வாழ்வில் செல்வமும், வெற்றியும் செழிக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 15 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வெற்றி யாருக்கு தான் பிடிக்காது.? யார் தான் தோல்வியை ஆசையுடன் எதிர்கொள்வார்கள்.? தெரிந்தே தோற்பவன் முட்டாளும் அல்ல. தெரியாமல் ஜெயிப்பவன் புத்திசாலியும் அல்ல. வெற்றியும் தோல்வியும் இரு கால்களை போல, இரண்டில் ஒன்று இல்லை எனிலும் உங்கள் வாழ்க்கை பயணம் முழுமை பெறாது.

இனிப்பை மட்டுமே உண்டு வரும் வரை அதன் முழு சுவை நம்மால் அறிந்துக் கொள்ள முடியாது. ஒருமுறை மிளகாயை கடித்துவிட்டு, பிறகு இனிப்பை உண்டு பாருங்கள் அப்போது தான் அதன் அருமை என்னவென்று புரியும். அப்படி தான் வெறியும் தோல்வியும். வெறும் வெற்றி உங்கள் வாழ்வை இனிக்க செய்யாது. அதற்கென மிளகாயை கடித்து கொண்டே இருப்பதும் முட்டாள்தனம்.

வாழ்வில் வெற்றியும், செல்வமும் செழிக்க நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது ஒரே ஒரு பொருள் தான். அந்த பொருளை எங்கே, யாரிடம் எப்படி காண்பிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என அறிந்துக் கொண்டால் நீங்கள் தான் உலகின் பெரிய வெற்றியாளர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலி!

போலி!

உன்னை ஏமாற்றும் நண்பர்கள், உறவுகள் மற்றும் சோம்பேறிகள் மத்தியில் வாழ்வதை விட கொடிய பழக்கம் வேறேதும் இல்லை. இவர்கள் தான் உனது வெற்றிகளையும், மேன்னேற்றதையும் தடுக்கும் முட்டுக்கட்டைகள்.

சேமிப்பு!

சேமிப்பு!

நன்றாக இருக்கும் போதே சேமிப்பை துவக்க வேண்டும். இது உங்களை மட்டுமின்றி நோய்வாய்ப்படும் காலத்தில் உறவுகளையும், கஷ்ட காலத்தில் நண்பர்களையும், ஆபத்து வரும் காலத்தில் உங்கள் வேலையையும் காத்துக் கொள்ள உதவும்.

நம்பிக்கை!

நம்பிக்கை!

அரச / அரசு அதிகாரத்தில் இருக்கும் நபர்கள், கூர்மையான நகங்கள் கொண்ட மிருகம் மற்றும் ஆயுதம் ஏந்திய மனிதன் இவர்களை ஒருபோதேம் நம்பாதே!

வெற்றி

வெற்றி

நீ அறிந்ததை மற்றவருக்கும் கற்பி, அது உன்னை நீயே மேபடுத்தி கொள்ளவும், அடுத்த நிலைக்கு செல்லவும் உதவும். ஒரு நாளும் புதியதாய் ஏதும் கற்காமல் உறங்காதே. ஒரு காரியத்தில் வெற்றிபெறும் வரை அதில் இருந்து விலகாதே. நல்ல காரியங்களில் ஈடுபடுத்தி கொள்ள தயக்கம் காட்டாதே.

கல்வி

கல்வி

ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட செல்வங்கள் இருந்தாலும், கல்வி கற்கவில்லை எனில், ஒரே நாளில் மொத்தத்தையும் இழக்கும் நிலை நேரிடலாம். இதை தெரிந்து கொள்.

குழந்தை

குழந்தை

ஐந்து வயது வரை குழந்தையை கொஞ்சு. பதினைந்து வயது வரை தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். அதற்கு மேல் அவரை நண்பனாய் நடத்து.

அறிவுரை

அறிவுரை

கடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும், வசதியானவனுக்கு கொடுக்கும் பரிசும், நோய்வாய்ப்பட்டவனுக்கு அறுசுவை உணவும், முட்டாளுக்கு அறிவுரையும் பயனற்றது.

காமம்!

காமம்!

காமத்தை விட கொடிய நோய் வேறில்லை. அறியாமையை விட கொடிய எதிரி வேறில்லை. கோவத்தை விட கொடிய தீ வேறில்லை, வருவோருக்கு எல்லாம் அள்ளிக் கொடுக்க செல்வம் இருந்தாலும், சந்தேகம் என வருபவனுக்கு தெளிவு படுத்த அறிவு வேண்டும்.

குருடன்

குருடன்

பிறவி குருடனை விட பெரும் குருடன் காமத்தில் திளைத்தவன். தற்பெருமை கொண்டவனுக்கு தீங்கு, கெடுதி தெரியாது. கஞ்சன் பாவம் தெரியாத குருடன்.

கற்று கொள்

கற்று கொள்

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

சிங்கம்

சிங்கம்

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு

கொக்கு

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

கழுதை

கழுதை

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

சேவல்

சேவல்

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

காக்கை

காக்கை

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

நாய்

நாய்

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் யார் ஒருவன் சரியாக கடைபிடிக்கிறானோ அவன் வாழ்வில் தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவான்.

ஒதுங்கி இரு!

ஒதுங்கி இரு!

யானையிடம் இருந்து ஆயிரம் அடிகள் விலகி இருக்க வேண்டும். குதிரையிடம் இருந்து நூறு அடிகள் விலகி இருக்க வேண்டும். கொம்பிருக்கும் விலங்குகளிடம் இருந்து பத்தடி விலகி இருக்க வேண்டும். உனக்கு துரோகம் செய்யும் நபர்கள், ஏமாற்றும் நபர்கள் வாழும் இடத்தில் இருந்து மொத்தமாக விலகி இருக்க வேண்டும்.

பணம்!

பணம்!

அன்னம் நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே வசிக்கும். நீ இல்லை என தெரிந்துவிட்டால் அங்கிருந்து வேறு நீர் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடும். அப்படி தான் சில மனிதர்கள் பணவசதி இருக்கும் வரை தான் உடன் இருப்பார்கள். ஆதாயம் இல்லை என அறிந்தால் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meaningful Sashtras That Will Help You To Lead a Successful Life!

Meaningful Sastras That Will Help You To Lead a Successful Life!