இந்து மதத்தில் பின்பற்றி வரும் நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் ஆச்சரியங்கள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டு இருந்தனர். சிலை வழிபாடுகள், இரவில் நகம் வெட்டக் கூடாது, போகும் போது பூனை குறுக்கே வரக் கூடாது, செவ்வாய் கிழமை முடி வெட்டக் கூடாது போன்ற நிறைய மூட நம்பிக்கைகளை கொண்டு இருந்தனர்.

ஆனால் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பின்னாடி நிறைய ஆச்சரியமூட்டும் உண்மைகளும் பொதிந்து இருக்கத்தான் செய்கின்றனர்.இதை அறியாத நாம் தான் அவர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கைகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

சரி வாங்க இப்பொழுது அவர்கள் பின்பற்றிய சில நம்பிக்கை விஷயங்களை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இந்து நம்பிக்கையின் அறிவியல் உண்மைகள்

இந்து நம்பிக்கையின் அறிவியல் உண்மைகள்

அந்த காலத்தில் அறிவியல் பற்றிய விவரங்கள் மக்களிடையே குறைவாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் நிறைய அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். தங்களின் அனுபவம் போன்றவற்றால் அவர்கள் கத்துக் கொண்ட விஷயங்கள் தான் அதிகம். நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று சொல்வார்கள்.

இதற்கு காரணம் இரவில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயுவை வெளியேற்றுவதால் அதை சுவாசிக்கும் போது உடல் நலம் கெடும் என்ற அறிவியலை உணர்ந்து தான் சொல்லி வைத்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் அறிவை விட அனுபவ அறிவு அதிகமாக இருந்துள்ளது.

கிரகணம்

கிரகணம்

சூரிய மற்றும் சந்திர கிரகணம் போது வெளியே வரக் கூடாது மற்றும் சாப்பிடக் கூடாது போன்ற நம்பிக்கைகளை அவர்கள் பின்பற்றினர். இதை இப்பொழுது நாம் கடைபிடிப்பதே இல்லை.

அவர்கள் காரணம் இல்லாமல் இதைச் சொல்லவில்லை. சூரிய மற்றும் சந்திர கிரகணம் போன்ற நாட்களில் வெளிப்படும் கதிர்வீச்சு நமது உடலை பாதிப்பதோடு கண் பார்வை குறைபாடையும் ஏற்படுத்துமாம்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் இல்லாத பூமி எப்படி இருக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க் கிருமிகளின் ஆதிக்கத்துடன் காணப்படும். எனவே தான் கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது என்றும் அதில் கிருமிகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காக இதை கூறியுள்ளனர்.

லெமன் மற்றும் மிளகாய் திருஷ்டி

லெமன் மற்றும் மிளகாய் திருஷ்டி

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் திருஷ்டிக்காக வீட்டின் நுழைவாயிலில் மிளகாய் மற்றும் லெமன் கொண்டு திருஷ்டி கயிறு கட்டி இருப்பர்.

மோலோட்டமாக இப்பொழுது பார்த்தால் இது ஒரு மூட நம்பிக்கை மாதிரி தோன்றும். ஆனால் இதன் அறிவியல் உண்மை சார்ந்தது. ஆமாங்க எலும்பிச்சை மற்றும் மிளகாய் இரண்டிலும் விட்டமின் சி அதிகம் அடங்கிய பொருட்கள் இவை இரண்டும் நோய்க்கிருமிகளை எதிர்த்து செயல்படக் கூடியது.

எனவே வீட்டை எந்த நோய்களும் அண்டாமல் இருக்கவும், இந்த பொருட்களை உணவில் அதிகமாக பயன்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இதைச் செய்தனர்.

ஏணிக்கு அருகில் போகக் கூடாது

ஏணிக்கு அருகில் போகக் கூடாது

ஏன் ஏணிக்கு அருகில் போகக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா. சில சமயங்களில் ஏணி சாய்ந்து ஏதாவது விபத்து ஏற்படலாம். இதனால் நாம் காயமடையக் கூடும். அதனால் தான் ஏணிக்கு அருகில் செல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லியுள்ளனர்.

 ஏன் கோவிலில் மணி அடிக்கப்படுகிறது

ஏன் கோவிலில் மணி அடிக்கப்படுகிறது

நாம் கோவிலுக்கு செல்லும் போதும் பூஜை நேரங்களிலும் மணி அடிக்கப்படும். ஏன் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது எனத் தெரியுமா. நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே இந்த கோயில் மணியை காட்மியம், ஜிங்க், காரீயம், தாமிரம், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற உலோகங்களால் வடிவமைத்துள்ளனர்.

இந்த உலோகங்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. இவைகள் நம்மை சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை இழுத்து நம் மூளையில் நேர்மறை எண்ணங்களை தூண்டச் செய்கிறது. இந்த மணி ஒலி நமது மூளையில் ஏழு நிமிடங்கள் நிலைத்து நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் ஒருங்கிணைத்து மூளையின் சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது.

சாவு வீட்டிற்கு சென்று வந்த பின் ஏன் குளிக்க வேண்டும்

சாவு வீட்டிற்கு சென்று வந்த பின் ஏன் குளிக்க வேண்டும்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது ஒரு அங்கமும் கூட. ஆனால் இறப்பு என்பது இயற்கையாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது விபத்திலோ நடக்கலாம். இப்படி நடக்கும் ஒருவரின் இறந்த உடலை காணச் செல்லும் போது நமக்கும் நோய்க் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் இறப்பிற்கு சென்று வந்த பின் குளிக்க வேண்டும் என்ற சம்பிராயத்தை அந்த காலத்தில் மக்கள் கடைபிடித்து வந்துள்ளனர்

மாதவிடாய் பெண்கள் எதையும் தொடக் கூடாது

மாதவிடாய் பெண்கள் எதையும் தொடக் கூடாது

அந்த காலத்தில் உள்ள நம் முன்னோர்கள் பெண்களின் உடல்நிலையை நன்கு உணர்ந்து வைத்து இருந்தனர். எனவே தான் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு, சோர்வு, டென்ஷன், வயிற்று வலி மற்றும் மன அழுத்தம் இவைகள் இருக்கும் எனவே அவர்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது என்று சொல்லி வைத்தனர். ஆனால் நாம் இதை தற்போது தீட்டு என்ற பெயரில் மட்டுமே புரிந்து கொண்டு இருக்கிறோம்.

பாம்பு தலையை ஏன் நசுக்க வேண்டும்

பாம்பு தலையை ஏன் நசுக்க வேண்டும்

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்துள்ளது. முதலில் பாம்பின் தலையை பிடித்து அடித்தால் தான் அதனால் விஷத்தை தெளிக்க முடியாது என்பதனாலும் அதனால் நகர முடியாது என்பதனாலும் தான் பாம்பை தலையை பிடித்து நசுக்க வேண்டும் என சொல்லி வைத்தனர்.

ஆனால் பாம்பு படம் எடுத்து குடும்பத்தை பழி வாங்கி விடும் என்பது எல்லாம் நாம் கட்டி விட்ட கற்பனைகள்.

துளிசி இலைகளை ஏன் மென்று திண்ணக் கூடாது

துளிசி இலைகளை ஏன் மென்று திண்ணக் கூடாது

நமது இந்து மதத்தில் துளசி இலை கடவுளின் புனிதமான ஒரு வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. மேலும் அவை நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாகவும் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட துளிசி இலைகளை நாம் முழுங்கலாம் ஆனால் மென்று திண்ணக் கூடாது.

ஏனெனில் இந்த துளசி இலைகளில் மெர்குரி என்ற பொருள் அதிகமாக இருப்பதால் இவை நமது பற்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த உண்மையை அறிந்து தான் நம் முன்னோர்கள் துளசியை மென்று திண்ணக் கூடாது என்று சொல்லி வைத்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts behind Hindu's beliefs

Facts behind Hindu's beliefs
Story first published: Tuesday, January 9, 2018, 8:33 [IST]