உங்க ராசிக்கு இந்த காதலர் தினம் எப்படி அமையும்ன்னு தெரிஞ்சுக்கலாமா?

Written By:
Subscribe to Boldsky

காதல் காற்றில் கலந்திருக்கிறது. அதை உணர தான் முடியுமே தவிர காண முடியாது. சிலர் அவரது சூழ்நிலை காரணமாக காதலை உணராமல் போகலாம். அதற்காக இந்த உலகில் காதலே இல்லை என்று கூறிவிட முடியாது.

காதலை மனதார ஏற்றுக் கொண்ட நபர்கள், காதலை வெளிப்படையாக கூற முடியாமல் தயங்கி வரும் நபர்களுக்கு காதலர் தினம் ஒரு திருவிழா. இந்த காதல் திருவிழா இந்த வருடம் எந்தெந்த ராசிக் காரர்களுக்கு, எப்படி அமையும் என்று தெரிந்துக் கொள்ளலாமா.

சில ராசிக் காரர்களுக்கு இந்த வருடம் காதல் அதுவாகவே அமைய வாய்ப்புகள் இருக்கிறது என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிலும் முக்கியமாக சிம்மம், கும்பம், மீனராசிக் காரர்களுக்கு அமோகமாக அமையுமாம் இந்த காதலர் தினம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிம்மம்!

சிம்மம்!

நீங்கள் கட்ன்தாஹ் ஜனவரி 31 அன்று நிகழ்ந்த ப்ளூ மூன் நிகழ்வுக்கு தான் நன்றி கூற வேண்டும். அதன் பிறகே சிம்ம ராசிக்கு காதல் வாழ்க்கை மேலோங்கி இருக்கிறது. இவர்களை சுற்றி இதமான சூழல் அமையவுள்ளது. காதலர் தினத்தன்று சரியாக என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியாவுடன் இருப்பார்கள்.

இன்பம் பொங்கும்

இன்பம் பொங்கும்

இவர்களிடம் ஒரு மாற்றம் தென்படும் அதிகமான காதல் உணர்வு வெளிப்படும். இவர்களிடம் இருக்கும் ஈகோ குணம் பின்தங்கி செல்லும். இவர்களது இதயம் காதலை அள்ளித்தெளித்து பரவ செய்யும். இவர்களை சுற்றி எல்லா நேரமும் இன்பம் பொங்கி வழியும்.

கும்பம்!

கும்பம்!

இவர்களது காதல் மேம்பட துவங்கும். வரும் காதலர் தினத்தன்று கும்ப ராசிக்காரர்களிடம் இருந்து அவர்களது சிறந்த குணங்கள் வெளிப்படும். இதன் மூலம் அவர்களது நாள் சிறப்பாக அமையும். இதற்கு மீன ராசியின் உதவியும் இருக்கும்.

நிலையான உறவு!

நிலையான உறவு!

இந்த காதலர் தினத்தன்று கும்ப ராசிக் காரர்களுக்கு நீண்ட நாள் நீடிக்கும் நிலையான உறவில் சேர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். காந்தத்தை போன்ற ஈர்ப்புக் கொள்ளும் உண்மையான காதலை இந்த காதலர் தினத்தன்று அவர்கள் தேரடிப் பிடிப்பார்கள்.

மீனம்!

மீனம்!

மீன ராசிக் காரர்கள் இந்த காதலர் தினத்தன்று ஒரு சீக்ரெட் சாண்டா போல இருப்பார்கள்.இதற்கு செவ்வாயின் தாக்கமும் ஒரு காரணம். மீனராசி காரர்கள் இந்த முறை காதலை பகிரவும், பரப்பும் நபர்களாக திகழ்வார்கள்.

தாக்கம்!

தாக்கம்!

காதலை முடிவிலியாய் பின்தொடரும் இந்த மீனராசிக் காரர்கள் செவ்வாயின் தாக்கத்தால் தனி சிறப்பு பெற்று திகழ்வார்கள். இவர்களது எல்லையற்ற காதல், தங்களை சுற்றி இருக்கும் அனைவரையும் நேசிக்க செய்யும்.

காதல் மட்டுமின்றி, எல்லா உறவுகள் மீதும் அதிக நேசம் செலுத்துவார்கள் மீனராசிக் காரர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

luckiest-zodiac-signs-during-valentine-s-day

3 Lucky Zodiac Signs For This Valentine’s Day
Story first published: Saturday, February 10, 2018, 10:37 [IST]
Subscribe Newsletter