மரணத்திலும் மர்மம் நீடித்த இளவரசி டயானாவின் நீங்கள் அறியாத மறுபக்கம்!!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரை கவர்வதற்கு நமக்கு என்னவெல்லாம் தகுதிகள் இருக்க வேண்டும் என்பது யாராலும் வகுத்து சொல்ல முடியாது ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பு வெறுப்புகள் இருப்பதுண்டு.

இளவரசி டயானா பார்ப்போர் எல்லாருமே தன்வீட்டு பிள்ளை என்று நினைக்கும் அளவிற்கு ஒரு அந்நியோன்னியமான முகம் அரச குடும்பத்தின் இளவரசி என்றாலும் பந்தா காட்டாத அவரது குணம் அவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரச குடும்பம் :

அரச குடும்பம் :

எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.

Image Courtesy

காதல் திருமணம் :

காதல் திருமணம் :

இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையது தான்! எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான டயானா மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார்.

‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?'எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

Image Courtesy

உயர்ந்த இமேஜ் :

உயர்ந்த இமேஜ் :

டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு...

ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால் நர்சரிகள்,மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார்.

ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது.

அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது.அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வெளியானது.

Image Courtesy

குழந்தைகள் :

குழந்தைகள் :

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை.

அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

Image Courtesy

வருத்தத்தில் டயானா :

வருத்தத்தில் டயானா :

சார்லஸுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து மிகவும் நொந்து தான் போனார் டயானா. இந்தப் பிரச்சனையால் சில முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். அதோடு எதைச் சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற நோயும் தாக்கியது. மிகவும் மன வருத்தத்துடனேயே காணப்பட்டார்.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.எயிட்ஸ் நோயாளியிடம் நேரடியாக கைகுலுக்குவது, தொழு நோயாளிகளிடம் நலம் விசாரிப்பது என எப்போதும் வியப்புக்குள்ளாக்கிக் கொண்டேயிருந்தார்.

Image Courtesy

மக்களின் ராணி :

மக்களின் ராணி :

குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் - டயானா விரிசல் பகிரங்கமானது இது குறித்து எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல...மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..'' என்று டயானா கூறியது மக்கள் மனதில் நிலைத்து நின்றுவிட்டது.

Image Courtesy

விவாகரத்து :

விவாகரத்து :

டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார்.அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை.

கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.

சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த,1996 ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது.

Image Courtesy

மரணத்தின் வாயில்

மரணத்தின் வாயில்

இதற்கு பிறகு அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது. குறிப்பாக டயானாவின் மரணத்திற்கு இது தான் வழிவகுக்கும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

பாரீஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம்.அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள்.

அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு கோர விபத்தில் சிக்கியது. டோடியும் பாதுகாவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Image Courtesy

மர்மங்கள் :

மர்மங்கள் :

கார் ஓட்டுநர் போதையில் இருந்தார், டயானா பயணித்த கார் மிகவும் பழைய மாடல் கார் அதில் 30 கி.மீ., வேகமாக பயணிக்க கூடாது. அதில் 150 கி.மீ.,வேகத்தில் பயணித்தது தான் விபத்திற்கு காரணம், டயானா அரசு குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்ததார்.

அதோடு, அவர் விவாகரத்து செய்தது அரசு குடும்பத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. எனவே அவரைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது என்றார் முன்னாள் உளவுப்பிரிவு ஏஜென்ட்டான ஜான் ஹோப்கின்ஸ்.

அவரது மரணத்தில் பல குழப்பங்கள் நீடித்தாலும் இன்று வரை நம் இதயங்களில் மக்களின் ராணியாக வலம் வருகிறார் டயானா.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Life story of princess Diana

Life story of princess Diana
Story first published: Thursday, August 31, 2017, 16:24 [IST]
Subscribe Newsletter