ஏன் வலம்புரி சங்கை உங்க பூஜையறையில் வைக்கனும் தெரியுமா?

By: Gnaana
Subscribe to Boldsky

அமிர்தத்தைப் பருக, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, வெளிவந்த பதினாறு வகை தெய்வீகத்தன்மைமிக்க பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று என நாம் இதிகாசக் கதைகளில் படித்திருப்போம்.

Significance of Conch shell when we keep at our pooja room

பாற்கடலில் வாசம் செய்யும் பெருமாளின் இடக்கரத்தில் வலம்புரிசங்கு இருப்பதாக புராணங்களில் படித்து அறிந்திருப்போம். வெற்றியின் அடையாளமாக கிருஷ்ண பரமாத்மா பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஊதியதையும் நாம் அறிந்திருப்போம்.

அதேபோல பஞ்சபாண்டவர்கள் ஐந்துவகை சங்கை உபயோகித்ததாக நாம் படித்திருந்தாலும், அனைத்தையும் விட உயர்வாகக் குறிப்பிடும் வலம்புரி சங்கின் பயன்கள் அறிவோமா!?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சங்கின் ஆன்மீக பயன்பாடு

சங்கின் ஆன்மீக பயன்பாடு

அமிர்தத்தைப் பருக, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, வெளிவந்த பதினாறு வகை தெய்வீகத்தன்மைமிக்க பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று என நாம் இதிகாசக் கதைகளில் படித்திருப்போம்.

பாற்கடலில் வாசம் செய்யும் பெருமாளின் இடக்கரத்தில் வலம்புரிசங்கு இருப்பதாக புராணங்களில் படித்து அறிந்திருப்போம்.

வெற்றியின் அடையாளமாக கிருஷ்ண பரமாத்மா பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஊதியதையும் நாம் அறிந்திருப்போம்.

அதேபோல, பஞ்சபாண்டவர்கள் ஐந்துவகை சங்கை உபயோகித்ததாக நாம் படித்திருந்தாலும், அனைத்தையும் விட உயர்வாகக் குறிப்பிடும் வலம்புரி சங்கின் பயன்கள் அறிவோமா!?

வலம்புரி சங்கின் மகத்துவம்.

வலம்புரி சங்கின் மகத்துவம்.

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, "ஓம்" என்ற பிரணவ சப்தம் வரும்.

 தோஷம் :

தோஷம் :

வலம்புரி சங்கை வீட்டில் முறையாக பூஜித்துவந்தால், அஷ்ட ஐஸ்வர்யத்தையும் தரும் மகாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்வாள் என்று வேதங்கள் கூறுகின்றன. மேலும் வலம்புரி சங்கை வழிவிட, பிரம்மஹத்தி தோஷம் எனும் கடுமையான தோஷமும் விலகிவிடுகிறதாக, புராணங்கள் கூறுகின்றன.

வாஸ்து :

வாஸ்து :

வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளில் பாதிப்புகள் நீங்க, சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, காலை வேளைகளில் வீடுகளில் தெளித்துவர, விரைவில் பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

வியாபார விருத்தி :

வியாபார விருத்தி :

தற்காலத்தில், சில வணிகத்தலங்களில், வணிகம் செழிக்க, சங்கை வைத்து பூஜிக்கின்றனர்.

பழங்காலங்களில், புதிதாக கட்டிய வீடுகளில் சங்கை வைத்து, ஒரு மண்டலம் எனும் 48 நாட்கள் பூஜித்து, சங்கு பூஜை செய்து, வீட்டில் அனைத்து வகை செல்வங்களும் நிறைந்து, வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தார்கள் என்ற ஆன்மீகப்பெரியோர்களின் வாக்கால், இக்காலத்திலும் சிலர் சங்கு பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவன் கோவிலில் :

சிவன் கோவிலில் :

அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு, தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், நூற்று எட்டு, ஆயிரத்து எட்டு என்ற சங்குகளின் எண்ணிக்கையில், அனைத்து சிவன் கோவில்களிலும், சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Significance of Conch shell when we keep at our pooja room

Significance of Conch shell when we keep at our pooja room
Story first published: Friday, September 1, 2017, 16:00 [IST]
Subscribe Newsletter