செல்வம் பெருக, கேட்கும் வரம் கிடைத்திட இந்த ஐப்பசி மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள்!!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஐப்பசி மாதம் தமிழ் காலண்டர் கணக்குப்படி ஏழாவது மாதமாக வருகிறது. இது இந்த ஆண்டு அக்டோபர் 18 ல் தொடங்கி நவம்பர் 16 ல் முடிவடைகிறது. இந்த மாதத்தில் தான் நிறைய பண்டிகைகளும் விரதங்களும் கொண்டாடப்படுகின்றன. மேலும் இம்மாதம் அடை மழைக்காலம் என்றும் கூறுவர்.

இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய பூஜைகளும் பரிகாரங்களையும் முழு மனதோடு பக்தியுடன் செய்து வந்தால், நமது வீட்டிற்கு எல்லாவிதத்தில் சுபிக்ஷங்களும், நன்மைகளும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பௌர்ணமி

பௌர்ணமி

ஐப்பசி பெளர்ணமியில் எல்லா சிவன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமான் சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் எம்பெருமான் அருளும் நமக்கு கிடைக்கப் பெறுகிறது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக படத்தை கீழே காணலாம்.

கோஜாக்ரா விரதம்

கோஜாக்ரா விரதம்

வங்காளி மக்கள் இந்த ஐப்பசி மாதத்தில் கோஜாக்ரா என்ற விரதத்தை கடைபிடிக்கின்றனர். கோஜாக்ரா என்ற வார்த்தைக்கு யார் விழித்திருக்கிறீர்கள் என்று பொருள். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் மற்றும் புதியதாக திருமணம் ஆன பெண்களும் இந்த விரதத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து வெறும் இளநீர் தண்ணீரை மட்டும் குடித்து விரதமிருந்து லஷ்மி தேவியை வணங்கி வழிபடுவர். அப்படி வழிபடுபவர்களுக்கு லட்சுமி தேவி வாரி வாரி வரங்களை அள்ளித் தருவாளாம்.

ஐப்பசி மாதம் வருகின்ற பெளர்ணமியில் இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வரும். சுமங்கலி பெண்களின் கணவர்கள் நீண்ட ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் சீறும் சிறப்புமாக இருப்பர். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் செல்வம் கொழிக்கும். அம்பாள் பார்வதி தேவி இந்த உலகம் உயிர்கள் மட்டுமில்லாமல் கடவுள் எம்பெருமான் சிவனுக்கே அன்னத்தை வழங்கி அன்னபூரணியாக காட்சியளித்தால் அதனால் தான் இந்த ஐப்பசி மாதம் எல்லா சிவன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

தீபாவளி முடிந்ததும் கந்த சஷ்டி விரதம் தொடங்கி விடும். இந்த விரதத்தின் முதல் நாள் தீபாவளி அமாவாசைக்கு அடுத்து ஆரம்பித்து ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடவுள் முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்கும் ஆறாவது நாள் தான் சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கோயில்களிலும் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை கொண்டாடினாலும் திருச்செந்தூர் கோயிலில் இந்த சம்ஹார நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும், குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மாதம் சஷ்டி விரதம் அக்டோபர் 25 ல் வருகிறது.

ஐப்பசி சதயம்

ஐப்பசி சதயம்

இந்த ஐப்பசி மாதம் சதய நாளில் தான் தமிழ் நாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த மன்னர் ராஜ ராஜ சோழன் பிறந்தார். இந்த வருட கணக்கின் படி பார்த்தால் தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்த வருடம் நவம்பர் 15 ல் ஐப்பசி சதயம் வருகிறது.

வளர்பிறை ஏகாதசி

வளர்பிறை ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், நோய்கள் நம்மளை அண்டாது, பசிப்பிணி நீங்கும், மன நிம்மதி கிடைக்கும் மற்றும் பாவ விமோச்சனம் பெறலாம்.

இந்த ஏகாதசி இந்த வருடம் ஐப்பசி 14 ல் வருகிறது

தேய்பிறை ஏகாதசி

தேய்பிறை ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி "என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் இந்திர வாழ்வை வைகுண்டத்தில் பெறுவர். ஐப்பசி மாத ஏகாதசியன்று பால் சாப்பிடக் கூடாது

இந்த ஏகாதசி இந்த வருடம் ஐப்பசி 28 ல் வருகிறது.

கடைமுகம்

கடைமுகம்

ஐப்பசி மாதக் கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் புனித காவேரி நதியில் நீராடுவது நல்லது. இந்த மாதத்தில் காவேரி கங்கையாகிறாள். எனவே இம்மாதத்தில் காவேரியில் நீராடினாலயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும். இந்த நாள் இந்த வருடம் நவம்பர் 16 ல் வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Poojas to perform in the month of Aippasi

Poojas to perform in the month of Aippasi
Story first published: Friday, October 27, 2017, 17:32 [IST]
Subscribe Newsletter