உங்களை உறைய வைத்திடும் ஓர் குழந்தையின் உண்மை சம்பவம்!

Posted By:
Subscribe to Boldsky

எட்டு வருடங்கள் கழித்து பார்க்கப்போகும் மனைவிக்கு என்ன வாங்குவது என்று எவ்வளவு நேரம் யோசித்தாலும் ஒன்றும் புரியவில்லை. என்னைப் பிரியும் போது ஐந்து மாதம் கர்ப்பமாய் இருந்தாள். அதற்கு பிறகு....

அண்ணே இந்த சேலை எவ்ளோ?

1500 ரூவா...

எடுத்ததை அப்படியே கீழே வைத்து விட்டு நகர்ந்தான்.

கையில் இருக்கும் மூன்றாயிரத்தில் யார் யாருக்கு என்னென்ன வாங்குவது. இவ்வளவு வருடங்கள் கழித்து பார்க்கும் என்னை அடையாளம் கண்டுகொள்வார்களா? அடையாளம் தெரிந்தாலும் ஏற்றுக் கொள்வார்களா?? மன்னிக்கிற அளவுக்கு நான் பண்ணது சின்னதப்பா..... நம் பட்ஜெட்டிற்கு இந்த கடை ஒத்து வராது என்று வெளியேறி நடக்க ஆரம்பித்தான். கடைத்தெரு முழுக்க பெரிய கடைகள் தான் இருந்தது. என்ன வாங்குவது எங்கே வாங்குவது என்று குழப்பமாய் இருக்கிறது கையில் இருக்கும் பணத்தை அப்படியே கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்து ஊருக்குச் செல்ல பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

எட்டு வருடங்களில் என்னென்மோ மாறியிருக்கிறது. பார்ப்பதையும் பார்த்ததையும் ஒப்பிட்டுக் கொண்டே வந்தான். ஊருக்குச் செல்லும் பஸ் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ஏறி உட்கார்ந்தான். மனசு முழுக்க மனைவியும் அம்மாவையும் சுற்றியே இருந்தது. அவன் கிளம்பும் போது மண்ணை அள்ளி வீசிய அவளது தலைவிரிகோலம் தான் இன்றளவும் நெஞ்சில் நிற்கிறது.

கிழவி இருக்கா இல்ல போய் சேந்துடுச்சான்னே தெர்ல.... போய்ட்டா சொல்லாமயா இருந்துருப்பாங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போலீஸ் விசாரணை :

போலீஸ் விசாரணை :

அண்ணே... என்ன மேட்டரு... நேத்து எங்கயாவது இடுச்சுட்டு வந்துட்டியா?

போலீஸ் எல்லாம் வீட்ல உக்காந்திருக்கு ஆட்டோ ஸ்டாண்டில் குமாரின் தம்பி கேட்டதம் பகீரென்றது ஆனால் வெளிக்காட்டாமல் அதெல்லாம் ஒண்ணுமில்ல மாப்ள என்று சொன்னாலும் அங்கேயே உதறல் ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்கு வந்தவர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இங்கே தான் இருப்பேன் எனத் தெரிந்து இங்கேயும் வந்துவிடுவார்கள் என்று பயந்து ஆட்டோவை எடுத்து கிளம்பினான்.

பின்னாலிருந்து எங்கடா போற? என்று தூரமாய் கேட்டு முடிந்திருந்த நேரத்தில் ஆட்டோ பத்தடி நகர்ந்திருந்தது. எங்கே போவது? யாரிடம் சொல்வது? எப்படி தப்பிப்பது ஒன்றுமே விளங்கவில்லை ஆட்டோவுடன் அப்படியே ஆற்றுக்கல் பாலத்தில் விழுந்து விடலாமா? விபத்து என்று நினைத்துக் கொள்வார்கள் ஆனா நான் செத்துட்டா? ஐயோ சாகக்கூடாது எங்கடா போவேன் உள்ளே புலம்பியபடி வேகமாக வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.

டேய் *"*"*"*.... மவனே எல்லாம் உன்னால வந்த வின.. ஐயோ இப்போ என்னாகப்போதுன்னு தெர்லயே என்று அலறித்துடித்தான். பாக்கியம் தெருவில் வாடகைக்கு சைக்கிள் வாங்க போகும் போது தான் அந்த நாய் அறிமுகமானான் வாடா அண்ணே உனக்கு கோலிக்குண்டு வாங்கித்தரேன் என்று முதன் முதலாக காட்டுப்பகுதிக்கு கூட்டிச் சென்றான். கொஞ்சம் உள்ளே சென்றதும் என்னுடைய டவ்சரை கழட்டினான்

Image Courtesy

முதல் சம்பவம் :

முதல் சம்பவம் :

அண்ணே வேணாம் அப்பா வைவாரு நான் போறேன்.... அம்மா தேடும் நான் போணும் என்று சொல்ல சொல்ல கேட்காமல் என்னென்னமோ செய்தான். ஐந்தே நிமிடத்தில் அவனே என் டவ்சரை எடுத்து மாட்டிவிட்டு இதுக்கெல்லாம் அழலாமா டா என்று சொல்லி நான்கு கோலிக் குண்டும் கையில் ஐந்துரூபாய் பணமும் கொடுத்தான். அவன் சைக்கிளிலேயே என்னை வீட்டிற்கும் அழைத்துவந்து விட்டவன், அம்மாவிடம் மதனி தனியா விளையாட விடாதீக காட்டுப்பக்கம் போய்ட்டான் வழித்தெரியாம அழுதுட்டு நின்னுட்டு இருந்தான் அந்தப் பக்கம் போனனால் கூட்டி வந்துட்டேன் என்று ஒர் கதையை உருவாக்கி அம்மாவிடம் அளந்துவிட்டான்.

அம்மாவைப்பற்றி சொல்லவா வேண்டும்.... ஐய்யனாரே நேரில் வந்து சொல்வது போல நம்பினாள். அம்மாவின் தயவுடன் தொடர்ந்தது. அம்மாவும் உண்மைக்காரணம் தெரியாமல் என்னை அவனுடன் அனுப்புவது பாதுகாப்பானது என்று நம்பினாள்.

யாரோ ஆட்டோவை கை மறித்து நிற்கிறான். பழக்கதோசத்தில் வண்டியை மெதுவாக்கி பின்னர் சுதாரித்து வேகமெடுப்பதற்குள் சார்... சார் ரொம்ப அர்ஜெண்ட் ஸ்டேஷன் பக்கம் விட்ருங்களேன் இன்னும் 20 நிமிசத்துல ட்ரைன் ப்ளீஸ் சார் என்று கையில் ஒரு பெட்டியுடன் நின்றிருந்தான். ஏற்றிக்கொள்ளவும் மனமில்லை முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அவனைத் தவிர்க்க அதிக பணம் கேட்கலாம் என்று 150 ஆகும் பரவாயில்லயா என்றேன்...

எவ்ளோ ஆனாலும் பரவாயில்ல சார் என்று என் பதிலை எதிர்பாராமல் உள்ளே ஏறிக்கொண்டான்.

Image Courtesy

விளையாடிய விதி :

விளையாடிய விதி :

விதி இப்படி விளையாடுகிறது என்று நினைத்து ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ஓட்ட ஆரம்பித்தேன். மெல்ல பேச்சுக்கொடுத்தான் நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவன் பேசுவது கூட எனக்கு கேட்கவில்லை மனம் முழுக்க குமாரின் தம்பி சொன்னது தான் ஓடிக் கொண்டிருந்தது.

ரயில்வே ஸ்டேஷன் நெருங்குவதற்கு முன்னரே... இங்கதான் இங்கதான் நிப்பாட்டுங்க என்று சொல்லி என் முதுகில் தட்டினான்.

தம்பி ஸ்டேஷன் இன்னும் வர்ல கொஞ்ச தூரம் போணும். எஸ்கலேட்டர் கிட்டயே போய் நிப்பாட்றேன் உக்காருங்க என்று பின்னால் திரும்பி சொல்லிக் கொண்டிருக்கும் போதே வலப்புறத்தில் ஒருவர் வந்து ஏறிக்கொண்டார். ஹலோ...யார் சார் நீங்க வண்டி சவாரி போய்ட்டு இருக்கு என்ன வேணும் உங்களுக்கு இறங்குங்க முதல்ல... என்று வலப்புறத்தில் இருப்பவனை தள்ளிக்கொண்டிருக்கும் போது பின்னால் இருந்தவன் இறங்கி எனக்கு இடப்புறத்தில் வந்துவிட்டான். இருவரும் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்கள்.

சவாரி போற மூஞ்சியப் பாரு இறங்குடா என்று சொன்னவுடன் தான் நான் வசமாக சிக்கிக் கொண்டது புரிந்தது. சார் இரண்டு மணி நேரம் வண்டிய ஓட்டிட்டேயிருக்கீங்க எவ்ளோ தூரம் தான் பின்னாடி வர்றது என்று சொல்லியபடி என்னை ஆட்டோவில் இருந்து இறக்கி ஜீப்பில் ஏற்றினார்கள். எதுவும் பேசவில்லை அமைதியாக ஒத்துழைத்தேன்.

Image Courtesy

ஊருக்கு பயணம் :

ஊருக்கு பயணம் :

ஊரில் இறங்கியவுடன் எங்கள் பேருந்து நிலையத்திற்கு அடையாளமாய் இருந்த பூரிக்கடை இல்லை சற்று தள்ளியிருந்த பிள்ளையார் சிலை இல்லை, பெரிய ஆலமரம் இல்லை ரெண்டு ஹோட்டல்கள் முளைத்திருந்தது. ஒன்றின் வாசலில் டீக்கடையும் சேர்ந்திருந்தது. இங்கிருந்து உள்ளே செல்ல வேண்டும். பஸ்ஸ்டாண்டே இப்படி மாறியிருக்குமானால் ஊர்... வீடு எல்லாமே மாறியிருக்கணுமே என்று யோசித்தான்.

அந்தக்கடையில் டீ யை குடித்துவிட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தான், சிலர் கண்டுகொண்டாலும் அடையாளம் தெரியாமல் முழிப்பதை யூகிக்க முடிந்தது. புதிதாக ஒரு நாய் உள்ளே நுழைந்தால் கூட வெறித்து பார்க்கும் ஊரில் ஆறடி நாய் நுழைந்திருப்பது தெரியாமல் இருக்குமா என்ன?

அடையாளப்படுத்திக் கொண்டு பேசவும் கொஞ்சம் தயக்கமாய் இருந்தது.

Image Courtesy

செருப்படி :

செருப்படி :

கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது இவர்கள் லாரி லாரியாக வந்து இறங்கிவிட்டார்கள். ஊர்க்காரர்களை பார்த்ததும் எனக்கு ஆதரவாக ஊரே வந்திருக்கிறது என்று நினைத்து பார்ரா மாப்ள என்று அடித்து காய்ச்சிய காயத்தை காட்டினேன் . கையிலிருந்த காயத்தை பார்த்தவன் கொஞ்சம் கூட அசராமல் பல்லை கடித்துக் கொண்டு சாவுடா நாயே என்று பளார் என்று அறைந்தான். சின்ன சலசலப்பு செருப்பு, முட்டை எல்லாம் வந்து விழுந்தது. அதற்குள் போலீஸ் மூடி மறைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

இப்போது நான் தனியாக ஊருக்குள் வந்துவிட்டேன் என்று தெரிந்தால், என்னென்ன செய்வார்களோ எதுக்கு வம்பு மொதோ வீட்ல போய் அம்மா கால்ல விழுந்திடணும் நான் திருந்திட்டேன்மான்னு சொல்லணும். என்று நினைத்துக் கொண்டு விறுவிறுவென்று வீடு இருந்த தெருவை நோக்கி நடந்தான்.

Image Courtesy

வாழைத்தோட்டம் :

வாழைத்தோட்டம் :

வாழத்தோட்டம் வழியா போன பத்து நிமிஷத்துல போய்டலாம்... ஆனால் தூரத்தில் தெரிந்த வாழைத்தோப்பு அவனின் நினைவுகளை பின்னோக்கி இழுத்தது.

அன்று மாலை,பள்ளிக்கூட சவாரி இருந்தது. எல்லா மாணவர்களையும் இறக்கிவிட்டு கடைசியாக செவ்வந்தியை இறக்கிவிட வேண்டும். சத்தியமாக அவள் பெயர் தெரியாது நான் செவ்வந்தி என்று தான் அழைப்பேன். எப்போதும் சிரித்துக் கொண்டேயிருப்பாள் அவளைப் பார்த்தாலே மலர்ச்சியான பூ தான் நினைவுக்கு வரும்.. வாய்த்துடுக்கு அதிகம் அவளுக்கு, என்னை ஆட்டோ மேன் என்பாள்... நீ தான் என் பெரிய ப்ரெண்டு என்பாள், திடீரென்று அப்பா எப்போதாவது மாமா வழியில் அம்மா பார்த்தால் டேய் சேகரு என்று அழைப்பதை கேட்டு இவளும் டேய் சேகரூ என்று சொல்லி வாயை மூடி சிரிப்பாள். ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஆட்டோவில் ஓயாமல் பேசிக் கொண்டே வருவாள் நிறைய கதை கேட்பாள் பள்ளியில் நடந்த சண்டைகளை விவரிப்பாள். நானாக எனக்கு பிடித்த பூவின் பெயரை அவளுக்கும் வைத்துக் கொண்டேன்.

ரெண்டாக்கிளாஸ் என்று நினைக்கிறேன்... இல்லைல்லை செக்கண்ட் ஸ்டாண்டர்ட் சி செக்‌ஷன் என்று அழுத்தம் திருத்தமாக செவ்வந்தியைப் போலவே சொல்லிப் பார்த்தான். அன்றைய தினம் என்ன நினைத்தேன் என்றே தெரியவில்லை ஆட்டோவை இந்த வாழைத்தோப்பு பக்கம் செலுத்தினேன் எங்க போறீங்க என்று கேட்டாள் அங்கிட்டு ஏதோ தோண்டி போட்ருக்கான் ஆட்டோ போக முடியாது வர்றப்பவே இந்த வழியா தான் வந்தேன் பாப்பா என்று சொல்ல சமாதானமாகிவிட்டால் லேசாக வெளிச்சம் இருந்தது. ஆட்டோலயே இருக்கியா பாப்பா நான் உள்ள என் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன்ட்ட கொஞ்சம் பணம் வாங்கணும் ரெண்டு நிமிஷத்துல வந்திடுவேன் என்று சொன்னேன்...

Image Courtesy

அரங்கேறிய கொடூரம் :

அரங்கேறிய கொடூரம் :

முதலில் ம்ம்... இருப்பேனே என்று சொன்னவள் பிறகு வேணாம் நானும் வரேன் பேய் வந்து தூக்கிட்டு போய்ட்டா என்று சொல்லி ஆட்டோவிலிருந்து இறங்கிவிட்டாள். நான் செய்வது சரியா? தவறா? ஒன்றும் தவறாகாது கையில் மிட்டாயை திணித்து அனுப்பி ஆசையாய் கொஞ்சினால் மாட்டிக்கொள்ள மாட்டோம். அந்த நாய் பின்பற்றிய அதே டெக்னிக்கை செயல்படுத்த வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டே உள்ளே உள்ளே..... சென்று கொண்டிருந்தான்.

இன்னும் எவ்ளோ தூரம் என்று குழந்தை கேட்டவுடன் சுற்றிலும் பார்த்தான். முழுவதும் வாழை தான் தெரிந்தது. யாருமில்லை இந்நேரத்தில் இந்தப்பக்கம் யாரும் வரமாட்டார்கள். நான் எதுவும் வாய் திறக்கவில்லை கையை பிடித்து இழுத்து கீழே படுக்க வைத்தேன்... ஊருக்கே கேட்கும் படி அலறினாள்.. கத்தாத கத்தாத என்று வாயைப்பொத்தினாள் வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று அடம்பிடித்தாள் இந்தா போலாம் இந்தா போலாம் என்று சொல்லிக் கொண்டே யூனிஃபார்மை கழட்ட.. என்னை கழட்ட விடாமல் அம்மாட்டா போணும் என்று அலறினாள் அலறலில் யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயந்து இரு பாப்பா கத்தாதுன்னு சொல்றேன்ல என்று சொல்லி வாயை முடினேன். முழுதாய் ஒரு நிமிடம் கூட கடந்திருக்காது வேகமாக துள்ளி துள்ளி குதித்தவள் அடங்கிவிட்டாள். ஆம், மொத்தமாய் அடங்கிவிட்டாள். துள்ளல் நின்றவுடன் சரி பயந்துவிட்டாள் போல என்று நினைத்து கையை விட்டால் பொத்தென்று கீழே விழுந்தாள்.

Image Courtesy

செவ்வந்தி :

செவ்வந்தி :

ஏய் பாப்பா... இங்க பாரு கண்ண தொற ஏய் செவ்வந்தி கண்ண தொற இங்க பாரு என்று கண்ணத்தை தட்டினேன் ஆனால் அவள் எழுந்தரிக்கவேயில்லை ஐயோ... செத்துட்டாளா அய்யையோ.... அலறக்கூட முடியவில்லை ஆசையை தீர்த்துக் கொண்டேன்.

எல்லாம் முடிந்த பிறகு அவளைதூக்கிக் கொண்டு ஆட்டோவின் பின் புறம் படுக்க வைத்தேன். எங்கே செல்வது? விபத்து நாடகமாடலாமா? ஆனால் கண்டுபிடித்துவிட்டால்??? ஆற்றில் ஆட்டோ இறங்கிவிட்டது என்று சொல்லல்லாமா? ஆனால் ஆற்றுப்பக்கம் ஏன் போன அங்க போக வேண்டிய அவசியமே இல்லையே என்று கேள்வி கேட்டால் என்ன சொல்வது மணி ஏழரை ஆகிவிட்டது. செவ்வந்தி வீட்டிலிருந்து போன்

இதை எடுக்கலாமா? வேண்டாமா பதட்டத்துடன் வியர்த்து ஒழுகியது.

தொடர்ந்து இரண்டாவது முறையும் ஒலித்ததாள் எடுத்து ஹலோ அக்கா என்றேன்

பாப்பா இன்னும் வர்ல ஸ்கூல்ல இருந்து பிக்கப் பண்ணிட்டீங்களாம் எங்க இருக்கீங்க என்று குரல்

நன்றாக கேட்டது.ஆனால் கேட்காதது போல இரண்டு முறை ஹலோ ஹலோ.... என்று சொல்லிவிட்டு பாப்பாவா..... நான் ஆறு மணிக்கே இறக்கிவிட்டேனாக்கா கேட் மூடியிருந்துச்சு தொறந்துவிடவான்னு கேட்டேன் நானே போய்டுவேன்னு சொல்லிச்சுக்கா அதான் அப்டியே வந்துட்டேன்.

அவர்கள் பதட்டமடைவதை நன்றாக உணர முடிந்து. இன்னும் வீட்டுக்கே வர்லயே அவ என்று உடைந்து அழும் சத்தம் கேட்டது நானும் பதட்டமடையவது போல நடித்து, அரை மணி நேரத்துல வந்திடறேன்க்கா..என்று சொல்லி போனை வைத்தேன்.

Image Courtesy

பழைய நினைவுகள் :

பழைய நினைவுகள் :

வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்துவிட்டேன். ஓட்டு வீடுகள் எல்லாம் கான்க்ரீட் வீடுகளாக மாறியிருந்தது. ஒரு வீட்டின் வாசலில் பெண்மணி வாசலில் பாத்திரத்தை போட்டு விளக்கிக் கொண்டிருந்தார். தெருவே தண்ணீர் பிடித்த பம்ப் பள்ளத்தில் இறங்கியிருந்தது அங்கே இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள் என்னைக் கண்டுகொண்டார்கள் ஆனால் பேசவில்லை. நான் பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்று.. அக்கா... என்றேன்

அவர் பின்னால் திரும்பி என் முகத்தை மேலே பார்த்தார். என்ன சார் வேணும்? என்று கேட்க நானும் இங்க பஞ்சு வீடு.... ஆமா நீங்க நான் அவங்க புள்ள தயக்கத்துடன் முணங்கினேன். யாத்தே... என்று அலறியபடி எழுந்தவர் தெருவில் நின்றுகொண்டிருந்த பையனை இழுத்து பிடித்துக் கொண்டார். பத்தடி தூரம் விலகி ஐயோ இந்நேரம் பாத்து சின்னவனக் காணோமே எங்கன போய் தேடுவேன்.. சுற்றிலும் இருந்த பெண்கள் திரண்டுவிட்டாரக்ள்.

அக்கா பஞ்சோட மூத்த பிள்ள போலீஸ் பிடிச்சுட்டு போச்சுல்ல அவன்க்கா நம்ம புள்ளை தூக்கிட்டு போய்டபோறான் என்று அழ... பெண்கள் எல்லாம் கையில் கிடைத்ததை வைத்து விரட்ட ஆரம்பித்தார்கள் சத்தம் கேட்டு வெளிய வந்த சில ஆண்களும் காரணம் ஏதும் கேட்காமல் விரட்டிவிட்டார்கள்.

Image Courtesy

எரித்துக் கொலை :

எரித்துக் கொலை :

இன்னும் அரை மணி நேரத்தில் நான் பாப்பாவின் வீட்டிற்கு சென்றாக வேண்டும். அதற்குள் இவளை என்ன செய்வது என்று தெரியாமல் ஊரை தாண்டிவிட்டேன். ஹைஃவேஸ் ஓரமாக வண்டியை நிப்பாட்டி சிறுநீர் கழிக்க செல்வது போல ஓரமாய் ஒதுங்கினேன். பத்தடி தூரம் உள்ளே நடந்தால் கொஞ்சம் சமமான தரை இருக்கிறது. சரி இங்கேயே புதைத்துவிடலாம் என்று கைகளால் மண்ணை அகற்ற முயல இறுக்கமாக கட்டியிருந்த மண்ணை கைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவ்வப்போது கடந்து செல்லும் வாகனங்களின் சத்தம் பயத்தை அதிகரிக்கவே செய்தது. சரி நேரமில்லை எரித்துவிடலாம். என்று பாப்பாவை தூக்கிக் கொண்டு சமதளம் இருந்த பகுதிக்கு வந்துவிட்டேன். முகம் முகம் அடையாளம் தெரிந்து விட்டாள் பள்ளி சீருடையை பார்த்தால் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள். அவளது ஸ்கூல்பை சாப்பாட்டுக் கூடை எல்லாம் இருக்கிறதே என்று பயங்கர குழப்பமாய் இருந்தது.

சீருடையை கழற்றிவிட்டேன். முகத்தை மூடி அவசரத்திற்காக தண்ணீர் பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெட்ரோலை அவள் மேல் முழுவதுமாக ஊற்றி பற்ற வைத்தேன். குப்பென்று எரிய ஆரம்பித்து ஐம்பது சதவீதம் எரியும் வரை அங்கேயே நின்றிருந்தேன். மனதில் எதுவுமே ஓடவில்லை. இதனை மறைக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஸ்கூல் பேக்கை ஒரு திசையிலும் டிபன் பாக்ஸை இன்னொரு திசையிலும் வீசிவிட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு நேராக பாப்பா வீட்டிற்கு சென்றேன்.

Image Courtesy

செவ்வந்தி வீடு :

செவ்வந்தி வீடு :

ஆட்கள் குழுமியிருந்தார்கள். போலீஸும் வந்திருந்தது. வீட்டுக்கு முன்னாடி ஆட்டோவ நிப்பாட்டினேன் அவ இறங்கினா கேட் மூடியிருக்குறத பாத்து தொறந்துவிடவான்னு கேட்டேன் அவ நானே தொறந்துப்பேன்னு சொன்னா? நாளைக்கு காலைல எட்டு மணிக்கு வர சொன்ன என்ற கதையை திரும்ப திரும்ப அழுத்தமாக சொன்னேன்.

நம்பிவிட்டார்கள். இல்லை நம்புவது போல நடித்தார்கள். பழனிக்கு காவடி எடுக்கிறேன் என்று வேண்டிக்கொண்டேன், சகஜமாக இருக்க முயன்றும் என்னால் முடியவில்லை போலீஸ் சீருடை அணிந்த யாரைப் பார்த்தாலும் அடிவயிறே கலங்கியது.

வீட்டிற்கு தாமதமாக சென்று விடிந்தவுடனேயே கிளம்பி ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்துவிடுவேன். ஊரே பரபரப்பாக செவ்வந்தி பற்றிய பேச்சு தான்.

Image Courtesy

பேப்பர் செய்தி :

பேப்பர் செய்தி :

சம்பவம் நடந்த இரண்டாம் நாள் எரிந்த நிலையில் இருந்த பாப்பாவை கண்டுபிடித்திருந்தார்கள். நான் வீசிய பைகளையும் கைப்பற்றியிருந்தார்கள். என்னை நெருங்கிவிட்டதைப் போல ஓர் உள்ளுணர்வு சொல்லியது.

ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதே செய்தித்தாளில் மாரில் அடித்து அழும் தந்தையின் புகைப்படமும் மருத்துமனையில் படுத்திருப்பது போல பாப்பாவின் அம்மா படமும் இருந்தது. இதைக் காலையில் ஆட்டோ ஸ்டாண்டில் பார்த்த அன்றைய தினம் மதியம் தான் என்னைத் தேடி என் வீட்டிற்கு போலீஸ் வந்திருக்கிறது.

Image Courtesy

சிதைத்த ரயில் :

சிதைத்த ரயில் :

இப்போ என் பொண்டாட்டி அம்மா எல்லாம் எங்கயிருக்காங்கன்னு யார்ட்ட போய் கேக்குறது என்று தெரியாமல் டீக்கடையில் நின்றிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ஊருக்கு புதுசு பட்டணத்துல வேல பாக்க போயிருந்தேன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரணையை துவக்கினான். முடிவில் பாப்பாவின் அம்மா இறந்துவிட்டார் என்றும் சேகரு குடும்பம் அதே இடத்தில் வாழ முடியாமல் ரயில்வே கிராசிங்கை தாண்டி போய்விட்டார்கள் என்று தெரிந்து கொண்டான். ஆனால் சரியான அடையாளம் தெரியவில்லை.

ரயில்வே பாலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். போனவுடன் அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். மனைவி... மனைவி என்ன செய்வாள் நான் வரும் போது அவள் ஐந்து மாதம் கர்ப்பமாய் இருந்தாள். குழந்தை நன்றாக வளர்ந்திருக்கும் தானே... அவளுக்கு.... என்று எதையோ யோசித்து ச்சை..இன்னும் என் புத்தி மாறவேயில்ல பாப்பாவ செஞ்ச மாதிரியே என் புள்ளையையும் செஞ்சுட்டா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கை கால்கள் நடுங்கியது.

தூரத்தில் ரயில் வருவது தெரிந்ததும் முன்னால் சென்று பாய்ந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதிவிட்டது. 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டு உடலின் மேலும் ட்ரைன் ஏறிச்செல்ல உரு தெரியாமல் சிதைந்ததை ட்ரெயினுக்கு டாட்டா காட்டுவதற்காக நின்றிருந்த குழந்தைகள் ஹே...... என்று கைத்தட்டி உற்சாகமாக கத்தினார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Life Story of child pedophile

    Life Story of child pedophile
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more