For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர் மரணம், ரூ. 50 வேலை, பீச், பஸ் ஸ்டாண்ட் தான் வீடு... இன்று சுப்பர் ஸ்டார் நடிகர்!

படிப்பை பாதியில் விட்டு, தெரு தெருவாய் அலைந்து சூப்பர் ஸ்டாரான நடிகர்...!

|

சிறு வயதில் தனது பெற்றோருடன் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் ஷாருக்கான். பொதுவாக மாணவர்கள் கல்வி அல்லது விளையாட்டு இவற்றில் ஏதேனும் ஒன்றில் தான் சுட்டியாகவும், சிறந்தும் திகழ்வார்கள். ஆனால், ஷாருக்கான் தனது பள்ளி பருவத்தில் இரண்டிலுமே சிறந்து விளங்கியவர். பள்ளி அணியில் ஹாக்கி மற்றும் கால்பந்தாட்டத்தில் ஷாருக்கான் சிறந்த வீரராக இருந்தார்.

இப்படி கல்வி மற்றும் விளையாட்டில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஷாருக்கான் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது அவரது கல்லூரி காலங்களில் தான். அப்போது தான் அவர் முதன் முறையாக நடிப்பில் ஆர்வம் கொண்டார். கல்லூரி நாட்களில் நாடகங்களில் நடிப்பத்தில் துவங்கி, தன்னை ஒரு நாயகனாக உருவாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார். மேலும், மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்த போது, பாதியிலேயே படிப்பை விட்டு நடிகனாகும் முயற்சியில் இறங்கினார் ஷாருக்கான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரணம்!

மரணம்!

பொதுவாகவே சினிமாவில் நடிகராவது என்பது பெரும் போராட்டம். ஆனால், வாழ்க்கை ஷாருக்கானுக்கு அந்த போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றது. திடீரென தந்தை புற்றுநோயால் மரணம் அடைந்தார். அடுத்த சில வருடங்களிலேயே ஷாருக்கானின் அம்மாவும் மரணம் அடைந்தார்.

ஐம்பது ரூபாய் வேலை!

ஐம்பது ரூபாய் வேலை!

அப்பா, அம்மாவின் மரணத்திற்கு பிறகு மிக வேகமாக கையில் இருந்த பணம் தீர்ந்தது. ஷாருக்கான் பெரும் பணவசதி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. ஆகையால், ஐம்பது ரூபாய் சம்பளத்திற்கு விழா நடக்கும் இடங்கில் சீட் அரேஞ் செய்வது மற்றும் வரவேற்கும் பணிகளை செய்ய துவங்கினார்.

தெருவில் திரிந்த காலம்...

தெருவில் திரிந்த காலம்...

மும்பையில் இன்று ஷாருக்கானின் சொத்து மதிப்பானது பல ஆயிரம் கோடிகளை தாண்டும். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் எட்டாவது இடத்தில் இருக்கிறார். ஆசியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆனால், மும்பை வந்த போது, தங்குவதற்கு அவருக்கு இடமில்லை, கையில் சுத்தமாக பணமே இல்லை என்ற நிலையில் இருந்தார்.

சிறுசிறு வேதங்கள்!

சிறுசிறு வேதங்கள்!

சினிமாவில் நடிக்க மும்பை வந்த ஷாருக்கான் ஆரம்பத்தில் டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் சின்ன, சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். கபி கஹான், கபி னா என்ற படத்தில் நடித்ததற்கு ஷாருக்கான் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் மட்டுமே.

படம் வெளியான நாளில் அதே படத்திற்கு ஷாருக்கான் டிக்கெட் விற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி தங்குவதற்கு இடமில்லாமல் பேருந்து நிலையம் மற்றும் கடற்கரையில் படுத்தும் உறங்கி இருக்கிறார்.

திருப்புமுனை!

திருப்புமுனை!

இப்படி வறுமையின் கடைநிலையில் இருந்த ஷாருக்கானின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது 1993ம் ஆண்டு... ஐந்தாண்டுகளாக பாலிவுட்டில் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த ஷாருக்கானுக்கு தீவானா படத்தின் மூலமாக கதாநாயகன் ஆகும் வாய்ப்பு. படம் மிகப்பெரிய வெற்றி, சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுகளும் வென்றார் ஷாருக்கான்.

வெற்றிகள்!

வெற்றிகள்!

வெற்றி பெரும் போதையை தரும் என்பார்கள். தீவானா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஷாருக்கானுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், தனது வறுமையை போக்கிக்கொள்வதற்காக அவர் அனைத்து படங்களிலும் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக தனது ஆசை, கனவுகளை அடைவதற்காக தேடி தேடி கதைகளை பிடித்தார்.

மன்னன்!

மன்னன்!

பிறகு, வேறு நடிகர்கள் ஒதுக்கிய கதைகளில் ஷாருக்கான் நடிக்க துவங்கினார். அவர்களுக்கு தவறாக பட்ட கணக்கு, ஷாருக்கானுக்கு வெற்றிகளை வாரிக்குவித்தன.. அடுத்தடுத்து அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி. பாலிவுட்டின் அசைக்க முடியாத நாயகனாகவும், இளம்பெண்கள் மனதில் காதல் மன்னனாகவும் உருவெடுத்தார் ஷாருக்கான்.

கிங்

கிங்

இன்று கிங் ஆப் கான், லிவுட் பாட்ஷா என்று புகழப்படும் ஷாருக்கான் பாலிவுட் வரலாற்றிலேயே பெரும் பணக்கார நடிகராக காணப்படுகிறார். ஷாருக்கானின் வாழ்க்கை மக்களுக்கு எடுத்துரைக்கும் பாடம் என்னவெனில், சுகமோ, சோகமோ, வெற்றியோ, துக்கமோ எதுவுமே வாழ்வில் நிலையானது அல்ல. அனைத்தும் கடந்து போகும். அதுதான் வாழ்க்கை. போராட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். போராடுங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Inspiring Story of Shah Rukh Khan

Shah Rukh Khan is the biggest super star of India. He is eight highest paying actor of world. And Second highest in Asia. But, His life is not so easy. He lost his parents, He struggled a lot in life to reach this position. andh here is the king of Khans Inspiring success story.
Story first published: Friday, July 6, 2018, 15:59 [IST]
Desktop Bottom Promotion