ஜூலி, காயத்திரி பற்றிய மோசமான சமூகதள பதிவுகள் நியாயமானதா? உங்கள் கருத்து என்ன?

Posted By:
Subscribe to Boldsky

சமூக வலைதளங்களின் வீரியம் என்பது எல்லையற்றது. அதில் பதிவாகும் கருத்து எந்த அளவுக்கு செல்லும், எப்படிப்பட்ட தாக்கங்களை எல்லாம் உருவாக்கும் என கணக்கிட்டு கூறிவிட முடியாது.

மாஸ் மீடியமாக காணப்படும் சமூக தளங்கள் மூலம் சமூகத்திற்கு நன்மைகளும் விளைகின்றன, அதே சமயம் தீமைகளும் விளைகின்றன.

கோபத்தால் தான் மனிதன் அதிகம் அழிகிறான் என்பது பொதுவான கூற்று. தனிப்பட்ட வகையில் நால்வர் மத்தியில் வெளிப்படும் கோபம், டிவி, செய்தித்தாள், ரேடியோ, சமூக தளங்களில் வெளிப்படும் கோபம் என ஒரே கோபத்தின் வெளிப்பாடும், வீரியமும் வெளிப்படும் ஊடக ரீதியாக வேறுப்பட்ட தாக்கங்களை உண்டாக்குகின்றன.

Do You Think Posting Abusing Memes and Status on Social Media about Bigg Boss Contestants is Right?

ஒரு நிகழ்ச்சியை கண்டு நான் நான்கு சுவர்களுக்குள் வெளிப்படுத்தும் கோபம் என் வீட்டாருடன், அதிகபட்சம் அக்கம்பக்கத்து வீடு வரை சென்றடையும்.

அதே கோபத்தை நான் ஃபேஸ்புக்கில் வெளியிடும் போது சரி என சிலரும், சரியல்ல என சிலரும், ஷேர், ரீபோஸ்ட் என பல வகையில் அது பலரது கருத்துக்களுடன் பூதாகரமாக வேறொரு உருவம் பெற்று வெளிப்படுகிறது.

அப்படி தான் ஒரு சராசரி மனித குணத்தின் வெளிப்பாட்டை உலகறிய வசைப்பாடி பெரும் தவறு செய்துவிட்டோமா?, என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிக் பாஸ் பதிவுகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரால்!

ட்ரால்!

நடிகர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருடைய பேரிலும் ட்ரால் பக்கங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறது. இது போக, மீம்ஸ் பக்கங்கள், மீம் கிரியேட்டர்கள் என இதன் பின்னாடி பலர் உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். மீம் கிரியேட்டர்கள் தேவை என வேலைவாய்ப்பு உருவாகும் அளவிற்கு மீம்களின் தாக்கம் பெருகியுள்ளது.

மீம்ஸ்!

மீம்ஸ்!

ஒரு விஷயத்தை நகைச்சுவையாக கையாள்வதே மீம்களின் குணாதிசயம். ஆனால், அது நகைச்சுவை என்பதை தாண்டி, வன்மம், காழ்ப்புணர்ச்சி, வக்கிரமாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. நமக்கு பிடிக்காத நபர், பிடிக்காத நடிகர், நமக்கு பிடித்தவருக்கு எதிராக நடக்கும் நபர்கள், நம் கருத்துக்களுக்கு எதிர் விமர்சனமாக திகழ்வோர் என பலரை மறைமுகமாக தாக்க, தாழ்த்த மீம்கள் கருவியாகின்றன.

பிக் பாஸ் ஜூலி!

பிக் பாஸ் ஜூலி!

ஜல்லிக்கட்டு ஜூலி என்ற பெயர் உண்மையிலேயே மிகையானது தான். ஊடகங்கள் மாணவரின் புரட்சியை ஒரு பெண்ணுக்கு பட்டமளித்து ஆரூடம் செய்துவிட்டது. அதை சமூக தளங்களும் கொண்டாடின வீர தமிழ்ச்சி என்ற மீம்கள் மிகவும் பிரபலமாக பகிரப்பட்டன.

ஓவியா ஆர்மி!

ஓவியா ஆர்மி!

ஆனால், சராசரியாக எல்லா மனிதர்கள் மத்தியில் இருக்கும் புரளி பேசுதல், புறம் பேசுதல், மாற்றி பேசும் குணாதிசயங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி (உலகறிய) வெளிப்படுத்திய பிறகு, பல மடங்கு தாழ்த்தி, தரையில் போட்டு மிதிக்கும் அளவிற்கு 'ஓவியா ஆர்மி' மீம் எனும் பேராயுதம் கொண்டு வலுவாக தாக்கிவிட்டதோ? என்ற கேள்வி எழுகிறது.

இயல்பு தானே?

இயல்பு தானே?

மூவர் சேர்ந்து ஓவியாவை நோகடித்துவிட்டனர் என்ற காரணம் காட்டியே அவர்களை திட்டித் தீர்க்கிறோம். ஆனால், அதே வேலையை தான் அவர்கள் அறியாத சூழலில் இருந்து நாம் நோகடித்து வருகிறோம் நமது பதிவுகள் மூலமாக.

நூறு நாட்கள் கழித்து வெளிவரும் போது இதை கண்டு அவர்கள் எவ்வளவு மன அழுத்தம் அடைவார்கள் என்பது வார்த்தைகளில் கூறிவிட முடியாது.

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

நமது கோபத்தை இன்று பதிவு செய்துவிட்டு, அடுத்த வருடம் மார்க் மெமரியில் காண்பிக்கும் போது தான் நாம் அறிவோம். நமக்கு வெறுமென மெமரி ஃபீடில் வரும் ஒரு பதிவு, ஒரு நபரின் வாழ்நாள் சோகமாக, ஆறாத வடுவாக மாறிவிடும் என்ற கோணத்தில் நாம் யோசிக்க வேண்டும்.

இந்த டிஜிட்டல் மீடியாவில் நாம் எதையும் மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. இதே அளவு கோபத்தை, அரசு செய்த அநீதிகளின் போது நாம் வெளிப்படுத்தியிருந்தால், இந்த பொம்மலாட்டத்தில் இருந்து தப்பித்து, சாபவிமோசனம் பெற்று நிம்மதி பெருமூச்சி விட்டுருப்போம் சகோதர, சகோதரிகளே!

இனிமேல், வேண்டாம் ப்ளீஸ்!

இனிமேல், வேண்டாம் ப்ளீஸ்!

தவறுகள் செய்வது மனித இயல்பு, தவறுகளை திருத்திக் கொள்வதே மனிதனின் சிறப்பு. தெரிந்தோ, தெரியாமலோ நாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த தவறை செய்துவிட்டோம்.

சாதாரண மனித இயல்பின் வெளிபாடு, அதற்கு ஆயுள்தண்டனை அளிப்பது போன்ற, இந்த அழிக்க முடியாத, சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாத அளவு தண்டனை வழங்க வேண்டுமா?

ஒருவரை சிரிக்க வைப்பது பெரிய விஷயம். மீம் மற்றும் மீம் கிரியேட்டர்கள் அதை மிக எளிதாக செய்கிறார்கள். மீம் நல்லவைக்காக மட்டுமே இருக்கட்டுமே. சிரிக்கவும், சிந்திக்கவும் நீங்கள் காரணமாக இருங்கள்.

பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் அல்லது ரியாலிட்டி எதுவாக இருப்பினும்... நம்மால் ஒருவர் கெட நாம் ஏன் காரணியாக, கருவியாக இருக்க வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Think Posting Abusing Memes and Status on Social Media about Bigg Boss Contestants is Right?

Do You Think Posting Abusing Memes and Status on Social Media about Bigg Boss Contestants is Right?