For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜீ டீவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ரேயா கோஷல்...

ஸ்ரேயா கோஷல், இந்தியாவின் பின்னணி பாடகி ஆவர். குறிப்பாக இவர் இந்தி படங்களில் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

|

ஸ்ரேயா கோஷல், இந்தியாவின் பின்னணி பாடகி ஆவர். குறிப்பாக இவர் இந்தி படங்களில் பல பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், அஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, போன்ற மொழிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய குரலைக் கேட்டு ரசிகர்கள் மெய் மறந்து இருப்பதை பார்த்திருக்கிறோம்.

intresting facts about Shreya Ghoshal

4 முறை தேசிய விருது, 6 முறை பிலிம் பேர் விருது, 5 முறை சிறந்த பெண் பின்னணி பாடகி விருது, 9 முறை தென்னிந்திய பிலிம் பேர் விருது, 3 முறை கேரளா மாநில விருது, 2 முறை தமிழ் நாடு மாநில விருது மற்றும் இன்னும் பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரேயா கோஷல்

ஸ்ரேயா கோஷல்

இவருடைய முதல் குரு இவரின் தாயார். ஸ்ரேயா தன்னுடைய 4 வயதில் இசையைக் கற்கத் தொடங்கினார். அவர்களின் க்ளப் ஆண்டு விழாவில் முதன்முதலாக மேடை ஏறினார். ஸ்ரேயா 6 வயதில் முறைப்படி ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பயிலத் தொடங்கினார். பின்னாட்களில், பின்னணி இசையில் பாடுவதற்கான பயிற்சியை பத்மஸ்ரீ லேட்.திரு.கல்யாண்ஜி அவர்களிடம் கற்றுக் கொண்டார். பிறகு அவர் மும்பைக்கு குடியேறினார். அதன் பிறகு லேட்.முக்தா பீதேஜி அவர்களிடம் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்.

1995ம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குரலிசைப் போட்டியில் வெற்றி பெற்றார்.

ஜீ டீவி சரிகமப

ஜீ டீவி சரிகமப

ஸ்ரேயா கோஷலின் முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி EL தொலைக்காட்சியில் "ஆவாஸ் நயி அந்தாஸ் வோஹி" என்ற நிகழ்ச்சி ஆகும். ஸ்டூடியோ பதிவுகளில் இது அவரது முதல் அனுபவம்

ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பான "ச ரி க ம ப" என்ற இசை நிகழ்ச்சி தான் இவருடைய வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கியது. 75வது குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பகுதியில் அவர் வென்று, அந்த குழந்தைகள் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலும் அவரே வென்றார்.

இசைப்பயணம்

இசைப்பயணம்

ச ரி க ம ப வின் இறுதி போட்டியில் இவர் வென்றதில் இருந்து இவருடைய இசைப் பயணம் தொடங்கியது. முதன் முதலில் "தேவதாஸ்" என்ற திரைப்படத்திற்காக இவர் பாடல் பாடினார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது, சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம் பேர் விருது, சிறந்த இசைத் திறமைக்கான ஆர் டி பர்மன் பிலிம் பேர் விருது போன்ற விருதுகள் இவருக்கு கிடைத்தது.

போட்டி நடுவர்

போட்டி நடுவர்

அர்ஜித் சிங், ஏ.ஆர்.ரஹ்மான், அடிப் அஸ்லம் மற்றும் மோஹித் சௌஹான் ஆகியோரைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் சாவ்ன் (இந்திய இசை ஸ்ட்ரீமிங் சேவையில்) மிகவும் பிரபலமான கலைஞராக ஸ்ரேயா கோஷல் அறிவிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி "வாய்ஸ் ஆப் இந்தியா - சோட்டே உஸ்தாத்" என்ற நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் போட்டியாளராக இருந்தவர், பிற்காலத்தில் நீதிபதியாக வந்து சாதனை படைத்தார்.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

பாலிவுட்டில் 26 வயதில் நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒரே கலைஞர் ஸ்ரேயா கோஷல் ஆவார். பிப்ரவரி 5, 2015ம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் தோழரான ஷீலாதித்யா முக்ஹோபாத்யாய் என்பவரை மணமுடித்தார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts about melody queen Shreya Ghoshal

Shreya Ghoshal is an amazing Indian playback singer who mainly sings in Hindi films.
Story first published: Tuesday, May 15, 2018, 13:54 [IST]
Desktop Bottom Promotion