கைத்தறி சேலைக் கட்டி 42 கி.மீ மராத்தான் ஓடி அசத்திய பெண்!

Posted By:
Subscribe to Boldsky

சில நேரங்களில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கான வேலைகள், ப்ரமோஷன் ஆகியவை அவுட் ஆப் தி பாக்ஸாக இருக்க வேண்டும். அப்போது தான் அது எந்த வகையில் சிறந்தது, வேறுப்பட்டது என காண்பிக்க முடியும்.

ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கைத்தறி சேலையை ஊக்குவிக்க அதை கட்டிக்கொண்டு மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி அசத்தியுள்ளார்.

இன்றைய சூழலில் சேலை கட்டிக் கொண்டு நாள் முழுக்க வேலை செய்வது அல்லது ஒரு இடத்திற்கு சென்று வருவதே கடினமாக இருக்கும் போது, மராத்தான் ஓடுவது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. அதுவும் 42 கிலோ மீட்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவின் மாபெரும் மராத்தான்!

இந்தியாவின் மாபெரும் மராத்தான்!

இது தான் இந்தியாவின் இரண்டாவது மாபெரும் மராத்தான். இது ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயந்தி!

ஜெயந்தி!

அனைவரும் ட்ராக்ஸ், ரன்னிங் ஷூட் உடை அணிந்திருந்த போது, அந்த கூட்டத்தில் ஜெயந்தி மட்டும் அனைவரின் பார்வையையும் ஈர்த்தார். காரணம், அவர் மராத்தான் ஓட வந்தது கைத்தறி சேலை கட்டிக்கொண்டு.

42 கிலோ மீட்டர் தூரத்தை கைத்தறி சேலை கட்டிக் கொண்டு ஓடி கடந்து சாதனை படைத்துள்ளார் ஜெயந்தி சம்பத் குமார்.

காரணம்!

காரணம்!

கைத்தறி சேலை கட்டிக்கொண்டு இந்த மராத்தானில் ஓடியதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார் ஜெயந்தி. ஜெயந்தி ஒரு சைக்கிளிஸ்ட், இவர் பிளாஸ்டிக் பயன்பாடு சார்ந்து சுற்றுப்புற சூழல் சீர்கேட்டை எதிர்க்க, இதில் இருந்து சுற்றுப்புற சூழலை காக்க இவ்வாறு சேலைக் கட்டிக் கொண்டு ஓடியுள்ளார்.

மேலும், ஜெயந்தி கட்டியிருந்த சேலை பிளாஸ்டிக் கொண்டு கைத்தறியில் உருவாக்கப்பட்ட சேலை ஆகும்.

தனிமனிஷி அல்ல!

தனிமனிஷி அல்ல!

27 வயதான உதய் பாஸ்கர் என்பவரும் இதே மராத்தானில் பங்கேற்றார். இவர் வேஷ்டி அணிந்து ஜெயந்தியுடன் இந்த கைத்தறி பயணத்தை ஊக்குவிக்க மராத்தானில் ஓடினார்.

கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

ஜெயந்தியிடம் இதை கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்க, ஏற்கனவே கூறிவிட்டோம். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் கொடுக்கும் சர்டிபிகேட் மற்றும் ஆதாரங்கள் ஒப்படைக்க வேண்டி காத்திருக்கிறோம் என ஜெயந்தி பதில் கூறியிருக்கிறார்.

மேலும், தனது கோச் மருத்துவர் விஞன் அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜெயந்தி.

முன்னுதாரணம்!

முன்னுதாரணம்!

ஜெயந்தி பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார். மேலும், பெண்கள் நமது கலாச்சார உடையை அசௌகரியமாக உணரக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

வெறும் காலில் ஓட தான் முதலில் திட்டமிட்டதாகவும். ஆனால், பாதியில் இருக்கும் கற்கள் மூலமாக காயம் உண்டாகும் என எண்ணத்தை மாற்றி கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

All Images Source: Reuters

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Saree-Clad Woman Ran 42 KM To Promote Handlooms!

Donning a purple saree, 44-year-old Jayanthi Sampath Kumar ran the Hyderabad marathon in light-weight sandals
Subscribe Newsletter