For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘ப்ளே பாய்’ பற்றித் தெரியுமா?

ப்ளே பாய் பத்திரிக்கை மூலமாக அமெரிக்காவின் வாழ்வியலையே மாற்றியமைத்த ஹூக் ஹென்னர் பற்றிய சில தகவல்கள்

|

செக்ஸ் என்று வார்த்தை உச்சரிக்க்கவே இன்று பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருகிறார்கள்,அப்படியே பேசினாலும் இன்னும் இந்தியா வெளிநாடாகிடவில்லை என்று நினைவூட்டப்படுகிறது. இதற்கு உடனடி எடுத்துக்காட்டாக அமெரிக்கா

வெளிநாடுகளில் செக்ஸ் எல்லாம் சர்வசாதாரணம் என்ற தொனியிலேயே ஒவ்வொருவரின் பிரம்மப்பு அடங்கியிருக்கிறது. அந்த சர்வ சாதரணம் என்ற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் ஒருவரைப்பற்றிய அறிமுகம் தான் இது.

Life history of play boy magazine founder Hugh Hefner

Image Courtesy

வாழ்வியல் முறையை மாற்றியவர்,பாலியல் புரட்சியாளர்,அமெரிக்க கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றெல்லாம் புகழப்பட்டவர் ஹுக் ஹெஃப்னர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அறிமுகம் :

அறிமுகம் :

ஹெஃப்னர் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஹூக் ஹெஃபனர் இரண்டு ஆண்டுகள் இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் பணிபுரிந்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டு ப்ளே பாய் இதழை துவங்கினார்.

1953-ம் ஆண்டில், 600 டாலரை முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட 'பிளே பாய்', 1960-ம் ஆண்டில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. 1970-களில் அது ஏழு மில்லியனைத் தொட்டது. '

Image Courtesy

ப்ளே பாய் :

ப்ளே பாய் :

பிளே பாய்' பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த அமெரிக்கா, தற்போது நாம் பார்க்கும் அமெரிக்காவாக இல்லை. அது நிறைய பழைமைவாதங்களைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் உடலுறவைப் பற்றி வெளிப்படையாக எழுதியது 'பிளே பாய்'.

பெண்களின் அரை நிர்வாண, முழு நிர்வாணப் படங்கள் நடுப்பக்கத்தில் வெளியானது. ஹெஃப்னரின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இருட்டில் வைக்கப்பட்டிருந்த செக்ஸை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

Image Courtesy

ஹெஃபனரின் நிலைப்பாடு :

ஹெஃபனரின் நிலைப்பாடு :

பொதுவெளிகளில் பாலியல் வெளிப்பாட்டை ஊக்குவிக்காவிட்டால், தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரோக்கியமில்லாத பாலியல் வெளிப்பாடுகள் நடக்கும். நீங்கள் செக்ஸைப் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும் அடக்கிவைப்பதினால் ஒரு புண்ணியமும் இல்லை என்று அடிக்கடி கூறுவார்.

Image Courtesy

செக்ஸ் பொம்மைகள் :

செக்ஸ் பொம்மைகள் :

பழைமைவாதத்தில் உழன்ற அமெரிக்காவில் ‘யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் உடலுறவுகொள்ளலாம்' என்பதை வலியுறுத்துவதாக இருந்தது 'பிளே பாய்'. அதில் விளம்பரப்படுத்தப்பட்ட செக்ஸ் பொம்மைகள் அமோகமாக விற்றன.

இன்றைக்கு இருக்கும் ஆபாச வலைதளங்களின் மொத்த வருமானம் 100 பில்லியனைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் 10 பில்லியன் ஆண்டு வருமானம். செக்ஸ் டாய்களின் ஆண்டு வருமானம் 15 பில்லியனைத் தாண்டுகிறது.

Image Courtesy

மேன்ஷன் :

மேன்ஷன் :

அமெரிக்க அரசாங்கத்தை மட்டுமன்றி, ஹாலிவுட் உலகத்தையே கையில் வைத்திருந்தார். தனது பத்திரிகைபோலவே வாழ்க்கையையும் அனுபவித்தார். 'பிளே பாய் மேன்ஷன்' என்கிற ஒரு மாளிகையைக் கட்டி, கேர்ள் ஃப்ரெண்டுகளுடன் வாழ்ந்தார்.

தன் காதலிகளிடம் போதை மருந்துகளை உட்கொள்ளக் கட்டாயப்படுத்துவதும், கூட்டு உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவதும், ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது என பல்வேறு விதிமுறைகளை விதித்திருந்தார்.

Image Courtesy

கடுமையான விதி :

கடுமையான விதி :

மேன்ஷனில் ஹெஃப்னருடன் சேர்ந்து வாழும் யாருக்கும் வேறு ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது. போதை மருந்தை எடுத்துக்கொண்டால், கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதுதான் ஹெஃப்னரின் தீராத நம்பிக்கை. ஹெஃப்னரால் வயாகரா இல்லாமல் வாழ முடியாது.

ஒரு நாளைக்கு 17 பெண்களிடம் உடலுறவில் ஈடுபடும் ஹெஃப்னர், எந்த காண்டமும் பயன்படுத்த மாட்டார். பால்வினை நோய்க்கான சோதனையையும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஒரு பெண்ணுடன் உடலுறவில் இரண்டு நிமிடமே செலவழிப்பார்.

Image Courtesy

அட்டைப்படம் :

அட்டைப்படம் :

உலகளவில் ஆண்களால் அதிகம் வாங்கப்படும் இதழகாக கருதப்படும் ப்ளே பாய் இதழின் அட்டைப்படத்தின் படங்களுக்கு ஆரம்ப காலங்களில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. இந்த இதழின் அட்டையில்,சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்சிப்படங்கள் இடம் பெறுவதும் வழக்கம்.

இதில் தங்கள் படமும் இடம் பெற வேண்டும் என்பதை பலரும் விரும்பினர். இந்த இதழின் முதல் பிரதியின் அட்டைப்படத்தில் இடம்பெற்றவர் மார்லின் மன்றோ. தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

Image Courtesy

சரிவு :

சரிவு :

சமூகவளதங்களின் வளர்ச்சி மற்றும் இணையப் பயன்பாடு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பல்வேறு தடைகளை சந்தித்த போதும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ப்ளே பாய் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை ஹெப்னரின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி கவர்ச்சி இல்லை :

இனி கவர்ச்சி இல்லை :

கவர்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இதழ் அமெரிக்காவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. கடந்த 2016 ஆண்டிலிருந்து அட்டைப்படத்தில் கவர்சிப்படங்கள் இடம்பெறாது என்று அதன் நிர்வாகம் அறிவித்தது.

ப்ளே பாய் இதழின் அட்டைப்படத்தில் கடைசியாக கவர்சி போஸில் இடம்பெற்றவர் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன்.

Image Courtesy

உடல் வணிகம் :

உடல் வணிகம் :

இன்றைக்கு ஆபாசப் படங்களால், இருபாலருக்கிடையே இருக்கும் மனரீதியிலான குழப்பங்களுக்கும், வக்கிரமான மனநிலைக்கும் இவரே மூலாதாரம். உண்மையில், 'பிளே பாய்' பாலியல் விடுதலையைப் போதிக்கவில்லை. ஒரு பெண்ணுடன் எவ்வளவு வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். என்று வலியுறுத்தியது. இன்னும் சொல்லவேண்டுமானால் பெண்ணின் உடலை வணிகப்படுத்தியது.

மரணத்திலும் :

மரணத்திலும் :

உலகளவில் ப்ளே பாய் என்று புகழப்பட்ட ஹெஃப்னர் தன்னுடைய 86 வது வயதில் தன்னை விட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரிஸ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி தன்னுடைய 91 வயதில் காலமானர்.

Image Courtesy

மார்லின் மன்றோ :

மார்லின் மன்றோ :

ப்ளே பாய் இதழின் முதல் அட்டைபடத்தில் போஸ் கொடுத்த மர்லின் மன்றோ

1962 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தன்னையும் புதைக்க வேண்டும் என்று சொல்லி 75000 டாலருக்கு இடத்தை வாங்கினார்.

ஒரு முறை தன்னுடைய இறப்பு குறித்து பேசும் போது, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்வுட் வில்லேஜ் நினைவுப்பூங்காவில் நடாலியா வுட் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதோடு தன்னுடைய நண்பர்கள் பலரும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

எல்லையில்லா நேரத்தை மர்லின் அருகில் செலவிடும் இனிமையான வாய்ப்பை தவிர்ப்பது கடினமானது என்றார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Life history of play boy magazine founder Hugh Hefner

Life history of play boy magazine founder Hugh Hefner
Desktop Bottom Promotion