இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து வரும் இளம் பெண், காரணம் தெரிஞ்சா அசந்துப் போயிடுவீங்க!

By Staff
Subscribe to Boldsky

மார்கழி மாசம் குளிர்ல சிலர காலையில எழுந்திருக்க சொன்னாலே நடுங்குவாங்க. இதுல அவங்கள பச்ச தண்ணியில குளிக்க சொன்னா செத்தேப் போயிடுவாங்க. குளிர்னாலே மனுஷங்களுக்கு அலர்ஜி தானுங்களே. நம்ம ஊருக்கே இப்படின்னா வெஸ்டர்ன் நாடுகளுக்கு எல்லாம் போனோம்னா... பனிபொழியும். மைன்ஸ் டிகிரி எத்தன ஸ்வெட்டர் போட்டாலும், அத எல்லாம் தாண்டி வந்து குளிரூட்டும்.

அப்படியான குளிர்ல, பனி பொழிவுல உங்கள வெறும் ஷர்ட், பேண்ட் போட்டுட்டு வெளிய போக சொன்னாலே கால் நடுங்கும். அதாவது சொன்னாலே கால் நடுங்கும். ஆனால், உக்ரைன் நாட்ட சேர்ந்த இன்னா விளாடிமிர்ஸ்காயாங்கிற வயசுப்பொண்ணு நடுங்குற குளிர்ல பிறந்த மேனியா ஜாகிங், ரன்னிங், உடற்பயிற்சி எல்லாம் பண்றாங்க. அதுக்கு எல்லாரையும் அசர வைக்கிற மாதிரி ஒரு காரணமும் சொல்றாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர் ஆற்றில்!

குளிர் ஆற்றில்!

உக்ரைனில் இருக்கிற கியீவ் எனும் ஆறு. இந்த பனி சூழ்ந்த ஆற்றில் தான் வெற்றுடலுடன் குளித்து தனது உடற்பயிற்சியை ஆரம்பிக்கிறார் 32 வயதான இன்னா விளாடிமிர்ஸ்காயா. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று நிர்வாணமாக அந்த கடும் குளிரில் ஜாகிங் செய்வதை தவறாமல் பின்பற்றி வருகிறார் இன்னா விளாடிமிர்ஸ்காயா.

Image Source: Instagram / innuskavladimirskaya

ஒன்பது வருடங்களாக...

ஒன்பது வருடங்களாக...

இன்னா விளாடிமிர்ஸ்காயா இதை ஏதோ ஓரிரு வாரமாக கடைப்பிடித்து வருகிறாரா என்று விசாரித்தால். இயற்கையோடு, இயற்கையாய் வாழ்ந்து வரும் இன்னா விளாடிமிர்ஸ்காயா கடந்த ஒன்பது வருடமாக கடும் குளிரில் நிர்வாணமாக ஜாகிங் சென்று வருகிறார்.

குளிர் மைனஸில் எத்தனை கீழே போனாலும், ஒரு வருடம் கூட தவறாமல் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார் இன்னா விளாடிமிர்ஸ்காயா.

Image Source: Instagram / innuskavladimirskaya

இளமை, ஆரோக்கியம்!

இளமை, ஆரோக்கியம்!

கடும் குளிரில் இன்னா விளாடிமிர்ஸ்காயா இப்படி விசித்திரமாக உடற்பயிற்சி செய்வதை கண்டு பலரும் வியக்கிறார்கள். இவர் இப்படி உடற்பயிற்சி செய்வதை எட்டிப் பார்க்க கூட அங்கே ஒருவரும் வர மாட்டார்கள். காரணம், அங்கே குளிர் அவ்வளவு கடுமையாக இருக்கிறது. ஆனால், இப்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் தான் மிகவும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் என்கிறார் இன்னா விளாடிமிர்ஸ்காயா.

Image Source: Instagram / innuskavladimirskaya

புகைப்பட கலைஞர்!

புகைப்பட கலைஞர்!

உள்ளூரை சேர்ந்த பலரும் இப்படி ஒரு பழக்கத்தை இன்னா விளாடிமிர்ஸ்காயா என்ற இளம்பெண் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறார் என்பதை கூறுவதை அறிந்த செக் குடியரசை சேர்ந்த புகைப்பட கலைஞர் டேவிட் டெஸின்ஸ்கி அந்த கிரேசியான பெண்ணை புகைப்படம் எடுக்க சென்றார்.

Image Source: Instagram / innuskavladimirskaya

வழக்கம்!

வழக்கம்!

முதலில் பனிபொழிவு நிறைந்த இடத்தில் ஜாகிங் முடித்த பிறகு குளிர்ந்த கியீவ் ஆற்றில் நிர்வாணமாக குளிக்கிறார் இன்னா விளாடிமிர்ஸ்காயா. அதில் நீச்சல் பயிற்சியும் மேற்கொள்கிறார். இப்படி கடும் குளிரில் நிர்வாணமாக பயிற்சி மேற்கொள்வதால் தனது உடல் உறுப்புகளுக்கு இரத்தம் சீராக செல்கிறது என்றும். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீரடைகிறது என்றும். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தசைகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் அமைகிறது என்று இன்னா விளாடிமிர்ஸ்காயா கூறுகிறார்.

Image Source: Instagram / innuskavladimirskaya

கணவருடன்...

கணவருடன்...

32 வயதான இன்னா விளாடிமிர்ஸ்காயா திருமணமானவர். பெரும்பாலும் தனியாக செல்லும் இன்னா விளாடிமிர்ஸ்காயா, சில சமயம் தனது கணவரின் உதவியோடும் இந்த விசித்திர பயிற்சிக்கு செல்கிறார். இந்த பயிற்சிகள் துவங்கியதில் இருந்து இதுநாள் வரை இன்னா விளாடிமிர்ஸ்காயாவிற்கு தசை வலி, மூட்டு வலி வந்ததே இல்லையாம் மேலும், தனது சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது என்றும் கூறுகிறார். இப்படியான பயிற்சி என் சருமத்தில் அதிக ஆக்சிஜன் ஊடுருவ உதவுகிறது என்றும் கூறுகிறார்.

Image Source: Instagram / innuskavladimirskaya

அதிக நேரமும் கூடாது...

அதிக நேரமும் கூடாது...

இன்னா விளாடிமிர்ஸ்காயா பார்பதற்கு 32 வயது பெண் போல அல்லாமல், பதின் வயது பெண் போல தான் காட்சியளிக்கிறார். மேலும், "நான் நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் இருக்க மாட்டேன். அதில் எப்போதும் கவனமாக இருப்பேன். நீரை விட்டு வெளியே வந்தவுடன் உடலை முழுவதும் துளி நீர் இல்லாமல் துடைத்துக் கொள்வேன். பிறகு, என் காரில் சென்று இதமான வெட்பத்தை அடைவேன் என்றும் இன்னா விளாடிமிர்ஸ்காயா கூறியுள்ளார்.

Image Source: Instagram / innuskavladimirskaya

மருத்துவர்கள்!

மருத்துவர்கள்!

இன்னா விளாடிமிர்ஸ்காயா பின்பற்றி வரும் இந்த வழக்கமானது மிகவும் தனித்துவமானது. இப்படியான வழக்கத்தை இதற்கு முன் யாராவது கடைப்பிடித்துள்ளனரா என்பதற்கு சாட்சியங்கள் எதுவும் இல்லை.

தனது உடலுக்கு, ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறது என்பதால் இன்னா விளாடிமிர்ஸ்காயா இதை பின்பற்றி வருகிறார். இவர் பின்பற்றி வரும் இந்த முறைக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இருக்கின்றனவா என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

மேலும், இவரை போல அனைவரும் இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் உகந்தது அல்ல. அவரவர் உடல்நலம் மற்றும் மருத்துவ நிலை குறித்து இப்படி கடும் குளிரில் நிர்வாணமாக பயிற்சி செய்வது சிலருக்கு ஆபத்தாக கூட முடியலாம்.

Image Source: Instagram / innuskavladimirskaya

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Inna Vladimirskaya, Tried this Adventure Only to get a Younger and Glowing Skin!

    Inna Vladimirskaya, Tried this Adventure Only to get a Younger and Glowing Skin!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more