ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் போதெல்லாம் இந்த கதைய நியாபகம் வச்சுக்கோங்க!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு நமக்கு பால், தயிர், வெண்ணெய் என பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வர்கீஸ் குரியன் தான்.

Life Story of varghese kurian

அடிப்படையான தேவை அவை ஏன் மக்களுக்கு கொண்டு சேரவில்லை என்பதை கண்டுபிடித்த எளிய தொழில்நுட்பங்களின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மாபெரும் வெண்மை புரட்சியை செய்திருக்கிறார் வர்கீஸ் குரியன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வர்கீஸ் குரியன் :

வர்கீஸ் குரியன் :

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். வசதியான குடும்பம் தான். அப்பா அரசு மருத்துவர் என்பதால் நிறைய ஊர்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும் .

லயலோ கல்லூரியில் பி.எஸ்சி பிசிக்ஸ் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்ஞினியரிங் படித்தார்.

தன்னுடைய லட்சியப்படி ராணுவத்தில் சேர நினைத்தார். ஆனால் அவரின் அம்மா மறுத்ததால் லட்சியக்கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Image Courtesy

டாடா வேலை :

டாடா வேலை :

குரியனின் மாமா ஜான் மத்தாய் சிபார்சின் படி குரியனுக்கு டாடா ஸ்டீல் கம்பெனியின் ஜாம்ஷெட்பூர் கிளையில் வேலை கிடைத்தது.

எப்போதும் சுயமாக சிந்திக்க வேண்டும் என்றே விரும்பும் குரியனுக்கு மாமா சிபாரிசில் கிடைத்த வேலையை தொடர விருப்பமில்லை.

Image Courtesy

ஸ்காலர்ஷிப் படிப்பு :

ஸ்காலர்ஷிப் படிப்பு :

அப்போது பிரிட்டீஷ் அரசாங்கம். இந்தியா விலிருந்து 500 இன்ஜினீயர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கான முழு ஸ்காலர்ஷிப் தரும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. மெட்டலர்ஜி எனப்படும் உலோகவியல் பிரிவின் கீழ் குரியன் விண்ணப்பித்தார்.

Image Courtesy

பால் பண்ணை படிப்பு :

பால் பண்ணை படிப்பு :

நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்ற போது உலோக வியல் துறையில் இடங்கள் நிரம்பிவிட்டன, பால்பண்ணை பொறியியல் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்று சொல்ல, மாமா நிழலிலிருந்து தப்ப வேறு வழி தெரியவில்லை. குரியன் சம்மதித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது.

Image Courtesy

அதிகாரிகளை ஏமாற்றிய குரியன் :

அதிகாரிகளை ஏமாற்றிய குரியன் :

பால் பண்ணை படிப்பு பிடிக்கவில்லை ஆனாலும் மாமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்து ஒத்துக் கொண்டுவிட்டார். என்ன செய்ய என்று யோசித்தவருக்கு ஒரு வழி கிடைத்தது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படிப்பில் சேர்ந்தால் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்து அங்கே பால் பண்ணை இன்ஜினியரிங் படிக்காமல் தனக்கு விருப்பமான உலோகவியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தார்.

Image Courtesy

வசமாக சிக்கிய குரியன் :

வசமாக சிக்கிய குரியன் :

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் படிக்கப்போகும் மாணவர்கள் அரசு ஒதுக்கும் வேலையில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும். குரியனை கெய்ரா மாவட்டத்தில் ஆனந்த் என்னும் ஊரில் இருந்த பால் பண்ணைக்கு இன்ஜினீயராக நியமித்தார்கள். போகாவிட்டால், பெரும் தொகையை அபராதமாகக் கட்டவேண்டும். குரியனிடம் அத்தனை பணமில்லை. அதனால் வேறு வழியின்றி அங்கே செல்ல ஆரம்பித்தார்.

Image Courtesy

நட்பு விடுத்த கோரிக்கை :

நட்பு விடுத்த கோரிக்கை :

குஜராத் மாநிலம் ஆனந்த் ஊரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுவி மூடப்பட்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை திரிபுவன் தாஸ் என்பவர் கூட்டுறவு சங்கத்திற்கு என்று சொல்லி இலவசமாக பெற்றுக் கொண்டார்.

பயன்படுத்தாமல் கிடந்த இயந்திரங்கள் எல்லாம் பழுதடைந்திருந்தன. அவற்றை சரி செய்ய குரியன் வரவழைக்கப்பட்டார்.

Image Courtesy

மிகப்பெரிய சவால் :

மிகப்பெரிய சவால் :

அன்றைய நிலையில் இந்தியா பால் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்த நாட்களில் நியூசிலாந்து, இந்தியாவுக்கு பால் பவுடரை இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தது.

இந்தப் பால்பவுடரின் வருகையால் குரியனின் பால் விற்பனை குறைந்தது.

Image Courtesy

எருமைப் பாலில் பால் பவுடர் :

எருமைப் பாலில் பால் பவுடர் :

இதனை சமாளிக்க பால் பவுடரை தயாரிக்க விரும்பினார். பொதுவாக பால் பவுடர் பசுமாட்டுப் பாலிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படும். ஆனால் குரியன் இருந்த ஆனந்த் ஊரிலோ எருமை மாடுகள் மட்டுமே இருந்தன.

எருமை பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதிலிருந்து பால் பவுடர் தயாரிக்க முடியாது என்று சொல்லப்பட்டது.

ஆனால் விடாப்பிடியாக தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் முடியாததை முடித்துக் காட்டினார்.

சவால் :

சவால் :

பால் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்வதால் மட்டும் போதுமானதல்ல என்பதை உணர்ந்த குரியன் அடுத்த கட்டத்திற்கு சென்றார்.

பாலிலிருந்து தாயாரிக்கப்படும் மற்ற பொருட்களை தயாரித்து சந்தப்படுத்த ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான உணவை பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்து வந்தது அதனை உடைத்து குழந்தைகளுக்கான உணவையும் அறிமுகம் செய்ய பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை பயங்கரமாக சரிந்தது.

சிக்கல் :

சிக்கல் :

இவ்வளவு சாதனைகளும் ஒரே நாளில் நிகழ்ந்தவை அல்ல. என்னற்ற போராட்டங்களை சந்தித்தார் குரியன். இதில் இருக்கும் அடிப்படை சிக்கல் என்ன தெரியுமா? குரியன் பணியாற்ற வேண்டியது முழுக்க படிக்காத ஏழை விவசாயிகளிடம்.

ஏற்கனவே பெருநிறுவனங்களால், இடைத்தரகர்களால் சுரண்டப்படும் அவர்களிடம் எதைச் சொல்லி என் திட்டத்தை நிறைவேற்றுவது என்று நினைகக்வில்லை குரியன் அவர்களுக்கு புரியும் எளிய முறையில் நவீன தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்தார்.

நினைத்தது நடந்தது.

Image Courtesy

வாரியம் துவக்கம் :

வாரியம் துவக்கம் :

அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் ஊருக்கு வந்தார். குரியனின் அற்புதங்களைக் கண்டு வியந்த பிரதமர், இந்தப் புரட்சி நாடு முழுமைக்கும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்காக குரியன் தலைமையில் 1965 ஆம் ஆண்டு தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் என்ற அமைப்பையே மத்திய அரசாங்கம் உருவாக்கியது.

Image Courtesy

வெண்மை புரட்சி :

வெண்மை புரட்சி :

ஆப்ரேஷ்ன் ஃப்ளட் என்னும் பெயரில் மூன்று கட்டங்களாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டது,இந்தத்திட்டமே வெண்மை புரட்சி என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பால் கொள்முதல் செய்யும் நிலையில் இருந்த இந்தியா, உலகிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் ஆனது.

Image Courtesy

குரியனின் சாதனை :

குரியனின் சாதனை :

இந்திய மக்கள் அனைவரும் பால் அருந்த வழிவகுத்த குரியன், இயல்பில் பால் அருந்த மாட்டார்.

1993 இன் உலகின் சிறந்த ஆளுமை விருது, பால் உற்பத்தி தொழிலின் உலக உயர் விருது, வால்டர் அமைதி விருது, உலக உணவு விருது, மாக்ஸேஸே விருது என உலகின் மிக முக்கியமான பல விருதகள் அவருக்கு கிடைத்தது. இவற்றில் பலதையும் வென்ற ஒரே ஒரு இந்தியரும் அவர் மட்டுமே.

Image Courtesy

முழுமை பெறாத கனவு :

முழுமை பெறாத கனவு :

தன்னுடைய சுயசரிதையில், ‘தனது ரத்தத்தை வேர்வையாக சிந்தி நமக்காக உணவை தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன் நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும் அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று வர்கீஸ் குரியனின் ஐந்தாவது நினைவுதினம்!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Life Story of varghese kurian

Life Story of varghese kurian
Story first published: Sunday, September 10, 2017, 10:16 [IST]
Subscribe Newsletter