For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2008 மும்பை குண்டுவெடிப்பில் 157 பேரை உயிருடன் காப்பாற்றிய ரியல் ஹீரோ இவர் தான்!

2008ஆம் ஆண்டு மும்பை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களில் 157 பேரை காப்பாற்றிய ரியல் ஹீரோ பற்றிய கதை.

|

2008 நவம்பர் 26 ஆம் தேதியை இந்தியா அவ்வளவு சீக்கிரம் மறக்காது. இந்தியாவின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஒன்று அது. சுமார் பத்து தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக மும்பையில் ஊடுறுவி கொலை வெறித் தாக்குதலை நடத்தினர்.

என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஏராளமானோர் இறந்து கிடந்தனர். இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர். உலகை அதிரச் செய்த இத்தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

ravi-dharnidharka-who-saved-157-lives-mumbai-attack

Image Courtesy

இந்த பதட்டமான சூழலில் 157 உயிர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோ பற்றிய குறிப்பும் அந்த திக் திக் நிமிடங்களும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2008 :

2008 :

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று துவங்கி 29 ஆம் தேதி சனிக்கிழமை வரை தாக்குதல் நீடித்தது.இதனை ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு என்று அரியப்பட்டது.

மும்பையில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் , தி ஓபராய் டிரைடண்ட் ஹோட்டல்,தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர்,லியோபோல்ட் கஃபே,காமா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை,நரிமன் ஹவுஸ்,மெட்ரோ சினிமா,சேவியர் புனித கல்லூரி,மும்பை துறைமுகம், என தெற்கு மும்பையே அதிர்ந்தது.

28 நவம்பர் அதிகாலை தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து இடங்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மறு நாள் 29 நவம்பர் தேசிய பாதுகாப்பு படை தாஜ் ஹோட்டல் உள்ளே ஆப்ரேசன் ப்ளாக் டொர்னாடோ நடத்தி உள்ளேயிருந்த தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

Image Courtesy

திட்டம் :

திட்டம் :

மக்கள் அதிகமாக புலங்கும் இடமாக பார்த்து முன் கூட்டியே திட்டமிட்டு தான் இத்தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 164 பேர் வரை கொல்லப்பட்டனர்,முந்நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பதினொரு தீவிரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர்.இவர்களில் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான்.

சில ஆண்டுகள் கழித்து அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Image Courtesy

தாஜ்மஹால் ஹோட்டல் :

தாஜ்மஹால் ஹோட்டல் :

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், ஓபராய், தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டன. முற்றத்தில் ஒன்று, லிஃப்ட்டில் இரண்டு, உணவகத்தில் மூன்று

இப்படியாக மொத்தம் ஆறு குண்டு வெடிப்பு தாஜ் ஹோட்டலில் நடந்தது.

தீயணைப்பு வீரர்கள் ஜன்னல்கள் வழியாக ஏணிகளை கொண்டு 200 பணைய கைதிகளை மீட்டனர். நவம்பர் 27 2008 அன்று காலையில் அனைத்து பணைய கைதிகளை மீட்டதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மகாராஷ்டிரா போலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்தார் .

எனினும், இன்னும் இரண்டு தீவிரவாதிகள் வெளி நாட்டவர் உற்பட பலரை பணைய கைதிகளாக வைத்திருப்பதாக தெரியவந்தது.

Image Courtesy

மீட்பு நடவடிக்கை :

மீட்பு நடவடிக்கை :

தாஜ் விடுதி முதல் மாடியில் உள்ள வசாபி உணவகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.தாக்குதலின் போது, இரு விடுதிகளும் அதிரடி படை வீரர்கள் மற்றும் கடல் செயல் வீரர்கள் (மார்கோஸ்) மற்றும் தேசியப் பாதுகாப்பு காவலர்களால் சூழப்பட்டது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு பாதுகாப்புக் கருதி தடை செய்யப்பட்டது. நவம்பர் 29 அன்று பாதுகாப்பு படைகள் அதிரடியாக இரண்டு ஒட்டல்களுக்குள்ளும் நுழைந்து தாக்கினார்கள். அப்பொழுது ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் மீட்பு நடவடிக்கைகளின் போது குண்டால் தாக்கப்பட்ட மாண்டோ சுனில் யாதவ்வை மீட்கும் போது கொல்லப்பட்டார். 32 பணைய கைதிகள் ஓபராய் விடுதியில் கொல்லப்பட்டனர்.

Image Courtesy

யார் இவர்?

யார் இவர்?

தீவிரவாதிகளின் நேரடித் தாக்குதல், உயிரைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு உயிருடன் பிழைப்போமா மாட்டோமா என்று தவித்தவர்களை அன்றைக்கு மீட்டிருக்கிறார்கள் ரியல் ஹீரோக்கள்.

அவர்களில் ஒருவர் தான் கேப்டன் ரவி தர்னிடர்கா.ஒன்றல்ல இரண்டல்ல 157 உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்

Image Courtesy

தாஜ்மஹால் ஓட்டலில் சந்திப்பு :

தாஜ்மஹால் ஓட்டலில் சந்திப்பு :

நவம்பர் 2008 ரவி இந்தியாவில் தங்கியிருக்கிறார்.சுமார் பத்தாண்டுகள் கழித்து அப்போது தான் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்.மும்பையில் இருக்கும் உறவுகளையும் நண்பர்களையும் சந்திப்பதாக திட்டம்.

தாக்குதல் நடத்தப்பட்ட அன்று தாஜ்மஹால் பேலசின் இருபதாவது ,மாடியில் இருக்கும் ஓட்டலில் ரவியின் மாமா மற்றும் அவரது உறவினர்கள் கூடினர் ரவியும் வந்தார்.

Image Courtesy

யூகித்த ரவி :

யூகித்த ரவி :

எதோ தவறு நடக்கிறது என்று ரவிக்கு உள்மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது.தொடர்ந்து பரபரப்பு எக்கச்சக்க போன் கால்கள்... மும்பையில் குண்டு வெடிப்பாம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று விசாரணை.

குறுஞ்செய்திகளும் வர ஆரம்பித்தன. ஹோட்டலில் எதோ நடக்கப்போகிறது.ஏனென்றால் ரவி ஹோட்டலின் உள்ளே நுழைந்த போது பாதுகாப்பு சோதனை நடத்திடும் மெட்டல் டிடெக்டரின் சத்தம் கேட்டது.

Image Courtesy

செக்யூரிட்டி :

செக்யூரிட்டி :

ஹோட்டலின் நுழைவு வாயிலில் செக்யூரிட்டியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் அங்கே நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

ஒருவன் செக்யூரிட்டி வளையத்தை தாண்டிச் செல்லும் போது பீப் சத்தம் கேட்டது ஆனால் யாருமே அவனை தடுத்து நிறுத்தவில்லை. அது தான் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்க வேண்டும்

உறுதி :

உறுதி :

இங்கே தாக்குதல் நடத்தப்படப்போகிறது என்பது உறுதியானது. மிகப்பெரிய போராட்டத்தின் நடுவில் நாம் இப்போது சிக்கியிருக்கிறோம். நம்மிடம் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தார் ரவி.

இவருடன் ஆறு முன்னால் கம்மாண்டோக்கள் கை கோர்த்துக் கொண்டனர்.ஹோட்டலின் ஊழியரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது முதல் குண்டு வெடித்தது. அப்போது தான் அங்கேயிருந்த கண்ணாடிக்கதவுகளை கவனித்தார்கள்.

என்ன நடக்கிறது? :

என்ன நடக்கிறது? :

அங்கேயிருந்த இரண்டு தென்னாப்பிரிக்காவினர் என்ன நடக்கிறது அவர்கள் யார்? என்ன செய்வார்கள் என்று பதற்றத்துடன் பகிர்ந்தார்கள். ரவி மற்றும் இன்னொரு கமாண்டோவான வில்லியம்ஸ் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் இருந்த மக்களை பாதுகாப்பாக மீட்கும் வழி எதவது இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தனர்.

ஒரு கான்ஃப்ரன்ஸ் ஹால் கண்டுபிடிக்கப்பட்டது.உள்ளே சென்று பார்த்தால் அங்கே நூறுக்கும் மேற்ப்பட்ட கொரியன் மக்கள் பதற்றத்துடன் குழுமியிருந்தார்கள்.இன்னும் அந்த அறையில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் தங்கலாம்.

Image Courtesy

கான்பிரன்ஸ் ஹால் :

கான்பிரன்ஸ் ஹால் :

அந்த கான்ஃபிரன்ஸ் ஹால் மிகவும் பாதுகாப்பானது.ஏனென்றால் அங்கே மரக்கதவு இருக்கிறது.உள்ளே இருப்பவர்கள் யார்? எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று வெளியிலிருந்து கண்டுபிடிக்க முடியாது.

வில்லியம்ஸ் அவர்கள் இருந்த பகுதிக்குச் சென்று மெதுவாக எல்லாரையும் இந்த கான்ஃபிரன்ஸ் ஹால் பகுதிக்கு அழைத்து வந்தார்.

Image Courtesy

உள்ளே யாரும் வரக்கூடாது :

உள்ளே யாரும் வரக்கூடாது :

மக்கள் பாதுகாப்பாக உள்ளே சென்று கொண்டிருக்க ரவி,நிக்கோலஸ் மற்றும் ஒரு தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவர் மூவரும் கான்பிரன்ஸ் ஹாலிலிருந்து வெளியேற இரண்டுவழிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஒன்று நேரடியாக வெளியில் செல்வது இன்னொன்று ஹோட்டலின் இன்னொரு பகுதிக்குச் செல்வது.

வெளியேறும் வழியாகவும் தீவிரவாதிகள் நுழையலாம் அல்லவா?ஒரு வழியை டெபிள் சேர் என அங்கிருக்கும் பொருட்களைக் கொண்டு வழியை அடைத்தார்கள்.அவ்வழியாக தீவிரவாதி வந்துவிடக்கூடாது.

Image Courtesy

சமையலறை :

சமையலறை :

அங்கிருந்த மக்களை சமையலறை வழியாக அழைத்து வரும் போது அங்கேயிருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை எடுத்து தங்கள் சட்டையில் ஒழித்து வைக்கச் சொல்லப்பட்டது.

ஏ.கே.47 முன்பு இதெல்லாம் மிகவும் சர்வசாதரணமானது தான். ஆனால் எதிராளிகள் மீது நாம் எதிர்பாராத தாக்குதல் நடத்தும் போது அவர்களை அது நிலைகுலையச் செய்யும். அதைப்பயன்படுத்தி நாம் தப்பிக்கலாம் என்று திட்டம்.

Image Courtesy

அடுத்தது என்ன? :

அடுத்தது என்ன? :

ஆப்ரேசன் துவங்கியது.திரைச்சீலைகள் விரிக்கப்பட்டன.விளக்குகள் அணைக்கப்பட்டது. அங்கிருந்த எல்லா பொருட்களைக் கொண்டும் வாசல் கதவு உட்பட இந்த அறைக்குள் நுழைய எந்தெந்த வழி இருக்கிறதோ அவையெல்லாம் அடைத்து வைக்கப்பட்டன.

யாரும் பேசாதீர்கள்... பயப்படாமல் அப்படியே இருங்கள்.போனிலும் பேச வேண்டாம் நாம் எங்கேயிருக்கிறோம் என்ற தகவலை உடனடியாக பகிராதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ரவிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.இந்த அறையிலிருந்து ஒரு வார்த்தை வெளியேறினாலும் 157 உயிர்களுக்கும் ஆபத்து.

Image Courtesy

ஓட்டல் ஊழியர்கள் :

ஓட்டல் ஊழியர்கள் :

ஓட்டல் ஊழியர்கள் இருவர் வெளியல் நடப்பதை சமிக்கை கொடுக்க நிறுத்தி வைக்கப்பட்டனர். அதுவும் எப்படி வழக்கம் போல வேலை செய்ய வேண்டும் நீங்கள் வேலை செய்வதை நிறுத்தி விட்டால் ஆபத்து நெருங்கிவிட்டது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம் என்று பேசப்பட்டது.

நேரம் ஓடியது.அங்கிருந்தவர்களுக்கான உணவு,ட்ரிங் என அவர்கள் கேட்ட எல்லாமே தயாரித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

Image Courtesy

வேலை ஆரம்பம் :

வேலை ஆரம்பம் :

ஹோட்டலின் ஹெரிட்டேஜ் டவர் அருகில் ஆர்டிஎக்ஸ் குண்டு வெடித்தது. அதன் தாக்கம் இவர்கள் இருந்த இருபதாவது மாடி வரையிலும் தெரிந்தது.அங்கிருந்த தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவர்.பேப்பரைக் கொடுத்து.ஒவ்வொருவரும் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி எழுதச் சொல்லிக் கொடுத்தார்.

இந்நேரத்தில் ரவியும் மற்ற கமாண்டோக்களும் இங்கிருந்து வெளியேலமா என்று பார்க்க ஆரம்பித்தனர்.

Image Courtesy

நள்ளிரவு இரண்டு மணி :

நள்ளிரவு இரண்டு மணி :

நள்ளிரவு இரண்டு மணியளவில் பத்து கிலோ எடையுள்ள ஆர்டிஎக்ஸ் தாஜ் ஓட்டலின் சென் ட்ரல் டூம் அருகே தீவிரவாதிகள் வைத்தனர். அதோடு ஹோட்டலின் ஆறாவது மாடியிலும் தீ வைத்தனர்.

மக்களைக் காப்பாற்ற போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்ற வதந்தியும் பரவியது.

ஆனால் ரவிக்கு உறுதியாக ஒரு விஷயம் தெரிந்தது. தீவிரவாதிகள் ஏற்படுத்திய தாக்குதினால் யாரும் அவ்வளவு எளிதாக சென்று வர முடியாது என்பது தான்.

Image Courtesy

ஆறாவது மாடியிலிருந்து :

ஆறாவது மாடியிலிருந்து :

ஆறாவது மாடியில் தீவிரவாதிகளால் பற்றவைக்கப்பட்ட நெருப்பானது மேல்நோக்கி வர ஆரம்பித்தது.இது முழுவதுமாக பற்றினால் இன்னும் ஆபத்து தீ பரவவில்லை என்றாலும் சில நேரங்களில் மின்சார ஓயர்கள் துண்டிக்கப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

Image Courtesy

வெளியேற்றம் :

வெளியேற்றம் :

இங்கிருந்து வெளியேறவில்லை என்றால் இப்போது ஆபத்து நாம் வெளியேற வேண்டிய கட்டாயம் என்பது புரிந்தது.நிக்கோலஸ் இருவரை அனுப்பி செல்லும் வழி எப்படியிருக்கிறது என்று பார்க்கப்பட்டது.

ஹோட்டல் ஊழியர்கள் பேரிகாட்ஸ் எல்லாவற்றை எடுத்து மக்கள் எளிதாக வெளியேறும் வண்ணம் செய்யப்பட்டது.

Image Courtesy

போனும் ஷூவும் :

போனும் ஷூவும் :

வெளியில் நிலைமை சீராகவில்லை என்பதை ரவி உணர்ந்தார். போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்.அணிந்திருக்கும் ஷூவைக் கலட்டுங்கள். துளி சத்தம் கூட கேட்டு விடக்கூடாது.

சொன்னதுபடியே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனர்.

Image Courtesy

84 வயது பாட்டி :

84 வயது பாட்டி :

இருபதாவது மாடியிலிருந்து படி வழியாக இறங்கி கொண்டிருந்தனர். அப்போது ராமா என் கிற 84 வயது மூதாட்டி இறங்க முடியவில்லை என்று தவித்தார். அங்கேயே நின்று விட்டார் இனிமேலும் என்னால் வர இயாலாது நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல ரவி கொஞ்சம் முயற்சி செய்திடுங்கள் பாட்டி என்று வற்புறுத்தினார்.

ஒரு கட்டத்தில் பாட்டியை சேரில் உட்கார வைத்து தூக்கி வருவது என்று முடிவானது.ரவி மற்றும் ஒரு ஓட்டல் ஊழியர் இருவருமாக சேர்ந்து பாட்டியை உட்கார வைத்து அந்த சேரை தோலில் சுமந்து வந்தனர்.

நிம்மதி :

நிம்மதி :

அவர்கள் மெதுவாக மென்னேறிக் கொண்டிருந்தார்கள். முதலில் அந்த இரண்டு தென்னாப்ரிக்கர்கள், ஓட்டலின் செக்யூரிட்டி,பெண்கள் மற்றும் குழந்தைகள்,இன்னும் சில செக்யூரிட்டிகள் கடைசியாக ஆண்கள் என ஒவ்வொருவராக வெளியேறினர்.

இதில் மிகவும் சவாலாக இருந்தது ஒவ்வொரு மாடியை கடக்கும் போதும் அந்த மாடியின் லாபி கண்ணாடியைக் கொண்டு தான் மூடப்பட்டிருந்தது. அந்தப்பகுதி தான் கொஞ்சம் சிரமமானதாக இருந்தது.

இறுதியாக 157 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Ravi dharnidharka who saved 157 lives in mumbai attack

Story about Ravi dharnidharka who saved 157 lives in Mumbai attack.
Desktop Bottom Promotion