For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிகார தந்தை, தினமும் 5 முறை செக்ஸ்... இன்று உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழும் நடிகன், மனிதன்!

|

இவரை தி ரன்னிங் மேன் என்று செல்லமாக அழைப்பார்கள். விளையாட்டு, உடற்பயிற்சி என்றால் கொள்ளை பிரியம். பொதுவாக தன் மகனுக்கு ஏதாவது பிடித்திருந்தால், அவன் அதில் வெகுவாக ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தால் அவனை தட்டிக் கொடுத்து வளர்க்கும் தந்தையை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், தட்டிவிட்டு கனவை தகர்க்கும் தந்தையை பெற்றிருந்தார் இந்த பிரபலம்.

Life Of Famous Hollywood Actor and Former California Governor Arnold Schwarzenegger!

அப்பா காவலர். ஆனால், பெரும் குடிகாரர். கொஞ்ச காலம் நாசி படையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தார். அதனால் தான் என்னவோ, பெற்ற மகன்கள் மீது கடும் எதிர்ப்பும், விரோதமும், குரோதமும் காண்பித்துக் கொண்டிருந்தார். சிறு வயதில் இருந்தே ஒரு அசௌகரியாமான சூழலில் வளர்ந்தவர் இந்த பிரபலம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடுத்தடுத்த மரணம்...

அடுத்தடுத்த மரணம்...

1971ம் ஆண்டு இந்த பிரபலத்தின் உடன் பிறந்த சகோதரன் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். தந்தை 1972ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். பெற்ற தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை இவர்.

பாடி பில்டிங்!

பாடி பில்டிங்!

ஆஸ்திரியாவில் பிறந்த இவர், தந்தையின் கொடுமையால் தன் கனவான உடற்பயிற்சி, பாடி பில்டிங் செய்வதில் கொஞ்சம் தடுமாறினார். பாடி பில்டிங் மீது இருந்த அதே ஆர்வம் இவருக்கு விளையாட்டிலும் இருந்தது. பார்பெல் எனும் பளுதூக்கும் விளையாட்டு மற்றும் கால்பந்தாட்டம் ஆடுவதில் 14 வயதில் இருந்தே அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

ஜிம்!

ஜிம்!

விளையாட்டு ஒருபுறம், மறுபுறம் ஜிம்மே கதி என்று கிடந்தவர் இவர். ஒரு கட்டத்தில் விளையாட்டை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு.. முற்றிலும் ஜிம் தான் தன் வாழ்க்கை என்று தேர்வு செய்தார். இந்த தேர்வு தான் பிற்காலத்தில் இவரை உலகம் அறிய பெரும் காரணமாக அமைந்தது. உடற்பயிற்சியில் இன்டன்சிவ் பயிற்சி எனப்படும் கடுமையான முறையை பின்பற்றி தன் உடலை கட்டுமஸ்தாக உருவாக்கினார்.

15 வயதில்...

15 வயதில்...

15 வயதில் இருந்தே இவர் தான் ஒரு பாடி பில்டர் ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடும் பயிற்சிகள் மேற்கொண்டு தன் உடலை செதுக்கிய சிலை போல சிறப்பான வடிவத்திற்கு கொண்டு வந்தார். 17 வயதில் இருந்து பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார் இவர். இளம் வயதில் மிஸ்டர் யூனிவர்ஸ் பட்டம் வென்றவர் என சாதனை செய்தார். தொடர்ந்து ஐந்து முறை மிஸ்டர் யூனிவர்ஸ் மற்றும் 7 முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்று சாதித்தார்.

அர்னால்டு!

அர்னால்டு!

உடற்பயிற்சி செய்ய யாரவது மிகுந்த ஆர்வம் காட்டினால்... ஆமா, இவரு பெரிய அர்னால்டு.. என்று நாம் கேலி, கிண்டல் செய்ய உபயோகப்படுத்தும் சுப்பர் ஸ்டார் அர்னால்டு தான் அந்த தி ரன்னிங் மேன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட பிரபலம். கடும் சவால்கள். பெற்ற தந்தையாலேயே நிறைய கொடுமைகள் என்று தன் கனவுகளை எட்டிப்பிடிக்க பல கடுமையான சூழல்களை கடந்து வந்தவர் அர்னால்டு.

5 முறை செக்ஸ்!

5 முறை செக்ஸ்!

பாடி பில்டிங் செய்து வந்த காலத்தில் அர்னால்டு ஒரு நாளுக்கு ஐந்து முறை செக்ஸ் வைத்துக் கொள்வார். உடலுறவில் ஈடுபடுவது உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள உதவும் என்று அர்னால்டு கருதினார் என சக நடிகர் டாம் அர்னால்டு கூறி இருக்கிறார். அர்னால்டின் ஆசையை பூர்த்தி செய்ய அவரது அலுவலகத்திற்கு தினமும் பெண்கள் வந்து செல்வார்கள் என்றும் அவர் டெய்லி ஸ்டார் என்ற இணையத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஹாலிவுட்!

ஹாலிவுட்!

பாடி பில்டிங்கில் சாதித்த பிறகு ஹாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் அர்னால்டு. ஆரம்பத்தில் இவரது உடல்வாகினை பார்த்து இவரை எப்படி ஹீரோவாக போடுவது. இவரது உடல் தோற்றம் ஹீரோவிற்கான தோற்றம் இல்லை என்று பலரும் நிராகரித்தனர். குறைபாடாக கூறப்பட்ட அதே உடல்வாகினை தன் வலிமையாக மாற்றிக் கொண்டார் அர்னால்டு.

ஹெர்குலஸ்!

ஹெர்குலஸ்!

இவர் 1969ம் ஆண்டு ஹெர்குலஸ் இன் தி நியூயார்க் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் இவரது பெயர், அர்னால்டு ஸ்ட்ராங் மிஸ்டர் யூனிவர்ஸ் என்ற இடம்பெற்றது. ஆனால், ஒரு நடிகனாக அர்னால்டுக்கு பெயர் பெற்றுக் கொடுத்த திரைபபடம் ஸ்டே ஹங்ரி. இந்த படத்திற்காக கோல்டன் குளோபல் விருதினை பெற்றார் அர்னால்டு.

டெர்மினேட்டர்!

டெர்மினேட்டர்!

ஆரம்பத்தில் இவர் எப்படி ஒரு மெஷின் போல நடிப்பார் என்று பலரும் சந்தேகத்தினர். ஆனால், தனது பாடி பில்டிங் உடல்வாகினை வலிமையாக பயன்படுத்தி டெர்மினேட்டர் படத்தில் ஒரு கலக்கு கலக்கியிருந்தார் அர்னால்டு. தொடர்ந்து இவர் நடித்த கமாண்டோ, பிரடேட்டர், தி ரன்னிங் மேன், ட்வின்ஸ் என அனைத்து படங்களும் உலகளவில் பெரும் வெற்றிபெற்றன. இதில் ட்வின்ஸ் படத்தில் காமெடியில் தன் வேறுப்பட்ட திறமைய வெளிப்படுத்தி இருந்தார் அர்னால்டு.

கவர்னர்!

கவர்னர்!

பாடி பில்டிங்கில் தொடர்ந்து மிஸ்டர் யூனிவர்ஸ், மிஸ்டர் ஒலிம்பியா பட்டங்கள் வென்று, நடிப்பில் உலகிலேயே அதிக ஊதியம் வாங்கும் நடிகராக உயர்ந்து சாதித்த அர்னால்டு தொடர்ந்து அரசியல் களமும் கண்டார். தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டு வென்று கலிபோர்னியா கவர்னர் பதவி (2003 - 2011) வகித்தார் அர்னால்டு. அர்னால்டு கலிபோர்னியாவின் 38வது கவர்னர் ஆவார்.

மீண்டும் டெர்மினேட்டர்!

மீண்டும் டெர்மினேட்டர்!

தனது பதிவி காலத்தின் இறுதியில் இருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார் அர்னால்டு. தி எக்ஸ்பாண்டபில்ஸ், டெர்மினேட்டர் சீரீஸ் இவருக்கு மீண்டும் வெற்றி தேடி தந்தது. 17 வயதில் துவக்கிய தனது பயணத்தை 71 வயது வரையிலும் முடிவின்றி நடத்திக் கொண்டிருக்கிறார் அர்னால்டு.

சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார்!

நாம் சிலரை பிரபலமாக, சாதனையாளராக காண்கிறோம், பிரம்மித்து, வியப்படைந்து போகிறோம். ஆனால், அதற்கு பின்னணியில் அவர்கள் பட்ட கஷ்டமும் கடந்து வந்த கடினமான பாதையும் நாம் அறிவதில்லை.

சிறு வயதில் இருந்து பெற்றோர் துணை, அரவணைப்பு கூட இன்றி... தானாக சுயம்புவாக வளர்ந்து உலக அளவில் தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் அர்னால்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Of Famous Hollywood Actor and Former California Governor Arnold Schwarzenegger!

Life Of Famous Hollywood Actor and Former California Governor Arnold Schwarzenegger!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more