கெட்டிமேளம் முதல் ஹனிமூன் வரை, சமந்தா - நாகசைதன்யா திருமணம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று மாலை (அக்.,-6) துவங்குகிறது சமந்தா - நாக சைதன்யாவின் திருமண நிகழ்வுகள், சடங்குகள் எல்லாம். இந்து முறைப்படி ஒரு தடவை, கிருஸ்துவ முறைப்படி ஒரு தடவை என இருமுறை திருமணம் செய்துக் கொள்ள போகிறது தென்னிந்தியாவின் டாப் ஸ்டார் ஜோடி.

இன்று, நாளை என இரு நாட்கள் நடக்க போகும் இந்த திருமண விழா தான் இந்த தலைமுறை நட்சத்திரங்கள் மத்தியில் நடக்கவிருக்கும் பெரிய திருமணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண அரங்கு!

திருமண அரங்கு!

சமந்தா - நாக சைதன்யா இருவருக்கும் நடக்கவிருக்கும் திருமண வைபவ இடத்தில் கோவா போன்ற அழகுமிகு செட் அமைத்துள்ளனர். சொல்லப் போனால், சமந்தா - நாக சைதன்யா இருவரும் ஒரு வாரம் கோவாவில் தான் இருந்தார்களாம். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எல்லா தகவல்களையும் பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார் சமந்தா.

சடங்கள்!

சடங்கள்!

சமந்தா - நாக சைதன்யா திருமணம் இந்து, கிருஸத்தவ முறையில் இரண்டு முறை நடக்கவிருக்கிறது. அக்டோபர் ஆறாம் நாளான இன்று இந்து முறை படியும், அக்டோபர் ஏழாம் நாளான நாளை சர்ச்சில் கிருஸ்துவ முறைப்படியும் திருமணம் வைபவம் நடக்கவிருக்கிறது.

க்ரேஷா பஜாஜ் வடிவமைத்துள்ள லெஹங்கா உடையை தான் சமந்தா உடுத்தப்போகிறார். இதில் சமந்தா - நாக சைதன்யா காதல் கதை டிசைனாக வடிவமைத்துள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்!

நட்சத்திர பட்டாளம்!

ஏறத்தாழ 150க்கும் மேற்ப்பட்ட நட்சத்திரங்களை திருமணத்திற்கு அழைத்துள்ளனர் சமந்தா - நாக சைதன்யா. ஐதராபாத்தை சேர்ந்த உறவினர்கள், நட்சத்திர நண்பர்கள் என பலர் இந்த திருமண விழாவில் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்.

ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா, ராணா, வெங்கடேஷ் என தெலுங்கு திரையுலகின் பிரபலங்கள் அனைவரும் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனிலவு!

தேனிலவு!

சமந்தா - நாக சைதன்யா இன்னும் நடித்து முடிக்க வேண்டிய திரைப்படங்கள் சிலவன இருப்பதால். திருமணம் முடிந்த கையேடு மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட் செல்லவிருக்கிறார்கள். வரும் கிருஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் ஹனிமூன்-க்கு வெளிநாடுகளுக்கு பறந்து செல்லவிருக்கிறது இந்த இளம் ஸ்டார் ஜோடி.

ஹனிமூனிற்கு நியூயார்க் செல்லவிருப்பதாக என கூறப்படுகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் "ஏ மாய சேசாவே" படப்பிடிப்பின் போது இவர்கள் இருவரும் நியூயார்க்கில் இணைந்த நடித்த ரம்மியமான நினைவுகள் இருக்கத்தானே செய்யும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A to Z About Naga Chaitanya and Samantha Ruth Prabhu’s wedding!

A to Z About Naga Chaitanya and Samantha Ruth Prabhu’s wedding!
Story first published: Friday, October 6, 2017, 10:17 [IST]