இன்டர்நெட்டில் வைரலான புதுமண தம்பதியின் அபத்தமான போட்டோஷூட்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய திருமணங்களில் முக்கியமான நிகழ்வாக காணப்படுவது புகைப்படம் எடுப்பது தான். தாலிக் கட்டுவதை கூட கிரியேட்டிவாக எடுக்கிறேன் என... அந்த நொடியில் தாலியை கட்டுவது போல பிடிக்க சொல்லி ஷாக் கொடுக்கும் புகைப்பட கலைஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

மேலும், ப்ரீ - வெட்டிங், சினிமாட்டிக் டைப், கேண்டிட் என பல வகை போட்டோஷூட்கள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்டில் புதுமண தம்பதி எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்டர்நெட்டில் வைரலாகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இப்படியுமா?

இந்திய கலாச்சாரத்தில் திருமணமானவுடன் பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை புகைப்படம் எடுப்பார்கள். ஆனால், இந்த அயல்நாட்டு தம்பதி, திருமணமானவுடன் மணமகன் முன் மணப்பெண் மண்டியிட்டு இருப்பது போல படம் எடுத்துள்ளனர்.

இதுல என்ன விசித்திரம் என கேட்போர் அந்த அலங்கோல காட்சியை படத்தில் காணவும்.

இதெல்லாம் ஒரு ஐடியாவாம்மா?

மொத்த புகைப்பட ஆல்பத்தில் இருந்து இந்த ஒரு படம் மட்டும் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. காண அபத்தமாக இருக்கும் இந்த போஸை கொடுக்க சொன்னத புதுமண தம்பதியின் தாய் ஒருவர் தானாம். சிறப்பு!!!!

டச்சு!

இந்த புதுமண தம்பதியர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் எங்கும் பிரசுரம் செய்யப்படவில்லை. மணப்பெண் வெள்ளை கவுனிலும், மணமகன் நீலநிற ஷூட்டிலும் இருக்கிறார்கள். காடு போன்ற பின்னணி கொண்ட இடத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், போஸ் தான் செக்சுவல் ஆக்ட் போல அமைந்திருக்கிறது.

மைக்கல்!

மைக்கல் க்லூஸ்தர் எனும் புகைப்பட கலைஞர் தான் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை ஆயிரக்கணக்கான மக்கள் ஃபேஸ்புக்கில் லைக் செய்துள்ளனர். இதில் என்ன விசித்திரம் என்றால், இதே போல எங்களுக்கும் புகைப்படம் எடுத்துக் கொடுங்கள் என மேலும் மூன்று தம்பதிகள் இவரை அணுகியுள்ளனர்.

எட்டு வருடம்!

இப்படி அபத்தமான படத்தை எடுத்த மைக்கல் புகைப்பட துறையில் எட்டு வருடங்களுக்கும் மேல் அனுபவம் பெற்றவர். அந்த ஐடியா இவருடையது இல்லை எனிலும், இந்த படம் அலங்கோலமாக அல்லது அந்தரங்க பகுதிகள் தெரியும்படி இருக்க கூடாது என்பதில் ஊர்ஜிதமாக இருந்துள்ளார் மைக்கல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Newly Married Couple’s Wedding Photo Goes Internet Viral!

Newly Married Couple’s Wedding Photo Goes Internet Viral!
Story first published: Saturday, October 7, 2017, 11:31 [IST]