சேலை சைஸ் கேட்டு பல்பு வாங்கிய தளபதி விஜய்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்வில் எல்லாருக்கும் ஒரு திருப்புமுனை இருக்கும், சில தருணங்கள் மறக்க முடியாத வடுக்களாக இருக்கும். மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பல வேதங்கள் இருக்கின்றன. மகன், தந்தை, கணவன், உழைப்பாளி என பல வேடங்கள் ஏற்று தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

சினிமாவில் டான்ஸ், பைட்டில் மாஸ் காட்டும் தளபதி விஜய். தனது பர்சனல் வாழ்க்கையில் கண்ட எப்படி....? அவரது தாய் ஷோபனா கூறும் சில மறக்க முடியாத தருணங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேலை சைஸ்?

சேலை சைஸ்?

தளபதி விஜய் முதன்முறையாக வெளி பேனருக்கு நடித்த படம் வசந்த வாசல். அந்த படத்திற்கான முன்பணம் பெற்றவுடன், அம்மா ஷோபனாவிற்கு சேலை வாங்க முடிவு செய்துள்ளார்.

ஆண்கள் உடைகளுக்கு பல சைஸ்கள் இருப்பது போல, சேலையிலும் பல சைஸ் இருக்கும் என நினைத்து, அம்மாவிடம் சென்று சேலை சைஸ் என்ன என்று கேட்டு நின்றுள்ளார் தளபதி விஜய்.

இதை கேட்டு வயிறு வலிக்க சிரித்து அப்படி ஏதும் இல்லையடா என கூறி எனுப்பியுள்ளார். முதன் முறையாக தனது சம்பளத்தில் அம்மாவிற்கு ரூ.2000-யில் நீலநிற புடவை எடுத்துக் கொடுத்துள்ளார் விஜய்.

செல்ல மகன்...

செல்ல மகன்...

பள்ளி காலங்களில் விஜய் ஒரு துறுதுறுப்பான பிள்ளை. மதியம் அனுப்பும் லன்ச் பாக்ஸ் பெரிதாக இருக்கிறது என குறைக் கூறுவார். அதே போல, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் யாருக்கும்ம் தெரியாமல் நுழைந்து... பயமுறுத்த செய்வார் என ஷோபனா கூறியுள்ளார்.

திறமையாளன்...

திறமையாளன்...

எந்த ஒரு தாய்க்கும் தனது மகனின் திறமை கண்டு உச்சிமுகர தோன்றும். அப்படி விஜயின் திறமையை ஷோபானவும், சந்திரசேகரும் மெய்சிலிர்ந்து போனது. நடிகர் விஜய் நான் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து, அண்ணாமலை ரஜினி வசனத்தை பேசி காண்பித்த போது தானாம்.

நண்பனாக...

நண்பனாக...

சிறுவயதில் விஜய்க்கு ஒரு நட்பு வட்டாரம் இருக்கிறது. அவர்களுடன் கிண்டல், கேலி என சப்தம் போட்டு சிரித்து மகிழ்வதை எப்போதும் கேட்க முடியும். ஆனால், தங்கை திவ்யாவின் மரணத்திற்கு பிறகு அந்த விஜய் முற்றிலும் காணாமல் போய்விட்டார் என ஷோபனா கூறுகிறார்.

அண்ணனாக...

அண்ணனாக...

திவ்யாவை விஜய் மறக்க வேண்டும் என்பதற்காகவே திவ்யா பற்றிய பேச்சு நாங்கள் வீட்டில் எடுக்க மாட்டோம். ஆனால், வெளியே யாராவது திவ்யா பற்றி பேசினால் உடனே அழுதுவிடுவார் விஜய். தன் தங்கையின் நினைவாக தான் தனது மகளுக்கு திவ்யா சாஷா என பெயரிட்டார் விஜய்.

யோகி!

யோகி!

சந்திரசேகரும், தானும் 20 வருடங்களாக யோகா செய்கிறோம். நான் தான் என் கணவருக்கு யோகா செய்ய தூண்டினேன். விஜயையும் யோகா செய்ய கூறினேன் ஆனால், விஜய் தான் ஏற்கனவே வாழ்க்கை முழுவதும் நான் என்னுள் யோகா செய்துக் கொண்டு தான் இருக்கிறேன் என நகைத்துவிட்டு சென்று விட்டாராம்.

தந்தையாக...

தந்தையாக...

விஜயின் தந்தை நட்பாக பழக கூடியவர். அதே சமயம் மிகவும் ஸ்ட்ரிக்ட். ஆனால், விஜய் மிகவும் நட்பாக பழக கூடிய தந்தையாக திகழ்கிறார். ஸ்ட்ரிக்டாக நடந்துக் கொள்வதில்லை.

உழைப்பாளி!

உழைப்பாளி!

விஜய் என்றும் நேரதாமதம் செய்ததில்லை என இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் கூறுவர். இது விஜயின் தந்தை அவருக்கு கற்பித்த பாடம். வேலைக்கு சீக்கிரமாக செல்லும் விஜய், வீட்டுக்கும் லேட்டாக செல்லும் பழக்கம் இல்லாதவர். சரியான நேரத்திற்கு வீட்டில் ஆஜராகிவிடுவாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thalapathy Vijay's Mother Reveals Some Cute Facts About Him!

Thalapathy Vijay's Mother Reveals Some Cute Facts About Him!
Story first published: Thursday, June 22, 2017, 12:30 [IST]