மும்பை நடனவிடுதியில் ஆடிய பெண் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது!

Subscribe to Boldsky

மும்பை நகரம் என்று சொன்னாலே பல விஷயங்கள் நினைவுக்கு வந்தாலும் முதன்மையாக வந்து நிற்பது சிகப்பு விளக்குப் பகுதி மற்றும் இரவு நேர விடுதிகள் தான். மும்பையின் இரவு வாழ்க்கையை வண்ணமயமாக்குவதில் டான்ஸ் பார்களுக்கு தனி பங்குண்டு என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 2005 ஆம் ஆண்டு மும்பையில் இருக்கிற இரவு நேர நடன விடுதிகளை மூடக்கோரி உத்திரவிட்டது நீதிமன்றம்.

அந்த நடன விடுதி கலாச்சாரம் எப்படித் தோன்றியது. அதை முற்றிலுமாக மூடும் அளவிற்கு என்ன பிரச்சனைகள் நடந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் போன்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Courtesy

சாதாரண உணவு விடுதி, மது விடுதியாய் இருந்தவை போட்டி காரணமாகவும், வருகிற கஸ்டமர்களை ஈர்க்கும் விதமாகவும் முதலில் பெண் சப்ளையர்களை நியமித்தார்கள். பின்னர் அதுவே அந்தப் பெண்கள் நடனமாடி அவர்களை மகிழ்விக்கும் விதமாக உருமாறியது.

முதன் முதலாக இப்படியொரு நடன விடுதி இருக்கிறது என்று சொல்லி கண்டுபிடிக்கப்பட்டது 1980களில் ராய்கட் மாவட்டத்தில் இருக்கும் கஹல்பூரில் தான் முதல் நடன விடுதி இருந்தது.

#2

#2

Image Courtesy

முதலில் எந்த அலட்டலும் இருக்காது. இரவானால் அந்த நடனவிடுதி இருக்கிற பகுதியில் மட்டும் தொடர்ந்து ஆண்கள் வருகை தருவார்கள்.

மும்பையின் பல பகுதிகளிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டு முன்னரே அந்த நடனவிடுதியில் தயாராக வைத்திருப்பார்கள்.இரவு நிகழ்ச்சிக்காக மதியத்திலிருந்து தயாராக துவங்கிவிடுவார்களாம்.

#3

#3

Image Courtesy

ஆரம்பத்தில் 500 பெண்கள் வரை இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மும்பையில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட நடன விடுதிகள் இருக்கின்றன. அதோடு அங்கே 75000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கிறார்கள் என்ற தகவல் வெளியானது.

திடீரென்று எப்படி இந்த அசுர வளர்ச்சி என்று பலரது கவனமும் நடன விடுதிகளின் பக்கம் திரும்பியது.

#4

#4

Image Courtesy

கஹல்புர் மும்பை பூனே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஒர் இருட்டுப் பாதையில் வண்டிகள் சென்று மறையும். அந்த இருட்டு வழியே சென்றால் தான் நாம் நடன விடுதியை அடைந்திட முடியும்.

இரவு முழுவதும் குடி,ஆட்டம் என களைகட்டும். அதோடு தங்களுக்கு வேண்டிய,அல்லது தங்களுக்கு பிடித்தப் பெண்ணிற்கு பெட் கட்டி அழைத்துக் கொள்வார்கள். நிறைய சூதாட்டம் நடக்கத் துவங்கியது.

#5

#5

Image Courtesy

ஊர்மக்கள் யாரும் இருப்பதில்லை. பெயருக்கு வெளியில் உணவு விடுதி என்று போர்ட் மாட்டியாயிற்று போலீஸ் தொல்லையும் இல்லை அதோடு குடி,பெண்கள் என சகலத்தையும் அனுபவிக்கலாம் என்பதால் இந்த நடனவிடுதிகள் வெகு சீக்கிரத்திலேயே பிரபலமடைந்தன

நடன பெண்கள் ஆடுகையில் அவர்கள் மீது பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

#6

#6

Image Courtesy

பெண்களை ஊரிலிருந்து இங்கே அழைத்து வரவும் மறுநாள் காலையில் அவர்களை கொண்டு போய் விடவும் பஸ் அல்லது ஏதேனும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் சில பெண்கள், குறிப்பாக டாப் டான்ஸர் அந்தஸ்த்தில் இருக்கும் பெண்களுக்கு சர்வ சாதரணமாக ஒரு இரவுக்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும்.

அப்படிப்பட்ட பெண்கள் தனக்கென்று விலையுயர்ந்த கார், பாதுகாவலர் சகிதம் வந்து இறங்குவார்கள்.

#7

#7

Image Courtesy

இந்த நடன விடுதிகளால் பணப்புழக்கம் அதிகரிக்கிறது, அதோடு பெரிய பெரிய பணக்காரர்களின் தொடர்பு அவர்களின் தயவும் தங்களுக்கு கிடைக்கிறது என்பதை அறிந்தவர்கள். மெல்ல மெல்ல இது போன்ற நடன விடுதிகளை ஊருக்குள் கொண்டு வர ஆரம்பித்தனர்.

வழக்கம் போல பகல் நேரங்களில் அது குடும்பத்துடன் சாப்பிடக்கூடிய உணவு விடுதியாகவும் இரவில் மட்டும் நடன விடுதியாகவும் செயல்படத் துவங்கியது.

#8

#8

Image Courtesy

இந்த நடன விடுதிகளின் மூலமாக கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது என்ற விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. நடன மங்கையாக இருந்த தரனும் என்ற பெண் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் தான். கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் சிக்கியது.

#9

#9

Image Courtesy

தரனுமின் பணத்தின் கதையை பார்ப்பதற்கு முன்னால் தரனும் பற்றிய ஒர் சிறிய அறிமுகம். மும்பயில் 1992 ஆம் ஆண்டு போராட்டம் வெடிக்கிறது.அதில் தரனும் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமாகிறது.

அப்பா அம்மா, உடன் பிறந்தோருடன் மிலட் நகரில் இருக்கிற ஓர் தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கிறார்கள். மூன்று நாட்கள் உணவு இல்லை. அங்கிருந்து துறத்தப்பட வேறு போக்கிடம் இன்றி லோகண்ட்வாலா என்ற பகுதிக்கு வருகிறார்கள்.

#10

#10

Image Courtesy

அப்பா ஒர் இதய நோயாளி, அதோடு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டிருந்தது. உடன் பிறந்தவர்கள் எல்லாம் சிறிய குழந்தைகள். ஆக அம்மாவும், மூத்த மகளான தரனும் சேர்ந்து தான் இந்த குடும்பத்திற்காக ஏதாவது செய்தாக வேண்டும்.

உடனடித் தேவை அதோடு மிகவும் அவசியத் தேவையாக இருந்தது பணம். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருந்தார்கள் இருவரும்.

#11

#11

Image Courtesy

தரனும் அப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தார். அவருக்கு யார் வேலை கொடுப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்த போது தான். தரனுத்திற்கு நடன விடுதி குறித்து தெரிய வருகிறது.

குடும்பத்தினர் ஒரு வேலை உணவாவது திருப்த்தியாக சாப்பிட வேண்டும் நான் வருகிறேன் என்று அடம்பிடித்து செல்கிறார்.

#12

#12

Image Courtesy

முதல் நாள் குறைந்த ஆடைகளை அணியச் சொன்னார்கள். அங்கே இவரைப் போலவே ஏராளமான பெண்கள். மஞ்சள் மற்றும் சிகப்பு நிற ஒளியில் நடுவில் இவர்கள் ஆட இவர்களைச் சுற்றியும் ஆண்கள் எல்லாருமே பயங்கர போதையில் இருந்தார்கள்.

இவர்கள் ஆடும் இடத்திற்கு இரண்டு அடி தள்ளி ஒர் கோடு போட்டிருந்தார்கள். அந்த கோட்டைத் தாண்டி நடனப்பெண்கள் அடிக்கொண்டிருக்கும் பகுதிக்கு யாரும் வரக்கூடாது.

#13

#13

Image Courtesy

ஆனால் அந்த கோட்டினை யாரும் மதிக்கவில்லை. முதல் சில மணி நேரங்கள் மட்டும் அந்த ஆண்களிடமிருந்து எங்களை காப்பாற்றினார்கள். நேரம் செல்லச் செல்ல வலுக்கட்டாயமாக அந்த ஆண்களுக்கு இந்த பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள்.

தனக்குரிய பெண் இவள் தான், இவள் தான் இன்று எனக்கு வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள் அவர்களிடத்தில் பண மழையை கொட்டக்கூட வந்திருக்கும் ஆண்கள் தயங்கவில்லை.

#14

#14

Image Courtesy

தரனும் நடனம் ஆடத்துவங்கி ஓரே வருடத்தில் ஏகப்பிரபலமடைந்தார். ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் வரை நடனமாடினார். நடன விடுதிக்கு வருகிறவர்கள் தனிப்பட்ட முறையில் கஸ்டமர்களாக மாறினார்கள். அங்கேயும் பண வேட்டை தான்.

தரனுமிடம் வந்தவர்கள் எல்லாம் பணக்காரர்கள் மட்டுமல்ல மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்த பிரபலங்களும் இதில் அடக்கம். அரசியல்வாதிகள்,பாலிவுட் பிரபலங்கள், பிஸ்னஸ் பிரபலங்கள் என பலரும் தரனுத்திற்கு ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தார்கள்.

ஒதுங்கக்கூட இடமில்லாமல் தெருவில் குடும்பத்தினருடன் தவித்த அதே லோகண்ட்வாலா இடத்தில் விலையுயர்ந்த பங்களாவை வாங்கினார் தரனும்.

#15

#15

Image Courtesy

அளவுக்கு மீறி பணம் புரளத்துவங்கியது. சர்வதேச கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுப்பட்டார் தரனும். பாலிவுட் நடிகரான ஆதித்யா பஞ்சோலி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனை தரனுமமிடம் அறிமுகப்படுத்துகிறார்.

ஆஸ்திரிலேயா- இங்கிலிஸ் ஆசஸ் தொடரில் சீஃப் பெட்டிங் எக்ஸிகிட்டிவாக இருந்தார் தரனும்.

நடன விடுதியில் இருக்கும் ஒரு பெண் பாலிவுட் பிரபலம் கிரிக்கெட் பிரபலம் என எல்லாரையும் எப்படி இயக்க முடிகிறது. கிரிக்கெட் புக்கியாக எப்படி செயல்பட முடிகிறது என்று பலருக்கும் ஆச்சரியம்.

#16

#16

Image Courtesy

2005 ஆம் ஆண்டு இவ்விஷயம் சூடுபிடிக்கிறது . அரசாங்கம் தலையிடுகிறது. உடனடியாக மும்பையில் செயல்படுகிற நடனவிடுதிகளை எல்லாம் மூட உத்திரவிடப்படுகிறது. அதோடு கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தரனும் கைது செய்யப்படுகிறார். அவருடன் மேலும் இரண்டு புக்கிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

#17

#17

Image Courtesy

ஆனால் இந்த குற்றத்தை தரனும் ஒப்புக் கொள்ளவில்லை. கிரிக்கெட் சூதாட்டத்தில் நான் ஈடுபடவேயில்லை என்று கூறினார். 2008 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரை அணுகி தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பணம் மற்றும் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றார்.

நடன விடுதியில் பணியாற்றதை அவர் தவறாக ஒரு போதும் பார்க்கவில்லை. தன்னுடைய வழக்கை இவ்வளவு பூதகரமானதற்கு மீடியா தான் காரணம். ஆனால் ஒரு நாள் இவை அனைத்தும் பொய் என்று நிரூபிப்பேன் என்றார் தரனும்.

அத்தனை களேபரங்களைத் தாண்டி தரனும் இப்போது எங்கிருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எதுவும் தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync life
    English summary

    Life Story of a Mumbai Dance Girl Who Arrested For Cricket Betting

    Life Story of a Mumbai Dance Girl Who Arrested For Cricket Betting
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more