எமிலி ரோஸ், தொடர்ந்து 67 முறை பேயோட்டப்பட்ட கன்னிப்பெண் பரிதாப மரணம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

எமிலி என்று அழைக்ப்பட்ட இந்த பெண்ணின் இயற்பெயர் அன்னலிஸ் எலிசபெத் மிஷல். இவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண். இவர் 1952ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தவர். இவர் பிறப்பு மட்டுமே நார்மலாக இருந்தது. இவர் வளர, வளர அப்நார்மலாக மாற துவங்கினார்.

எமிலியின் குடும்பத்தார் கடுமையாக கத்தோலிக்க மதத்தை பின்பற்றி வந்தவர்கள். வழிபாட்டு முறைகளில் எல்லை மீறமாட்டார்கள். தங்கள் மதத்தில் கூறப்பட்டிருந்த ஒவ்வொரு விஷயத்தையும் நூறு மடங்கு நம்பி வந்தனர்.

Anneliese Michel Aka Emily Rose, A Soul The Lost by Catholic Exorcism!

Cover Image: wikipedia

மேலும், ஒருவர் செய்த பாவத்திற்கு பரிகாரமாக வாழ்க்கையில் அவதிப்பட வேண்டும் என்றும் நம்பி வந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடும் நம்பிக்கை!

கடும் நம்பிக்கை!

இப்படியான மத நம்பிக்கை காரணங்களால். எமிலி குடும்பத்தார் கடுங்குளிர் காலத்திலும் வெறும் தரையில் படுத்து உறங்கும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர்.

அப்போது தான் எமிலிக்கு தனது பதின் வயதில் ஒருமுறை திடீரென வலிப்பு நோய் வந்தது.

மருத்துவர்கள்!

மருத்துவர்கள்!

மருத்துவர்கள் எமிலிக்கு வந்திருப்பது வலிப்பு நோய் தான் என்றும், இதன் பக்கவிளைவுகளாக, இவருக்கு மாயத்தோற்றம் (Hallucination) மற்றும் திடீர் மனநிலை மாற்றங்கள் (Mood Swings) ஏற்படும் என்றும் கூறினார்கள்.

ஆனால், ஒருக்கட்டத்தில் எமிலியின் வலிப்பு மிகவும் அதிகரிக்க துவங்கவே, அவளை மனநல மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு அழைத்து சென்றனர் எமிலியின் பெற்றோர்.

பேய் தோற்றங்கள்!

பேய் தோற்றங்கள்!

அந்த காலக்கட்டத்தில் தான் எமிலி தன்னை சுற்றி சில சமயங்களில் பேய் உருவ தோற்றங்கள் போன்ற பிம்பங்களை காண துவங்கினாள். இது அவளுக்குள் அச்சம் மற்றும் பதட்டம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

மேலும் எமிலி, தான் காணும் பேய் போன்ற உருவங்கள், நான் நரகத்திற்கு செல்ல சபிக்கப்பட்டவள் என்று கூறுவதாக சொல்ல ஆரம்பித்தாள்.

வணங்கும் பொழுது...

வணங்கும் பொழுது...

மேலும், எமிலி எப்போதெல்லாம் கர்த்தரிடம் மனமுருகி வேண்டுகிறாளோ, அப்போதெல்லாம் அவள் முன் அந்த மாயத் தோற்ற உருவங்கள் தோன்ற ஆரம்பித்தன.

அவளிடம் நீ நரகத்தில் குண்டு சட்டியில் வதைப்படுவாய் என்றும் கூற துவங்கின. இவை எல்லாம் எமிலியின் உறக்கத்தை களவாடத் துவங்கின. எமிலி மிகவும் உடல்நலம் குன்றி போனாள்.

மருந்துகள்...

மருந்துகள்...

எமிலிக்கு இருப்பது ஒருவகையான மனநோய் தான் என்று கருதிய மருத்துவர்கள் அவளுக்கு மனநோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால், மனநோய் மருந்துகள் எமிலிக்கு எந்த ஒரு பயனும் அளிக்கவில்லை. மாறாக அவளுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தது. எமிலி, மெல்ல மெல்ல தனிமை உணர துவங்கினாள்.

தற்கொலை!

தற்கொலை!

இந்த நேரத்தில் தான் எமிலி தன்னை தானே மாய்த்துக் கொள்ள எண்ணினாள்.

ஆனால், தனது கத்தோலிக்க மதத்தில் தற்கொலை என்பது மன்னிக்க முடியாத பாவம் என்பதை அறிந்த எமிலி, தற்கொலை முடிவை கைவிட்டாள்.

எனவே, எமிலி ஒரு வட்டத்திற்குள் அடைப்பட்டாள். நிச்சயம் சாத்தான் தன்னை வேட்டையாடிவிடும். அதுதான் எனது விதி என நம்ப துவங்கினாள் எமிலி.

ஐந்து வருடம்!

ஐந்து வருடம்!

தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மருத்துவர்கள் எமிலிக்கு பல்வேறு மருந்துகள் கொடுத்த அவளுக்கு குணமாகிறதா என சோதனை செய்தனர். ஆனால், அவளது வலிப்பு நோயும், மாயத் தோற்ற பேய்களும் மட்டுமே அவளை சுற்றி தொடர்ந்தன.

நவீன அறிவியல் மருத்துவம் தங்கள் குழந்தையை கைவிட்டதாக கருதிய எமிலியின் பெற்றோர் அவளை தங்கள் ஆலயத்திற்கு அழைத்து சென்றனர்.

கத்தோலிக்க போதகர்!

கத்தோலிக்க போதகர்!

உள்ளூரை சேர்ந்த கத்தோலிக்க போதகர் எர்னஸ்ட் ஆல்ட் என்பவர் எமிலிக்கு பேய்கள் வசமிருந்து வெளிவர சில விஷயங்கள் செய்தார்.

மேலும், அவர் எமிலிக்கு பல அருவருக்கத்தக்க விஷயங்களை செய்தார். எமிலிக்கு பேய் பிடித்திருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்தார். எமிலியின் பெற்றோருக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.

குறிகள்!

குறிகள்!

ஆலயத்தின் தளத்தில் இருந்த எமிலியின் சிறுநீர், எமிலி உண்ட கரி மற்றும் எமிலியின் குரலில் தான் பேய் குரலை கேட்டதாக அந்த போதகர் கூறினார்.

இவற்றை எல்லாம் வைத்து எமிலிக்கு பேய் தான் பிடித்துள்ளது என்று அனைவரும் நம்ப துவங்கினார்கள்.

அந்த போதகரை பொறுத்த வரையிலும் பேய்கள் எமிலியின் உயிரை ஆட்கொள்ள பார்க்கின்றன என்றும், ஏற்கனவே அவளது உடலை ஆட்கொண்டுவிட்டன என்றும் நம்பினார்.

பேயோட்டம்!

பேயோட்டம்!

எனவே, எமிலியை காப்பாற்ற வேறு வழியின்று பேயோட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அந்த போதகர்.

1975ம் ஆண்டு மட்டுமே எமிலிக்கு 67 அமர்வுகளில் பேயோட்டும் நிகழ்வு நடத்தப்பட்டன. வாரத்தில் இரண்டு முறை போதகரும், எமிலியின் அப்பாவும் அவளை சங்கிலியில் கட்டிப்போட்டு பேயோட்டும் நிகழ்வை துவக்கிவிடுவார்கள்.

எல்லா பேயோட்டும் நிகழ்வுகளும் கேசட்டுகளில் ரிகார்டு செய்யப்பட்டன.

உதவியது!

உதவியது!

இந்த பேயோட்டும் நிகழ்வுகள் எமிலிக்கு உதவி அளித்ததாக கருதினார். எமிலியும் கொஞ்ச நாள் மீண்டும் பள்ளிக்கு செல்ல துவங்கினாள். ஆனால், இது அவளுக்கு கடைசி வரை பலனிக்கவில்லை.

1976ல் எமிலிக்கு மீண்டும் வலிப்பு அதிகரித்தது. இந்த முறை மிக மோசமான அளவில் வலிப்பு ஏற்பட்டது. தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை அடிக்கவும், அவர்களை கடித்து, நகங்களால் கீறவும் ஆரம்பித்தாள் எமிலி.

வன்முறை!

வன்முறை!

யாரும் இல்லாத தருணத்தில், தன்னைத்தானே தாக்கிக் கொண்டாள் எமிலி. சுவற்றில் தானே எகிறி குதித்து முட்டியும் கொண்டாள்.

எமிலி உணவருந்த மறுத்தாள், சாத்தான் தன்னை விடாது என்று கருதினாள். மெல்ல எழுந்து நின்று, வேகமாக தன் முட்டி தரையில் மோதும்படி விழுந்துக் கொண்டே இருந்தால் எமிலி. இதனால், அவளது முட்டி உடைந்து வலுவிழந்து போனது.

மெலிந்து போனாள்!

மெலிந்து போனாள்!

உணவருந்தாமல் இருந்ததாலும், நிமோனியா மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாலும் எமிலி உடல் மெலிந்து போனாள். அவளது பெற்றோரால் எமிலியை காண இயவில்லை. மிகவும் வருந்திக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட நாற்பது கிலோவுக்கும் கீழே சென்றது எமிலியின் உடல் எடை. ஆயினும், அந்த போதகர் எமிலிக்கு பேயோட்டம் செய்வதை நிறுத்தவில்லை.

மறுப்பு!

மறுப்பு!

இந்த நிலையிலும் எமிலியின் பெற்றோர் அவளுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்து வெளிவரவில்லை. அவர்கள் மருத்துவ பரிசோதனை மீண்டும் தொடர மறுத்தனர்.

எமிலிக்கு கடைசியாக பேயோட்டம் நடந்தது ஜூன் மாதம் 30 நாள் 1976ம் ஆண்டு. எமிலி மிகவும் வலுவிழந்து காணப்பட்டாள், போதகரின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் எமிலி தனது கடைசி வார்த்தைகளை பேசினாள், குற்ற விடுதலைக்காக கெஞ்சுவதாக கூறினாள்.

தெளிவு!

தெளிவு!

அப்போதும் எமிலி தெளிவாக தான் இருந்தால். அவள் கண்கள் முழுக்க கண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தன. தனது அம்மாவை திரும்பி பார்த்து அம்மா, நாம் பயந்து போய் இருக்கிறேன் என மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

அதன் பிறகு சில நாட்களிலேயே எமிலி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தாள்.

பரபரப்பு!

பரபரப்பு!

எமிலியின் மரணம் சமூகத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. நீதிமன்றத்தில் எமிலியின் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் எமிலி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாள், அவளுக்கு பேய் எல்லாம் பிடிக்கவில்லை என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.

முடிவில், நீதிபதி எமிலியின் பெற்றோர் மற்றும் போதகர் தான் எமிலியின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டி, அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தார்.

கல்லறை!

கல்லறை!

இந்த வழக்கில் மனநல பாதிப்பை தவறாத புரிந்துக் கொண்டு மத வழியை பின்பற்றுகிறோம் என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

இன்று எமிலி என்கிற அன்னலிஸ் மிஷலின் கல்லறை உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மக்களுக்கு பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Anneliese Michel Aka Emily Rose, A Soul The Lost by Catholic Exorcism!

Anneliese Michel Aka Emily Rose, A Soul The Lost by Catholic Exorcism!