உலகை அசத்தும் விசித்திரமான 7 ட்வின் சகோதரிகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

இரட்டையர்கள் என்றாலே விசித்திரம் தான். அதிலும், இருவரும் ஒரே மாதிரியான திறமை கொண்டிருந்தால் அமோகம் தான். இரட்டையர்கள் என்றால் ஒரே மாதிரி உடை உடுத்துவார், ஒரே மாதிரி சிகை அலங்காரம் வைத்துக் கொள்வார்கள் என நாம் பல படங்களில் பார்த்திருப்போம். உண்மையிலும் அப்படி தான்.

இருவரில் யாரேனும் ஒருவர் தான் சூட்டிப்பாக இருப்பார்கள். மற்றொருவர் சுமாராக தான் இருப்பார்கள். ஆனால், உலகே வியக்கும்படி சில ட்வின் சகோதரிகள் ஒரே மாதிரியான திறமை கொண்டு, அதில் சாதித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பற்றி தான் இங்கே நாம் பார்க்கவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்பினோ ட்வின்ஸ்!

ஆல்பினோ ட்வின்ஸ்!

பிரேசிலை சேர்ந்த ஆல்பினோ மாடல் ட்வின்ஸ் இவர்கள். இவர்கள் ஃபேஷன் துறையில் ஒரு தனித்தன்மையுடன் திகழ்கின்றனர்.

11 வயதே ஆன இவர்கள் சாவோ பௌலோ எனும் பகுதியை செர்ந்டஹ்வைர்கள். இவர்களுக்கு நிறங்கள் தெரியாது. இதை ஒரு குறைபாடாக காணாமல், அதை வைத்தே அசத்தி வருகிறார்கள் இந்த இரட்டை சகோதரிகள்.

Image Source

ஃபேஷன் ட்வின்ஸ்!

ஃபேஷன் ட்வின்ஸ்!

இந்த ட்வின் சகோதரிகள் இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்டைலிஷ் படங்களை பதிவு செய்து பெரும் இரசிகர் கூட்டமே வைத்துள்ளனர்.

Image Source

மாரத்தான் ட்வின்ஸ்!

மாரத்தான் ட்வின்ஸ்!

ஜெர்மனியை சேர்ந்த இந்த இரட்டை சகோதரிகள் ஒன்றாக மாரத்தான் ஓடி அசத்துபவர்கள். ஒரு மாரத்தானில் கைகள் கோர்த்தபடியே ஓடி இருவரும் முறையே 81, 82 இடங்களை பிடித்தனர்.

Image Source

ஆயில் பெயிண்டர்கள்!

ஆயில் பெயிண்டர்கள்!

ஓவியங்கள் வரைவதில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் ஆயில் பெயிண்டிங். இவர்கள் NSFW எனப்படும் "Not Safe For Work"எனும் பிரிவில் படங்களை வரைவதில் கில்லாடிகள். இவர்கள் பாரிஸ் ஹில்டன் செக்ஸ் டேப் படங்களை வரைந்து பிரபலம் ஆனவர்கள்.

Image Source

கால்பந்தாட்ட வீராங்கனைகள்!

கால்பந்தாட்ட வீராங்கனைகள்!

மோனிகா மற்றும் சப்ரினா கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள். இந்த ட்வின் சகோதரிகள் வளரும் போதே ஒன்றாக இந்த விளையாட்டில் தீவிர ஆர்வம் காண்பித்து வந்தனர்.

20 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டியில் இவர்கள் இருவரும் இருவேறு அணியில் இடம்பெற்று ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடியுள்ளனர்.

மோனிகா மெக்ஸிகோ அணியிலும், சப்ரினா யூ.எஸ் அணியிலும் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

ஹிப்-ஹாப் டி.ஜே!

ஹிப்-ஹாப் டி.ஜே!

ப்ரிகிட்டி மற்றும் ஜைமி இருவரும் இசையில் பேரார்வம் கொண்டவர்கள். இவர்கள் ஹிப்-ஹாப் இசை கலைஞர்கள். இவர்கள் இருவரும் முழு வேலையாக ஒன்றாக டி.ஜே செய்து வருகின்றனர்.

Image Source

யாழ் இசை சகோதரிகள்!

இந்த ட்வின் சகோதரிகள் யாழ் இசை வாசிப்பதில் வல்லமை பெற்றவர்கள். யூடியூப்பில் மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ள இவர்கள் தங்கள் பதிவுகள் மூலம் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Double Treat: These Remarkable Twins Sure Rocked The World!

Double Treat: These Remarkable Twins Sure Rocked The World!