பிச்சைக்காரரை கோடீஸ்வரன் ஆக்கிய இளம் பெண் - இவர் தான் நிஜமான உலக அழகி!

Posted By:
Subscribe to Boldsky

அந்த பெயர் தெரியாத பிச்சைக்காரர் நினைத்திருந்தால்... அவரிடம் இருந்த கொஞ்ச பணத்தைக் கொண்டு ஒருவேளை நிம்மதியாக உணவுண்டு படுக்க சென்றிருக்கலாம். ஆனால், அவர் என்ன நினைத்தாரோ... அன்றிரவு அவர் செய்த உதவி, இன்று அவரை ஒருப் பணக்காரராக மாற்றியிருக்கிறது. அதற்கு காரணம் ஒரு இளம் பெண்.

இன்று நம்மில் எத்தனை பேர் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், உதவ முன் வருகிறோம். மனதால் வருந்திவிட்டு அப்படியே நகர்ந்து சென்றுவிடுவோம்.

நமது பர்ஸில்ஆயிரம் ரூபாய் இருந்தாலும் கூட, உதவி என யாரேனும் ரோட்டில் பிச்சை கேட்டால் அதிலிருந்து ஐம்பது ரூபாயாவது கொடுப்போமா...?

ஆனால், அந்த பிச்சைக் காரர் இருந்ததே இருபது டாலர்கள் தான். அதை மொத்தமாக அந்த இளம்பெண்ணுக்கு கொடுத்து உதவி இருக்கிறார். அதற்கான பயனையும் அவர் அதிகமாகவே அடைந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெக்ல்யூர்!

மெக்ல்யூர்!

நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருபவர் மெக்ல்யூர். இவர் ஒரு நாள் இரவு பிலடெல்பியவிற்கு காரில் சென்றக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் பழுதடைந்து நடுரோட்டில் நின்றுவிட்டது. காரில் என்ன கோளாறு என்றும் இவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெக்ல்யூர்க்கு பதட்டம் அதிகரித்தது. பிறகு தான் காரில் எரிவாயு தீர்ந்துவிட்ட காரணத்தால் தான் கார் நின்றுவிட்டது என அறிந்தார் மெக்ல்யூர்.

நடுபாதை!

நடுபாதை!

மெக்ல்யூர்க்கு அந்த நடுபாதையில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நெடுஞ்சாலையில் உதவி என்று அழைக்கவும் யாருமில்லை. அங்கிருந்து எத்தனை தொலைவில் பெட்ரோல் பங் இருக்கிறது என்றும் தெரியாது. அப்போது திடீரென ஒரு நபர் மெக்ல்யூர் அருகே வருகிறார். என்ன நடந்தது என கேட்டருகிறார். காருக்குள் சென்று கதவுகளை லாக் செய்துக் கொண்டு பத்திரமாக இரு என கூறிவிட்டு மாயமாகிறார். ஏற்கனவே அச்சத்தில் இருந்து மெக்ல்யூர்க்கு இது மிகவும் அச்சத்தை கூட்டியது.

சொந்த பணத்தில்...

சொந்த பணத்தில்...

மெக்ல்யூர்யிடம் வந்து பேசி சென்ற அந்த கேட்பாரற்ற நபர், தனது சொந்த செலவில் ஒரு கேனில் எரிவாயு வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். இதை மெக்ல்யூர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் தன்னிடம் இருந்த கடைசி இருபது டாலர்களையும் மெக்ல்யூர்க்கு எரிவாயு வாங்க செலவு செய்திருந்தார் என்பதை பிறகு தான் அறிந்தார் மெக்ல்யூர். அந்நபரின் உதவியால் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்தார் மெக்ல்யூர்.

ஜானி!

ஜானி!

மெக்ல்யூர்க்கு உதவிய அந்த நபர் பெயர் ஜானி. அவர் முன்னாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். என்ன நடந்தது என தெரியவில்லை அவர் இப்போது யார் உதவியும் இன்று வீடின்றி சாலையில் தங்கி தனது வாழ்க்கையை கழித்து வருகிறார். மெக்ல்யூர், தனது காதலனுடன் சேர்ந்து, தனக்கு உதவிய ஜானிக்க உதவ வேண்டும் என்று எண்ணினார்.

தினமும் உணவு!

தினமும் உணவு!

தினமும் மெக்ல்யூரியும், அவரது காதலரும் சேர்ந்து ஜானியை சந்தித்து அவருக்கு தேவையான உணவு உடை மற்றும் பொருட்களை வழங்கி வந்தனர். ஆனால், இது போதுமானதாக இருக்குமா? அவருக்கு எதாவது நிலையாக உதவ வேண்டும் என கருதினார்கள். ஒரு நாள் இரவு ஜானியுடன் தங்கியிருந்த போது தான் ஜானி எவ்வளவு நல்லவர், அவர் எவ்வளவு உதவி செய்துள்ளார் என்பது மெக்ல்யூர் மற்றும் அவரது காதலருக்கு தெரியவந்தது.

உதவி!

உதவி!

எனவே, அவரது படம் மற்றும் கதையுடன் GoFundMe என்ற இணையத்தளத்தில் அவருக்கு பத்தாயிரம் டாலர்கள் நிதி திரட்டி அளிக்க பதிவு செய்தனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு 1700 டாலர்கள் தான் கிடைத்தது. ஆனால், குறுகிய காலத்திலேயே ஜானியின் கதை இன்டர்நெட்டில் வைரலாக பரவிடவே, பத்தாயிரம் டாலர்கள் உதவி கேட்க போன இடத்தில் மூன்று இலட்சங்களை கடந்து உதவி வந்துக் கொண்டே இருக்கிறது.

கோடீஸ்வரர்!

கோடீஸ்வரர்!

இதுநாள் வரை ஜானிக்கு பல்லாயிரம் பேர் உதவியைத் தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் இரண்டரை கோடி. அந்த பணம் அனைத்தையும் ஜானிக்கே கொடுத்துள்ளனர் மெக்ல்யூர் மற்றும் அவரது காதலர். தெருவில் யார் உதவியும் இன்றி இருந்த ஜானி, ஒரு நாள் இரவு மெக்ல்யூர்க்கு தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து உதவினார். இன்று, பிரதிபலனாக இரண்டரை கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

மனிதம்!

மனிதம்!

மனிதம் இறந்துவிடவில்லை என்பதற்கு மெக்ல்யூர் மற்றும் ஜானியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் புதிய எடுத்துக்காட்டாக மாரியுள்ளது. ஜானி நினைத்திருந்தால் அந்த இருபது டாலர்களை தனது இரவு உணவுக்கோ, மறுநாள் செலவுக்கோ பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் அதை முழுவதுமாக நள்ளிரவில் தவித்துக் கொண்டிருந்த மெக்ல்யூர்க்கு உதவ முன்வந்தார்.

மறக்க முடியாத உதவி!

மறக்க முடியாத உதவி!

மெக்ல்யூர் நினைத்திருந்தால் அவருக்கு ஒரு சிறு தொகையை கொடுத்து தனது நன்றிக் கடனை செலுத்தியிருக்கலாம். ஆனால், அவர் தினமும் ஜானிக்கு என்ன வேண்டும் என்பதை பூர்த்தி செய்ய நினைத்தார். மெக்ல்யூரியுன் சிறிய முயற்சி, ஜானியின் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நியூட்டனின் மூன்றாம் விதி...

நியூட்டனின் மூன்றாம் விதி...

நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு அப்படியே திரும்பி வரும் என்பதை மனிதர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக எடுத்துரைத்துள்ளது இவர்களது வாழ்வில் நடந்த சம்பவம். நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து உதவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், குறைந்தபட்சம் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். பிரதிபலனை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள். நீங்கள் செய்யும் உதவி நிச்சயம் உங்களுக்கான பலனை இரட்டிப்பு மடங்காக கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Young Women Helped Homeless Man To Become Rich!

Homeless Man’s Life Completely Changed after Giving His Last $20 to Help Stranded Woman.
Story first published: Monday, November 27, 2017, 15:02 [IST]
Subscribe Newsletter