இந்தியாவில் முதன் முதலாக யாரிடம் ‘எயிட்ஸ்’ கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky
இந்தியாவில் முதன் முதலாக யாரிடம் ‘எயிட்ஸ்’ கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?- வீடியோ

இன்று உலக அளவில் உலக எயிட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. அது எதனால் ஏற்படுகிறது, எப்படி பரவுகிறது, தடுக்கும் முறைகள் என்ற விவரம் எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதை விட இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் தெரிந்திருக்கும்.

1980க்குப் பிறகு மக்களை வெகுவாக பாதித்த, அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நோய் எயிட்ஸ் . 1978-ல் கடுமையான 'புற்றுநோய்' மற்றும் ஓர் அரிய தொற்று நோய் முதன் முதலில் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தென்பட்டது. 1981-ல் அமெரிக்காவில் 'ஓரினச் சேர்க்கை' கொண்டவர்களுக்கு உடலுறவின் மூலமாக கழுத்துப் புற்றுநோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ஒரு வழியாக 1982 இரத்தம் செலுத்துகின்ற போதும், போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கும் 'எய்ட்ஸ்' வருவதாக கண்டறியப்பட்டது. இப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் இருப்பது அறியப்பட்டது. 1984 ஆப்பிரிக்காவில் உடலுறவு மூலமாக எய்ட்ஸ் பரவுவது ஆய்வின் மூலம் அறியப்பட்டது. 1985 தென் கிழக்கு ஆசியாவில் எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியா :

இந்தியா :

கட்டுப்பாடான இந்திய சமூகத்தில் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டு, எய்ட்ஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்டு வந்த நேரத்தில், இல்லை தமிழகத்திலும் எயிட்ஸ் தாக்குதல் இருக்கிறது என்பதை இளம் மருத்துவர் நிரூபித்த கதை தான் இது.

தொடர்ந்து தன்னுடைய மருத்துவ ஆய்வறிக்கையை சமர்பிக்க அவர் போராடியதன் விளைவு தமிழகத்திலும் இக்கொடிய நோய் பரவியிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வு :

ஆய்வு :

1971 ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் அதன் பிறகு 78ல் திருமணம். பின்னர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.டி. மைக்ரோபயாலஜி சேர்ந்தார் நிர்மலா.

1985 ஆம் ஆண்டின் முடிவில் சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் மாணவியான 32 வயதான நிர்மலா, தன்னுடைய ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும். என்ன தலைப்பு எடுக்க என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது,

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் இருக்கிறதா ? என்பதை ரத்த மாதிரிகள் சேகரித்து, பரிசோதனை செய்து கண்டறியும் ஆலோசனையை அவருடைய பேராசியரும், ஆசானுமாகிய மருத்துவர் சுனிதி சாலமன் வழங்கினார்.

தூங்கிய அதிகாரிகள் :

தூங்கிய அதிகாரிகள் :

அமெரிக்காவில் எய்ட்ஸ் பற்றிய சோதனையும், கண்காணிப்பும் 1982 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியாவின் சுகாதார அதிகாரிகள் இதுபற்றிய எவ்வித முயற்சியும் 1985 ஆம் ஆண்டு வரை எடுக்கவில்லை.

ஒருவேளை எய்ட்ஸ் இந்தியாவில் பரவி இருந்தால், தாங்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் விமர்சனத்தில் மாட்டிகொள்வதற்கு இந்தியாவிலுள்ள மருத்துவ அதிகாரிகள் விரும்பவில்லை என்பதுதான் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்ததற்கு காரணம்.

வைரஸ் வருவதற்கு முன்னரே மருந்து :

வைரஸ் வருவதற்கு முன்னரே மருந்து :

எய்ட்ஸ் என்ற நோய் இங்கே பரவ வாய்ப்பில்லை என்று நம்பப்பட்ட காலம் அது. எய்ட்ஸ் பற்றி எழுதிய சில செய்தித்தாள்கள் கூட அந்த வைரஸ் இந்தியாவை அடைவதற்கு முன்பாக அமெரிக்காவில் அதற்கு மருந்து கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நையாண்டி செய்திருந்தார்கள்.

பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட மும்பையில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரத்த மாதிரிகள் புனேவில் எற்கெனவே சோதிக்கப்பட்டு ஒருவருக்குக் கூட எய்ட்ஸ் இல்லை என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆய்வின் முடிவு குறித்து ஓரளவுக்கு முடிவுக்கே வந்திருந்தார். இந்தியாவிற்கே எயிட்ஸ் வரவில்லை எனும் போது தமிழகத்தில்?? கண்டிப்பாக இந்த ஆய்வின் முடிவு இல்லை என்று தான் வரும் என்று நினைத்திருந்தார்.

சுலபமான காரியம் அல்ல :

சுலபமான காரியம் அல்ல :

இந்த ஆய்வுக்காக நிர்மலா 200க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டும். அதுவும் பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின உறவாளர்கள் ஆகியோரிடத்தில் சேகரிக்க வேண்டும்.

இன்றைக்கு நாம் எயிட்ஸ் குறித்த நிறைய இடங்களில் படித்து எயிட்ஸ் நோய் எப்படியெல்லாம் பரவும் நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியும். ஆனால் அன்றைக்கு இன்னும் இந்தியாவில் எயிட்ஸ் நோய் வரவேயில்லை என்று நம்பிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நிர்மலாவுக்கு இது மிகவும் சவாலான ஒன்று தான்.

இரண்டாவது சவால் :

இரண்டாவது சவால் :

இதே மிகப்பெரிய சவாலாக இருக்க நிர்மலாவுக்கு இருந்த இன்னொரு மிகப்பெரிய சவால் என்ன தெரியுமா? இந்த மாதிரிகளை எங்கு சேகரிக்கவேண்டும் என்பது தான்.

மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் பாலியல் தொழில் நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிகள் தனியாக இருந்தன. சென்னையில் அப்படி எந்த முகவரியும் இல்லை. எங்கே சென்று யாரிடம் என்ன சொல்லி ரத்த மாதிரிகளை சேகரிப்பது.

மருத்துவமனை :

மருத்துவமனை :

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் வெளி நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்த நிர்மலாவுக்கு ஒரு யோசனை உதித்தது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் வரும் ஆபத்து அதிகமிருப்பதால் அவர்களை சோதிக்க நினைத்தார்.

அதனால் பாலியல் தொடர்பான நோய்களை பரிசோதிக்கும் துறைக்குச் சென்றார். ஆனால், அங்கு வரும் நோயாளிகளில் பாலியல் தொழிலாளிகளைக் கண்டறிவது சிரமமாக இருந்தது.

அங்கு வரும் பெண் நோயாளிகளிடம் பேச்சுக் கொடுத்த போது, பலரும் வி ஹோம் எனப்படுகிற விஜிலென்ஸ் ஹோமிலிருந்து வருவதாக சொன்னார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்து அடைத்து வைக்கும் இடம்தான் வி.ஹோம் .

ரத்த மாதிரி :

ரத்த மாதிரி :

அதன் பின்னர் நேரடியாக அங்கே சென்று அந்த ஹோமின் இயக்குநரை சந்தித்து அனுமதிப்பெற்று ரத்த மாதிரிகளை சேகரித்தார்.

அதன் பிறகு சிறைச்சாலைக்குச் சென்று அங்கே தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த சில ஆண்களிடத்தில் ரத்த மாதிரிகளை சேகரித்தார்.

இப்படியாக பல போராட்டங்களுடன் கிட்டதட்ட எண்பது ரத்த மாதிரிகளை சேகரித்திருந்தார் நிர்மலா.

சோதனைக்கூடம் :

சோதனைக்கூடம் :

எய்ட்ஸை பரிசோதிக்கும் எலிசா சோதனை செய்யும் ஆராய்ச்சிக் கூடம் மற்றும் அதற்கான கருவிகள் எல்லாம் இந்தியாவில் இரண்டே இடங்களில்தான் இருந்தன.

பூனாவில் இருந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி மற்றும் வேலூரில் இருந்த கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜிலும் மட்டுமே இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

அந்த இரண்டு இடங்களிலும் மும்பை போன்ற இடங்களில் இருந்து சேகரித்த 1000 ரத்த மாதிரிகளை தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் எதிலும் பாஸிடிவ் என்று வரவில்லை. அதனால் நான் எடுத்துச்செல்வதிலும் எதுவும் பாஸிடிவ் என்று வரப்போவதில்லை என்றே நினைத்திருந்தார்.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

அது எயிட்ஸ் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாத காலகட்டம். அதனால் ரத்த மாதிரிகளை எடுக்கும் போது நிர்மலா கையுறைக்கூட அணிந்திருக்கவில்லையாம்.

அதோடு எடுத்த ரத்த மாதிரிகளை பாதுகாக்கும் கருவிகள் கூட நிர்மலாவிடம் இருக்கவில்லை.

சேகரித்த ரத்த மாதிர்களை பாதுகாக்க இடமில்லாததால் ஐஸ் பாக்ஸில் வைத்து அதனை தன் வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்திருந்தார்.

Image Courtesy

வேலூரில் :

வேலூரில் :

டாக்டர் சுனிதி சாலமனின் முயற்சியால் வேலூரில் இருக்கும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் இந்த ரத்த மாதிரிகளை பரிசோதிக்க அனுமதி கிடைத்தது. 1986ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

நிர்மலாவும் அங்கிருந்த மருத்துவர் ஒருவரும் சோதனையை மேற்கொண்டனர். காலை 8.30க்கு பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது. சோதனை நடந்து கொண்டிருக்கும் போது மதியம் போல கரண்ட் கட்டானது.அதனால் ஆராய்ச்சியை தொடர முடியாமல் தேநீர் குடிக்க வெளியில் சென்றனர்.

Image Courtesy

ஆறு மாதிரிகள் :

ஆறு மாதிரிகள் :

தேநீர் குடித்து விட்டு மீண்டும் லேபுக்கு திரும்பினார்கள். உடன் சோதனையினை மேற்கொண்ட மருத்துவர் ஜார்ஜ் பாபு தான் முதலில் உள்ளே சென்றார்.

அப்போது நடந்ததை விவரிக்கையில், "அவர் மூடியைத் திறந்து பார்த்துவிட்டு உடனே வேகமாக மூடிவிட்டார். ‘டோண்ட் ப்ளே' என்று கூவினார். ஆனால் அதற்குள் நானும் பார்த்துவிட்டேன். ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்தன. நான் உறைந்துவிட்டேன். "

‘இது ரொம்ப உணர்வுபூர்வமான விஷயம். முறையான அறிவிப்புகள் வரும் வரையில் தயவு செய்து மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள்' என்று அறிவுறுத்தப்பட்டது.

Image Courtesy

அடுத்தக்கட்டம் :

அடுத்தக்கட்டம் :

பாஸிட்டின் என்று வந்த ரத்த மாதிரிகள் மட்டும் இன்னொரு முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இம்முறையும் பாஸிட்டிவ் என்றே வந்தது. அதற்குப் பிறகு வெஸ்டர்ன் ப்ளாட் (WESTERN BLOT) எனப்படும் எய்ட்ஸை உறுதி செய்யும் ஒரு சோதனைக்காக அமெரிக்காவிற்கு அந்த ரத்த மாதிரிகள் கொண்டு செல்லப்பட்டன.அங்கிருந்தும் முடிவுகள் அவர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதை உறுதி செய்தன.

மக்களிடம் எதிர்ப்பு :

மக்களிடம் எதிர்ப்பு :

இந்த சோகமான செய்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் தெரிவிக்கப்பட்டது. பிறகு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடமும், தமிழகத்தின் சுகாதார அமைச்சர் ஹெச்வி ஹண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது.

ஹண்டே இந்தக் கெட்ட செய்தியை சட்டசபையில் அறிவித்தபோது நிர்மலாவும் சாலமனும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார்கள்.

இந்த செய்தியை முதலில் கேட்டதும் மக்கள் நம்ப மறுத்தார்கள். சோதனையில் தவறு இருக்கலாம், மருத்துவர்கள் தவறிழைத்திருக்கலாம் என்று பலர் விவாதித்தார்கள்.

சுனிதி சாலமன் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு வட இந்தியப் பெண் நம்மை குறை கூறுகிறார் என்று குற்றம் சாட்டினர்.

அரசாங்கம் :

அரசாங்கம் :

அதிகாரிகளும் அரசும் அதன் பிறகு அவசர அவசரமாக திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்கள்.அரசு மிகப்பெரிய அளவில் ஹெச்ஐவி சோதனை மற்றும் தடுப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

எயிட்ஸ் சோதனைக்காக சோதனைக்கூடம் அமைக்கப்பட்டது, தொடர் சோதனைகள் மேகொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health insync life
English summary

The moment when India’s first HIV Case Discovered

The moment when India’s first HIV Case Discovered
Story first published: Friday, December 1, 2017, 14:40 [IST]