For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு!

  |

  அட! போங்கய்யா.... இப்படி தான் ஒருத்தர் நாலு வருஷத்துக்கு முன்ன உங்க எல்லாருடைய அக்கவுண்ட்லயும் லம்பா... ரூபாய் 15 இலட்சம் போடுவேன்னு சொன்னாரு... ஆனால், கையில இருந்த ஐநூறு, ஆயிரத்த பிடிங்கிட்டு விட்டது தான் பாக்கி.. நீ வேற எங்கள எமார்த்த பார்க்கிறியா? என்று சிலர் கோபித்துக் கொள்ளலாம்.

  அப்படி எல்லாம் யாரும் இங்கே உங்களை ஏமாற்றி விட முடியாது. கடவுள் நினைத்தாலே ஒழிய உங்கள் வங்கி கணக்கில் தினமும் 86,400 விழுவதை வேறு யாராலும் தடுக்க முடியாது, தட்டி பறிக்கவும் முடியாது. நீங்களாக உதாசீனப்படுத்தினாலும் இந்த பணம் உங்கள் கணக்கில் சேர்ந்துக் கொண்டே தான் போகும். அதை சரியாக செலவு செய்வதும், வீணாக விரயம் செய்வதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

  ஆனால், இந்த மாபெரும் தொகையை நீங்கள் செலவு செய்ய சில நிபந்தனைகளும் உண்டு...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நிபந்தனை #1

  நிபந்தனை #1

  தினமும் சொல்லி வைத்தார் போல.. நீங்கள் தூங்கி கொண்டிருந்தாலும் சரி, சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தாலும் சரி, அந்த பணம் யாரையும் எதிர்பாராமல் உங்கள் கணக்கில் வந்து விழுந்துவிடும்.

  ஆனால், அதை நீங்கள் முற்றிலும் செலவு செய்திட வேண்டும். இல்லை நாளைக்கு செலவு செய்து கொள்ளலாம் என்று சேமித்து வைக்க நினைத்தால்.. நீங்கள் செலவு செய்யாத அந்த பாக்கி பணம், தானாக மீண்டும் உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.

  ஆனால், நிச்சயம் மறுநாள் மீண்டும் அதே ரூபாய் 86,400 ரூபாய் மீண்டும் உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும். அந்த 15 இலட்சம் மாதிரி உங்களை யாரும் ஏமாற்ற மாட்டார்கள்.

  நிபந்தனை #2

  நிபந்தனை #2

  நம்ம அக்கவுண்ட்ல இருந்தா தானே... பாக்கி இருக்க பணத்த மறுநாள் கேட்காம எடுத்திடுவாங்க.. அத மனைவி, மச்சான், கொழுந்தியா, பொண்ணுகொடுத்த வீட்டுக் காரங்க, பொண்ணு எடுத்து வீட்டுக் காரங்க அக்கவுண்ட்ல போட்டு கருப்பு பணம் ஆக்கிடலாம்ன்னு பிளான் போடாதீங்க... உங்க அக்கவுண்ட்ல போடப்பட்ட பணத்துல இருந்து ஒரு பைசா கூட டிரான்ஸ்பர் பண்ண முடியாது. இன்கம்மிங் ஃப்ரீ, அவுட்-கோயிங் போகாது.

  நிபந்தனை #3

  நிபந்தனை #3

  ஆனா, ஒண்ணுங்க.. உங்கனால முடிஞ்ச வரைக்கும் தினமும் அந்த 86,400 ரூபாய தண்ணியா செலவு பண்ணலாம். அலுப்பு இல்லாம, சோர்வடையாம... ஏன் பொழுதுபோக்கா செலவு பண்ணலாம், கஷ்டப்பட்டு செலவு பண்ணலாம். கிரியேடிவ்வா கூட செலவு பண்ணலாம். ஆனால், வீண் பண்ணிட்டீங்கன்னா அப்பறம் அதுக்கு கம்பெனி ஜவாப்தாரி ஆகமுடியாது. அதையும் மனசுல கவனமா வெச்சுக்குங்க.

  நிபந்தனை #4

  நிபந்தனை #4

  இங்கே முக்கியமான விஷயம் என்னன்னா... உங்கள கேட்காமலேயே இந்த தினமும் 86,400 ரூபாய் பணம் போடுற கேம் நின்னுடலாம். நான் சரியா தானே ரூல்ஸ் ஃபாலோ பண்ணேன். அப்பறம் எண்ணன் ஏன் எவிக்ட் பண்ணீங்க... எலிமினேட் பண்ணீங்கன்னு எல்லாம் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. பிக்பாஸ் வீட்டுல மக்கள் கிட்ட நிறையா ஒட்டு வாங்கியும் நித்யா எவிக்ட் ஆனமாதிரி தான் நம்ம கேமும். சில சமயம் யாஷிகா போன்ற ஆட்கள் ஓட்டு வாங்காட்டியும் கேம்ல தொடருவாங்க.. சிலர் நல்ல விளையாடுனாலும் நடுவுலே எலிமினேட் ஆகுற வாய்ப்புகள் உண்டு.

  நிபந்தனை #5

  நிபந்தனை #5

  கேம் முடிஞ்ச பின்ன, வைல்டு கார்ட் என்ட்ரி இருக்கான்னு எல்லாம் கேட்கப்பிடாது... இங்கே ஒரு தடவ கேம் ஓவர்னா ஓவர் தான். ரெண்டு மூணு லைப் எல்லாம் இல்ல. இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருங்க... முடிஞ்ச வரைக்கும் தினமும் உங்க அக்கவுண்ட்ல போடப்படுற அந்த 86,400 ரூபாய் பணத்த என்ஜாய் பண்ணி செலவு பண்ணுங்க. அதுதான் உங்களுக்கு இருக்க ஒரே வாய்ப்பு.

  என்ன பண்ணுவீங்க...

  என்ன பண்ணுவீங்க...

  தினமும் 86,400 ரூபாய்.. முதல் நாள் ஐ-போன் வாங்கலாம்.. அப்பறமா கொஞ்சம், கொஞ்சமா பிடிச்ச பைக், கார், வீடு எல்லாம் வாங்கிடலாம்ன்னு பல திட்டம் இருக்கும். அதுக்கப்பறம்.. உங்களுக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சுக்கிட்ட பின்ன, உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பிடிச்சது.. அவங்க விருப்பத்த நிறைவேற்றலாம்.. அவங்க கூட சேர்ந்து செலவு பண்ணலாம்.

  அதுக்கும் அப்பறம்... நமக்கு தெரியாதவங்க.. மூணாவது மனுஷங்க.. கஷ்டப்படுறவங்களுக்கு கூட கொஞ்சம் உதவி பண்ணலாம். எப்படியும் மிச்சம் மீதி வைக்க முடியாதுன்னு ரூல்ஸ் இருக்கும் போது செலவு பண்ணி தானே ஆகணும். அத யாருக்கு பண்ணா என்னனு ஒரு மனப்பான்மை வரும்.. பரவாயில்ல... இது ஒரு நம்ம மனப்பான்மை தான். இத விளையாட்டுன்னு நினைச்சா விளையாட்டு.. வாழ்க்கைன்னு நினைச்சா வாழ்க்கை.

  காலம்!

  காலம்!

  ஆமாங்க! நம்ம எல்லாருடைய வாழ்க்கையிலையும் காலம் தினமும் 86,400 வினாடிகள் டெபாசிட் பண்ணிக்கிட்டே தான் இருக்கு. ஆனா, நாம தான் நமக்கு எதுவுமே கிடைக்கல.. மத்தவங்க மட்டும் நல்லா இருக்காங்கன்னு புலம்பிக்கிட்டே இருக்கோம். சிலருக்கு இந்த 86,400 வினாடிகள் ஒரு நாளுக்கு பத்த மாட்டேங்குது.. சிலர் அதான் நாளைக்கும் கிடைக்குமேங்கிற ஒரு அசால்ட்ல வீணடிச்சுகிட்டு இருக்காங்க.

  எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் சரி, தங்க வீடு இல்லாம பிளாட்பாரம்ல படுத்து தூங்குற ஆளா இருந்தாலும் சரி... எல்லாருக்கும் காலம் கொடுக்குற ஒரு வாய்ப்பு தான் இந்த 86,400 வினாடிகள். இத சரியா பயன்படுத்துனா பிளாட்பாரம்ல இருக்கவங்களும் கோபுரத்துக்கு போகலாம். சரியா பயன்படுத்த தெரியாட்டி கோபுரத்தல இருக்கவங்களும் பிளாட் பாரத்துக்கு தள்ளப்படலாம்.

  முடிவு!

  முடிவு!

  முடிவு யாருக்கு வேணாலும் எப்படி வேணாலும் வரலாம். அது விபத்தா, நோயா, கர்மாவா... இல்ல இயற்கையா கூட இருக்கலாம். இத யாராலும் தடுக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. ஆனா, ஒன்னு போராடலாம். போராடி ஜெயிச்சவங்க நிறையா பேர் இருக்காங்க.

  இந்த 86,400 வினாடிகள முழுமையா செலவு பண்ண முடியாட்டியும்.. முடிஞ்ச வரைக்கும் அதை நேர்மையா, யாரையும் துன்புறுத்தாம.. தவறு செய்யாம செலவு பண்ண பாருங்க. நிச்சயமா, அந்த காலம் கூட உங்கள மறக்க முடியாத ஒரு ஆளா நினைவுல வெச்சுக்கும். இப்படி காலத்த ஜெயிச்ச பலர நாம வாழ்க்கையில பார்த்திருக்கோம்.

  நல்லதே நினைத்தால்.. நல்லதே நினைக்கும்... இதையே தான் நியூட்டனின் மூன்றாவது விதியும் சொல்லுது... ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர் வினை உண்டு. அந்த வினை சரியானதா இருந்தா.. சரியான வினை பரிசா கிடைக்கும். இல்லாட்டி என்ன நடக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Inspirational Story: You Will Get 86400 Rupees Daily in Your Bank Account.

  Inspirational Story: You Will Get 86400 Rupees Daily in Your Bank Account. But There are few Terms and Conditions, To Utilise that amount.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more