ஆன்லைனில் கற்பை ஏலம்விட்ட பெண் வெளியிட்டுள்ள திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்!

By Staff
Subscribe to Boldsky

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இணையத்தில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்படுத்தினார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் எனும் 18 வயது மாடல் (இப்போது இவரது வயது 19). சின்ட்ரெல்லா எஸ்கார்ட் எனும் நிறுவனத்தின் மூலம் இவர் தனது கற்பை ஏலத்தில் விற்றார்.

சின்ட்ரெல்லா எஸ்கார்ட் என்ற இணைய நிறுவனம் ஜான் சாகோபியல்ஸ்கி என்பவரால் உருவாக்கப்பட்டது ஆகும். இங்கே டஜன் கணக்கில் கன்னிப் பெண்கள் (என்ற பெயரில்) தங்கள் கற்பை ஏலத்தில் விற்று வருகிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஹாலிவுட் நடிகர்கள் பலர் கிளைண்டாக இருந்து வருகிறார்கள் என்று அறியப்படுகிறது.

கற்பை ஏலத்தில் விற்கும் அந்த பரபரப்பு கிளம்பிய போது அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனுக்கு வயது 18. பெற்றோரால் வெளியேற்றப்பட்ட இந்த பெண் தனக்கு பணத்தேவை இருப்பதாக காரணம் கூறி, தனது கற்பை இணையத்தில் விற்க போவதாக 1993ல் வெளியான ஆங்கிலப் படம் இன்டீசன்ட் பிரபோசல் போல ஒரு தகவலை வெளியிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏலம்!

ஏலம்!

அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் கற்பு ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது ஏழு இலட்சம் யூரோக்களுக்கு 2017 மார்ச் மாதம் ஏலம் விடப்பட்டது. சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனம் தான் இந்த ஏலத்தை நடத்தியது. இந்த ஏலத்தில் தான் ரோமானியன் பெண்ணாக அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் கற்பு 2.3 மில்லியன் யூரோக்களுக்கு ஏலம் போனது.

Picture: Cinderella Escorts

ஒரு வருடம்!

ஒரு வருடம்!

ஏறத்தாழ இந்த ஏலம் முடிந்து ஒரு வருட காலம் ஆகிவிட்ட இந்நிலையில் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் ஒரு திடுக்கிடும் தகவலை குற்றச்சாட்டாக முன் வைத்துள்ளார். அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் இந்த கற்பை ஏலம்விடும் நிகழ்வானது சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட நாடகம் எனவும். இதன் மூலம் பல இளம் பெண்களை செக்ஸ் தொழிலில் ஈடுபடவைக்க அவர்கள் முயன்று வருகிறார்கள் என்றும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

Picture: Cinderella Escorts

பேட்டி!

சுகர் குக்கி என்ற பார்ன் இணையத்தில் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் அளித்த பேட்டியில், சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனம் தன்னை ஒரு பிரபோசலுடன் அணுகினார்கள். அது ஒரு மார்கெட்டிங் பிரபோசல். அதன்படி மாடலான தன்னை ஒரு பிரபலமாக மாற்றப் போவதாகவும் கூறினார்கள். அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் கற்பு ஏலம்விடும் தகவல் வெளியான அன்று காலையே உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்.

அழிவு!

பிரபலமாக்க போவதாக சின்ட்ரெல்லா எஸ்கார்ட் கூறிய இந்த நாடகத்தால் என் வாழ்க்கை அழிந்துவிட்டது என்று கூறியுள்ளார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனம் கூறியதன் படி நான் கூறிய ஸ்டேட்மென்ட் காரணமாக எனக்கு மன அழுத்தம் தான் அதிகரித்தது. இதனால் நான் கடினமான காலங்களை தாண்டி வந்துள்ளேன் என்றும். தான் நிறைய சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூட குறிப்பிட்டுள்ளார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்.

மறுப்பு!

அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் ஒருபுறம் சின்ட்ரெல்லா எஸ்கார்ட் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போக. மறுபுறம் சின்ட்ரெல்லா எஸ்கார்ட் இணையத்தின் நிறுவனர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனை வைத்து நாங்கள் நாடகம் எல்லாம் போடவில்லை. பொது மக்களில் இருந்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் நாங்கள் முயற்சிக்கவில்லை என்று சின்ட்ரெல்லா எஸ்கார்ட் இணையத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

பொய்!

எங்கள் (சின்ட்ரெல்லா எஸ்கார்ட்) மீது பொய்யாக இளம்பெண்கள் பேசி வருகிறார்கள். இதுநாள் வரை எங்கள் வரலாற்றில் எங்கள் மீது ஒரு புகார் கூட வந்ததில்லை. மேலும், அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் ஹாங்காங்கை சேர்ந்த எந்தவொரு தொழிலதிபரையும் சந்திக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

கணவர்!

கணவர்!

2017 மே மாதம் அன்று அதாவது தனது கற்பை ஏலத்தில் விற்ற ஓரிரு மாதங்களில் தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் தனது கணவருடன் கைக்கோர்த்து இருப்பது போன்ற படத்தை பகிர்ந்திருக்கிறார். இதையும் சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

இதுக்குறித்து அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவிடம் பேசிய போது, இனிமேலும் எனது மனதை காயமாக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. நான் இப்போது எனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்று மெட்ரோ என்ற ஐரோப்பிய இணையத்திற்கு பதில் அளித்துள்ளார்.

ஆயிரம் பேர்...

ஆயிரம் பேர்...

அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் கடந்த ஆண்டு தனது கற்பை ஏலத்தில் விட்ட பிறகு, சின்ட்ரெல்லா எஸ்கார்ட் இணையத்திற்கு ஒவ்வொரு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கற்பை ஏலத்தில் விற்க முன்வந்ததாகவும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகின்றன.

ஆனால், சின்ட்ரெல்லா எஸ்கார்ட் நிறுவனமோ, தாங்கள் நடத்திய கற்பு ஏலத்தில் அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனாவின் ஏலம் மட்டுமே உண்மையானது. அதில் நாங்கள் எந்தவொரு நாடகமும் நடத்தவில்லை. மற்றவை எல்லாம் எங்களுக்கு எதிராக கூறப்பட்டு வரும் தவறான தகவல்கள் என்று கூறியுள்ளார்.

Picture: Cinderella Escorts

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Aleexandra Kefren 19 YO Model Who Sold Virginity Online Reveals Shocking Allegations About What Happened

    Aleexandra Kefren 19 YO Model Who Sold Virginity Online Reveals Shocking Allegations About What Happened.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more