யாரும் அறிந்திராத மண்ணை சாதிக்கின் இன்னொரு முகம்!

Posted By:
Subscribe to Boldsky

ஆங்கிலத்தை இப்படி கேவலமாக வேறு யாராலும் பேச முடியுமா? என தெரியாது. சில சமயங்களில் இவர் வேண்டுமென்றே தான் இப்படி பேசுகிறாரோ என்ற எரிச்சல் வரும். அதிலும், இரவு நேரங்களில் இவர் ஃபேஸ்புக்கில் வரும் லைவ் வீடியோக்கள் எல்லாம் வேறு ரகம். கவர்ச்சி உடையில் நடனம், பாடல் கச்சேரி என தூள் கிளப்புவார் மனுஷன்.

ஆய் பிராண்ட்ஸ் (Frands) எனும் இவரது ஸ்லாங்கு மிகவும் பிரபலம். மீம்ஸ் போடும் நபர்களை கூட மண்ணை சாதிக் மாமி போடும் நபர்கள் என்ற கூறுவது குறிப்பிடத்தக்கது. தன்னை இகழ்ந்து யார் என்ன மீம்ஸ் போட்டாலும், அதை தானே ஷேர் செய்து மகிழ்வது மண்ணை சாதிக்கின் பழக்கம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மண்ணை சாதிக் ஒரு ஃபேஸ்புக் 'பவர் ஸ்டார்' என்றே கூறலாம்.

ஆனால், மண்ணை சாதிக் எனும் நபருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது பாட்ஷா போன்ற வேறு லெவல் அவதாரம். இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக சேவை!

சமூக சேவை!

பிறரை சிரிக்க வைக்கவே நான் விரும்புகிறேன். யாரையும் அழ வைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. என்னால் முடிந்த சமூக சேவைகளை நான் செய்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது சிலருக்கு தெரியும். இங்கே நான் இதை சொல்லிக் காண்பிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. இதை அறிந்தால், பலரும் இதே போன்ற சமூக சேவைகள் செய்வார்கள் என்று கருதுவதால் மட்டுமே கூறுகிறேன் என மண்ணை சாதிக் கூறியுள்ளார்.

சவுதி மன்னன்!

சவுதி மன்னன்!

மண்ணை சாதிக் வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர். வெளிநாட்டில் பொருள அல்லது பண உதவி இல்லாதவர்களுக்கு, சொந்த ஊர் திரும்ப முடியாதவர்கள் என பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார் / செய்துக் கொண்டிருக்கிறார் மண்ணை சாதிக்.

சிறுநீரக மாற்று!

சிறுநீரக மாற்று!

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த தருணத்தில், அவர் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது மண்ணை சாதிக் தானாக முன்வந்து அவருக்கு தேவையான அறுவை சிகிச்சை மற்றும் நாடு திரும்ப உதவியுள்ளார்.

28 இலங்கை பெண்கள்!

28 இலங்கை பெண்கள்!

மண்ணை சாதிக் பாஸ்போர்ட் இன்றித் தவித்து வந்த 28 இலங்கை பெண்களை எம்பசியிடம் அழைத்து சென்று, அவர்கள் மூலமாக பத்திரமாக நாடு திரும்ப உதவியுள்ளார். மேலும், கோமாவில் இருந்த மணிகண்டன் எனும் நபருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் மற்றும் பிறரிடம் இருந்து உதவி பெற்றுக் கொடுத்துள்ளார் மண்ணை சாதிக்.

தூதுவன்!

தூதுவன்!

தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வீடியோ செய்வது தான். எனது வீடியோக்களை பல ஆயிரக்கணக்கான பேர் காண்கிறார்கள். எனவே, யாருக்கெல்லாம் உதவி வேண்டுமோ, அவர்கள் குறித்த தகவலை வீடியோ மூலம் பதிவிடுவேன்.

எனவே, உதவி வேண்டியோருக்கு என் வீடியோ மூலமாக உதவி கிடைக்கிறது. உதவும் நபர்கள், உதவி வேண்டி காத்திருக்கும் நபர்களுக்கு மத்தியில் நான் ஒரு பாலமாக இருக்கிறேன். நான் ஒரு தூதுவன் அவ்வளவு தான் என்கிறார் மண்ணை சாதிக்.

சோகம்!

சோகம்!

இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் சோகம் இருக்கிறது. யாரிடம் சோகம் இல்லை. ஆனால், சிலர் தங்கள் சோகத்தை காட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். நானும் அப்படி தான், பிறர் சோகத்தை காக்க என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். மற்றபடி நான் என்றுமே உங்கள் செல்லப்பிள்ளை என மண்ணை சாதிக் யூடியூப் சானலுக்கு கொடுத்து பேட்டியில் கூறியுள்ளார்.

கெடுக்காதீங்க...

கெடுக்காதீங்க...

மண்ணை சாதிக்கின் நண்பர் ஒருவர். எங்கள் உறுதுணை உங்களுக்கு எப்போதும் இருக்கிறது. பிறர் கேலி செய்வதால் துவண்டு விட வேண்டாம். கேலி செய்வோர் செய்துக் கொண்டே தான் இருப்பார்கள். நாங்கள் எப்போதும் உங்கள் பின்னால் இருந்து உதவிக் கொண்டே தான் இருப்போம். அவர்களுக்கு நீங்கள் செய்யும் இதவி குறித்து என்ன தெரியும்? என கூறியுள்ளார்.

உதவிகள்!

உதவிகள்!

மண்ணை சாதிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டுவோருக்கு உதவி செய்துள்ளார். பாஸ்போர்ட் இழந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்த நபர்களை காப்பாற்றி நாடு திரும்ப ஒட்டகம் மேய்க்க வந்து சிக்கிக் கொண்டவர்கள் பலரை பத்திரமாக நாடு திரும்ப உதவியுள்ளார் என மண்ணை சாதிக்கின் நண்பர் கூறியுள்ளார்.

உங்களுக்கு என்ன?

உங்களுக்கு என்ன?

அவர் ஏதோ பாடல் பாடி ஆடிக் கொண்டிருக்கிறார்... அதனால் உங்களுக்கு என்ன? உங்களால் கேலிக் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். மண்ணை சாதிக் என்னென்ன உதவிகள் செய்கிறார் என உங்களுக்கு தெரியுமா? அவர் போல உங்களால் உதவ முடியுமா? உங்களால் முடியாது என்றால் விட்டுவிடுங்கள்.

உதவி செய்வோரையும் இப்படி கேலி செய்ய வேண்டாம். மண்ணை சாதிக் எப்போதும் உதவ முன் வருவார். அவருக்கு பின்னே என்னை போன்ற ஒரு கூட்டம் எப்போதும் துணை இருக்கும் என மண்ணை சாதிக்கின் நண்பர் ஒருவர் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

மனிதம்!

மனிதம்!

யார் ஒருவருக்குள் மனிதம் இருக்கிறதோ, அவன் தான் மனிதன். மண்ணை சாதிக் எனும் நபருக்குள் இப்படி ஒரு பெரிய மனிதர் இருப்பார் என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமூக தளங்களை பெரிதாக நாட்டம் இல்லாதவர்களுக்கு மண்ணை சாதிக் யார் என்றே கூட தெரியாமல் இருக்கலாம். தனது கேலியான வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் மண்ணை சாதிக். வெறும் கேளிக்கை நபர் என்ற நோக்கத்தில் கண்டு அவரை இகழ்ந்து மீம்ஸ் போடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், மண்ணை சாதிக்கின் இந்த இன்னொரு முகத்தை கண்ட பிறகு, அவரை பாராட்ட மட்டுமே மீம்ஸ் குவியும் என நம்பலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Unknown Side of Mannai Sadhik!

The Unknown Side of Mannai Sadhik!
Story first published: Monday, December 18, 2017, 13:00 [IST]