக்கும் இரண்டு சம்பவங்களை குறித்து அடுத்து காணலாம்...

  சம்பவம் #1

  சம்பவம் #1

  கன்னியர் மடத்தில் பல கன்னியாஸ்திரிகள் இருப்பார்கள். ஒரு நாள் கன்னியாஸ்திரி ஒருவர் அருவருக்கத்தக்க புத்தகத்தை படிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதில் நிர்வாண கோலத்தில் ஆண், பெண் உடல் இடம் பெற்றிருந்தது. அது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது.

  கன்னியாஸ்திரியாக வரும் பொழுது அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி என்ன ஆனது. தனிமையில் அவரை அழைத்து எச்சரித்தேன். அதை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் வலியுரித்தினேன். அதே போல, நான் கண்ட இந்த விபரங்களை யாரிடமும் கூட மாட்டேன் என்று வாக்களித்தேன்.

  என்னுள் மற்றுமொரு சந்தேகமும் எழுந்தது, அந்த கன்னியாஸ்திரிக்கு யார் அத்தகைய புத்தகங்களை கொடுத்திருப்பார்?

  தனிமையில்!

  தனிமையில்!

  சில குருக்கள் எந்தவொரு காரணமும் இன்றி, கன்னிமடதிற்கு வந்து செல்வார்கள். சில கன்னியாஸ்திரிகள் அவர்களுடன் தனிமையில் அப்படியான நேரம் செலவிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்களது இந்த செயலால் சபைக்கு தான் அவமரியாதை ஏற்படும் என்று கருதினேன். இதை மதரிடம் சென்று புகாரளிதேன். ஆனால், அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

  நிறைய முறை, எதிர்பாராத நேரங்களில் சில கன்னியாஸ்திரிகளின் அறைக்குள் சென்றால்.. பார்க்க கூடாதவற்றை எல்லாம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். ஒருமுறை அபாயமான நிலையில் இருந்த ஒருவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கே சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் இல்லை. அவர் ஒரு கன்னியாஸ்திரியுடன் உறவில் ஈடுபட்டு வந்தார். நாங்கள் எங்கே தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  மருத்துவர்!

  மருத்துவர்!

  நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, ஒரு அசௌகரியமான சத்தத்தை கேட்டு, மறைமுகமான இடத்தில் அவர்கள் இருந்ததை கண்டுபிடித்தேன். அவர்கள் அந்த அறையில் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், நல்லதாக ஏதுமில்லை என்பது மட்டும் நன்கு அறிவேன். நோயாளியை கண்காணிக்க முடியாத கட்டுப்பாடு இல்லாத மருத்துவன் எத்தனை மோசமானவனாக இருக்க கூடும் என்பதை அந்த கன்னியாஸ்திரியிடம் எடுத்து கூறினேன்.

  விலகிவிடு!

  விலகிவிடு!

  பிற கன்னியாஸ்திரிகளும் கூட, அந்த குறிப்பட்ட கன்னியாஸ்திரியை நீ இந்த இடத்தை விட்டு விலகி, ஒரு நபரை திருமணம் செய்துக் கொண்டு வாழ். இதனால் சபையின் பெயராவது மிஞ்சும் என்று கூறினார்கள். மதரிடம் அவர்கள் இருவரையும் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூட நான் கேட்டுக் கொண்டேன்.

  அந்த பிரச்சனை கொஞ்ச காலம் பூதாகரமாக காணப்பட்டது. பிறகு மீண்டும் அந்த மருத்துவரும், கன்னியாஸ்திரியும் தங்கள் பழைய வேலையில் ஈடுபட துவங்கிவிட்டார்கள். அந்த மருத்துவர் என்னை கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார். அனைவரும் அவரவர் பாதையை பார்த்து நகர்ந்துக் கொண்டிருக்க. நானும் இவர்களை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நிலைக்கு செல்ல வேண்டி இருந்தது.

  சில காலம் கழித்து, அந்த கன்னியாஸ்திரி சபையை விட்டு நீங்கி, அவரையே திருமணமும் செய்துக் கொண்டார்.

  சம்பவம் #2

  சம்பவம் #2

  ஒருமுறை என்னிடம் பாதர் ஒருவர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்தார். நான் என்னை தற்காத்து கொள்வதற்காக அந்த அறையில் இருந்து மர நாற்காலி ஒன்றை எடுத்து தாக்கினேன். இந்த பிரச்சனை சபையில் பெரிதானது.

  ஆனால், சபையின் கோபம் என் மீது பாய்ந்தது. நான் தான் குற்றவாளி என்பதை போல பார்வையை மாற்றினார்கள். சபையில் ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கிறது. அதாவது, குருக்கள் என்ன செய்தாலும், அது சார்ந்து யாரும் கேள்வி கேட்க கூடாது.

  இளம் வயது!

  இளம் வயது!

  அந்த காலக்கட்டத்தில் நான் வெறும் 20 வயதே நிரம்பிய இளம் பெண். குருக்களுக்கு காலை உணவு சமைத்து பரிமாற வேண்டும் என்பது ஒரு வழக்கம். சில சமயங்களில் என்னை தான் சர்ச்சுக்கு அனுப்புவார்கள்.

  நான் செல்ல வேண்டிய தருணம் வரும் போதெல்லாம் எனக்குள் ஒரு பதட்டம் இருக்கும். எனக்கு அப்போது சரியாக சமைக்க வராது. யாரும் எனக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை.

  ஆனால், நான் தவறாக சமைத்தல் குற்றம் மட்டும் கூறுவார்கள். யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை. என் தவறுகளை சுட்டிக்காட்ட மட்டும் வரிசையாக வந்து முன் நின்றனர். அது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது.

  அத்துமீறல்!

  அத்துமீறல்!

  ஒரு சம்பவத்தின் போது, குருக்களுக்கு சமைத்து உணவளிக்க நான் செல்ல வேண்டும் என்று கூறினார்கள். நான் சமைத்து அவர் உணவருந்தும் டேபிளில் வைத்துவிட்டேன். அவர் வந்து அமர்ந்தார், உணவு பரிமாற கூறினார். நான் பரிமாறும் போது அவர் என்னை தவறான முறையில் தீண்டுகிறார் என்பதை அறிந்தேன்.

  நான் அவரை விட்டு விலகினேன். ஆனால், மீண்டும், மீண்டும் அழைத்து உணவு பரிமாற கூறி, அதே மாதிரி நடந்துக் கொண்டார். இது என்னுள் மிகுந்த மனவேதனையை உண்டாக்கியது. குருக்கள் ன்ன கூறினாலும், அதை கேட்டு செயல்பட வேண்டும் என்பது ஒரு சட்டம்.

  தாக்குதல்!

  தாக்குதல்!

  ஒரு கட்டத்தில் குருக்கள் எழுந்து வந்து என் கைகளை பிடித்து இழுத்தார். உனக்கு இதெல்லாம் தெரியாதா மேரி என்று கேட்டார். நான் அழுதேன். அவர் என்னை கட்டியணைக்க முற்பட்டார். நான் அவரிடம் இருந்து தப்பித்து ஓடி முற்பட்டேன். ஆனால், அவர் தனது மேசையை சுற்றி என்னை பிடித்துவிட்டார். அந்த சமயத்தில் தான் அறையில் இருந்து ஒரு மர நாற்காலியை எடுத்து அவரை தாக்கினேன்.

  குழப்பம்!

  குழப்பம்!

  அவர் தலையில் இருந்து இரத்தம் வர துவங்கியது. ஒருபுறம் சோகம், ஒருபுறம் பதட்டம் என கலவையான உணர்வில் தத்தளித்து கொண்டிருந்தேன். அச்சத்தில் கத்திக்கொண்டே, அந்த அறையில் இருந்து வெளியே ஓடினேன்.

  அனைவரிடமும் என்ன நடந்தது என்று கூறினேன்.. ஆனால் அனைவரும் என்னை திட்ட ஆரம்பித்தனர். மற்றவர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது குருக்கள் பேசாமல் அவரது நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

  அவரை கோழிக்கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அங்கே அவர் குளியறையில் தவறி விழுந்துவிட்டார் என்று கூறி சிகிச்சை பெற்று திரும்பினார்.

  ஆறு மாதம்!

  ஆறு மாதம்!

  அனைவரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தனர். சபையில் ஏதேனும் அபாயமான நடவடிக்கை எடுக்கப்படுமோ என்று அஞ்சினேன். பாதர் பீட்டர் வந்திருந்த போது, அவரிடம் நடந்த அனைத்தையும் கூறி எழுதேன். அவர் என்னை சமாதானப்படுத்தி, சர்ச் மற்றும் மக்களுக்காக மட்டும் நீ சேவை செய் என்று கூறினார்.

  கன்னியர் மட பயிற்சியில் இருந்து ஒதுக்கப்பட்டேன். நான் நடத்தை தவறை நடந்துக் கொண்டதாக கூறினார்கள். ஆனால், என்ன காரணம் என்று ஒருவரும் சொல்லவில்லை. இதனால் என் கன்னியாஸ்திரி ஏற்கும் நிகழ்வு ஆறு மாதங்கள் தள்ளி போனது. இப்படியான செயல்களால், சம்பவங்களால் சிலர் பாதிக்கப்படுகிறார்கள். பலருக்கு இப்படியான விஷயங்கள் நடப்பது தெரிவதில்லை. சிலர் இதுதான் விதி என்று அச்சத்துடன் வாழ முனைகிறார்கள். சிலர் தற்கொலை செய்துக் கொள்வதும் உண்டு.

  கன்னி மடத்தை விட்டு வெளியரிய பின்...

  கன்னி மடத்தை விட்டு வெளியரிய பின்...

  40 ஆண்டு காலம் கன்னியர் மடத்தில் தங்கி கன்னியாஸ்திரியாக சேவை செய்து. ஒருக்கட்டதில் சகிக்க முடியாத சூழல்களை கடந்து, கன்னியர் மடத்தில் இருந்து வெளியேறிய போது, மேரியிடம் கன்னியாஸ்திரி உடைகள் மட்டுமே இருந்தனவாம். வேறு பணம், பொருள் என்று எதுவுமே இல்லை. ஏதாவது என்றால் ஆண்கள் மரத்தடியில் கூட படுத்துக் கொள்ள இயலும்.

  ஆனால், பெண்களால் அது இயலாது. தான் நன்கொடை பெறுவதற்காக பல வீடுகளுக்கு சென்றதாகவும். தன் ஒரே கனவு உதவி அற்ற குழந்தைகளை அரவணைத்து, அவர்களுக்காக ஆதரவற்றோர் இல்லம் உருவாக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. அதை நிறைவேற்றியும் இருக்கிறார். இவரது ஆதரவற்றோருக்கான இல்லம் வயநாட்டில் செயல்பட்டு வருகிறது.

  குடி!

  குடி!

  கன்னியாஸ்தி மற்றும் குருக்கள் பல சமயம் ஒயின் மற்றும் சில சமயங்களில் வெளிநாட்டு மதுபானங்களும் குடிப்பார்கள். அதற்கு பிறகு அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் தவறாக இருக்கும். அதற்காக அனைவருமே தவறானவர்கள் என்று கூறவில்லை.

  நிறைய நல்ல குருக்கள், கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள். அவர்கள் நிறைய நல்ல சேவை செய்து வருகிறார்கள். இளம் பெண்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று மேரி சில வருடங்களுக்கு முன் தான் அளித்தே பேட்டிகளில் கூறியுள்ளார்.

  இவரது "நன்ம நிரஞ்சவரே ஸ்வஸ்தி" (Nanma Niranjavare Swasthi) புத்தகத்தில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மலையாளத்தில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகம் கைராலி புக்ஸ் கன்னூர், கேரளாவில் கிடைக்கிறது.

  This Image Source: doolnews

  குறிப்பு: இந்த படத்தில் இருப்பவர் தான் உண்மையான சிஸ்டர் மேரி.

  All Other Image Source: Google

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Nanma Niranjavare Swasthi, An Autobiography of a Nun Talks about the Extreme Pain of her Life!

  Sister mary is served in catholic church. And she left congregation 13 years before because of disgusting experience. No she published Nanma Niranjavare Swasthi, An Autobiography of her life. which is Talks about the Extream Pain of her Life!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more