For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 வயசுக்குள்ள இந்த 8 விஷயத்த கத்துக்காட்டி... வாழ்க்கை கொஞ்சம் கஷ்டமாயிடும்!

25 வயதுக்குள் ஒவ்வொரு நபரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

|

வாழ்க்கை ஒரு போதும் நமக்கான சிறந்த விஷயங்களை பரிசளிக்காது. நாம் தான் அதற்காக உழைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது பெயரளவில் வேண்டுமானால் பூமிதிப்பது போல இருக்கும். ஆனால், அதன் உண்மை தன்மை என்பது சுட்டெரிக்கும் என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நமக்கான புதிய படங்களை அனைத்து தினமும் கற்பிக்க தயார் செய்து வைத்திருக்கும். ஒரு நாள் அது எளிமையானதாக இருக்கும், ஒரு நாள் அது மிகவும் கடுமையானதாக இருக்கும்.

8 Hard-Hitting Lessons You Must Learn Before You Turn 25

படித்து, முடிக்கும் வரை நமக்கு வாழ்க்கை கொஞ்சம் ஜாலியாக தான் இருக்கும். அப்பாவின் நிழலில் இருந்து வெளிவந்து... சொந்த காலில் நிற்கும் போது தான் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பும், வாழ்க்கையின் புரிதலும் நாம் அறிய இயலும். 25 வயதுக்கு மேல் வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போல உருமாறும். அதில் கொஞ்சம் கச்சிதமாக விழாமல் பயணிக்க வேண்டும் எனில்... குறைந்தபட்சம் இந்த 8 விஷயங்களை நீங்கள் கற்றிருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழிக்குப்பழி ஆகாது!

பழிக்குப்பழி ஆகாது!

பழிக்குப்பழி வாங்குகிறேன் என்ற முடிவு எப்பொதும், வெற்றியை தராது.

மக்கள் என்ன செய்கிறார்கள்? அல்லது எவ்வாறு நம்முடன் நடந்துக் கொள்கிறார்கள் என்பதல்ல விஷயம். நாம் எப்போதும் அனைவருக்கும் தொந்தரவு இன்றி, தவறு எண்ணாமல் நேர்வழியில் நடக்க வேண்டும்.

உங்களுக்கு ஒருவர் துரோகம் நினைக்கிறார், அதற்காக நானும் அவருக்கு துரோகம் நினைப்பேனே என்பது அழிவை வேண்டுமானால் ஏற்படுத்துமே தவிர வெற்றியை தராது. வெற்றி என்பது ஒருவரை வெல்வது அல்ல, அனைவர் முன்னிலையிலும் நல்லப்படியாக வாழ்வதே ஆகும்.

நீங்களே காரணம்...

நீங்களே காரணம்...

உங்கள் வாழ்வில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நீங்களே காரணம்...

நம் வாழ்வில் நல்லது நடந்தால் அதற்கு பொறுப்பு ஏற்போம். அதுவே கெட்டது நடந்ந்தால் அதற்கு வேறு ஒருவரை காரணம் காட்டி தப்பித்துக் கொள்வோம். நம்மை ஒருவர் ஏமாற்றியே இருந்தாலுமே கூட, ஏமார்ந்து போனது நாம் தானே... நாம் ஏமாறாமல் இருந்தால்... தோல்வி அடையாமல் இருந்திருப்போம். எனவே, நம் வாழ்வில் நடக்கும் எந்தவொரு நல்லது கெட்டதற்கும் நாமே காரணம்.

நிலைக்கும்...

நிலைக்கும்...

நீங்கள் இன்று என்ன நிலையில் இருக்கிறீர்களோ, அதற்கும் முழு காரணம் நீங்கள் தான்...

வெற்றி, தோல்விக்கு மட்டும் அல்ல. நாம் ஏழையாக இருப்பதற்கும், பணக்காரராக இருப்பதற்கும், உழைப்பாளியாக, முதலாளியாக, கடைநிலை ஊழியராக, மேலாளராக என ... நீங்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறீர்களோ... அதற்கும் முழுக் காரணம் நீங்கள் தன். நீங்கள் கற்றவை, பெற்றவை உங்கள் செயற்பாடு தான் உங்கள் தற்போதைய நிலைக்கு முழுக் காரணம்.

என்ன வேண்டுமானாலும்...

என்ன வேண்டுமானாலும்...

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ... அதுவாக ஆகலாம். அனைத்திற்குமான திறன் உங்களிடம் இருக்கிறது. வாழ்வில் நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். அதற்கு தேவையான ஒரே விஷயம்.. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையும், தைரியமும் தான்.

டீ ஆற்றியவர்கள் எல்லாம் இன்று எந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அவர்களை காட்டிலும் நீங்கள் சிறந்தவர்களே...

எல்லா நாட்களும்...

எல்லா நாட்களும்...

வாழ்க்கை என்பதொரு காட்டாறு. ஒருசில நாட்கள் மிக வேகமாக ஓடவேண்டிய சூழல் இருக்கும். ஒருசில நாட்களில் வறண்டுபோன நிலையை காணவேண்டிய சூழல் ஏற்படும். சில காலத்திற்கு எந்தவொரு ஆவேசமும் இன்றி... அமைதியாக நகர வேண்டிய நேரமும் உண்டாகும். எனவே, வாழ்க்கை எப்போதும் ஒரு மாதிரியானதாக இருக்கும் என்று நினைத்திட வேண்டாம்.

எதிரிகள்...

எதிரிகள்...

நமது எதிரிகள் எல்லாம் ஒரு சண்டையை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஒருபோதும் இரக்கத்தை எதிர்பார்ப்பது இல்லை...

இருப்பதிலேயே மோசமான எதிரிகள் யார் தெரியுமா? நீங்கள் எதிர்பார்த்த வேலையை தக்க நேரத்தல் செய்து முடிக்காமல் சாரி கேட்கும் அவர்கள் தான். அவர்கள் தான் உங்களை விழச் செய்வார்கள். அவர்கள் தான் உங்கள் வெற்றியை சுக்குநூறாக்கி தோல்வி அடைய வைப்பார்கள்.

உங்கள் மதிப்பு...

உங்கள் மதிப்பு...

உங்கள் நேரம் மற்றும் உழைப்பிற்கான மதிப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

வேலையை செய், பலனை எதிர்பார்க்காதே என்ற பழமொழியை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. எப்போதுமே நீங்கள் செய்யும் அனைத்து விஷயத்திற்கும் ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம்.

அதே போல உங்கள் உழைப்பு மற்றும் திறமையை யார் ஒருவரும் களவாடி செல்லும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

தியாகம்!

தியாகம்!

தியாகம் தான் உன்னை உயர்த்தும் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதை. தியாகம் என்ற பெயரில் உங்கள் கனவுகளை, இலட்சியங்களை, குறிக்கோள்களை விட்டுக் கொடுத்து விட வேண்டாம்.

உதவி என்பது ஒரு சிறந்த நற்பண்பு. ஆனால், உதவுகிறேன் என்ற பெயரில் நமது இலட்சியம், கனவுகளை தியாகம் செய்வதென்பது முற்றிலுமான முட்டாள் தனம். இது உங்களை ஏமாளி ஆக்கும்.

இந்த எட்டு விஷயங்களை 25 வயதுக்குள் கற்றுத்தேர்ந்து விட்டால்... வாழ்க்கையின் பல கடினமான பாடங்களில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life வாழ்க்கை
English summary

8 Hard-Hitting Lessons You Must Learn Before You Turn 25

8 Hard-Hitting Lessons You Must Learn Before You Turn 25,
Story first published: Monday, May 28, 2018, 17:25 [IST]
Desktop Bottom Promotion