3வது மனைவியின் மகன், ஆடு மாடு மேய்த்து குடியரசு தலைவனான இவர் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் நெல்சன் மண்டேலா. சட்டம் படித்த நெல்சன் மண்டேலா தன்நாட்டில் நிறவெறியை எதிர்த்து போராடிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் எந்த கட்சி, குழு, அமைப்பையும் சேராது அரசை எதிர்த்து கொரிலா தாக்குதல் முறையில் போர் நடத்தினார். இதன் காரணமாக தான் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. நீண்டு இருட்டுக்கு பிறகு நெல்சன் மண்டேலா 1990ல் விடுதலையாகி வெளியாகினார்.

அகிம்சை வழியில் போராட்டம், ஆயுதம் ஏந்தி போராட்டம், தேச துரோக குற்றம் என இவர் 27 ஆண்டுகள் சிறையில் கழிக்க பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் அமைதிக்காக நோபல் பரிசும் வென்றுள்ளார்.

Cover Image Credit: Nelsan Mandela Foundtion

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

நெல்சன் மண்டேலா 1918ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருக்கும் குலு எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை சோசா எனும் பழங்குடி இனத்தை சேர்தவர். நெல்சன் ரோபிசலா (Rolihlahla) மண்டேலா'. Rolihlahla வின் பொருள் தொல்லை ஏற்படுத்துபவர் என்பதாகும்.

பல திருமணம்!

பல திருமணம்!

நெல்சன் மண்டேலாவின் தந்தை பல திருமணம் செய்தவர். அவருக்கு நான்கு மனைவிகள், நான்கு மகன்கள் மற்றும் ஒன்பது மகள்கள் இருந்தனர். நெல்சன் மண்டேலாவின் தாய் அவருக்கு மூன்றாவது மனைவி ஆவார்.

பெற்றோர் நெல்சன் மண்டேலாவின் பெற்றோர் இருவரும் படிப்பறிவு இல்லாதவர்கள்.

முதல் ஆள்!

முதல் ஆள்!

நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தில் அனைவரும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். தானும் தினமும், ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் பள்ளி சென்று வந்தார் நெல்சன் மண்டேலா. சிறு வயதிலேயே இவர் ஒரு குத்து சண்டை வீரர் ஆவார்.

விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்த போது, அந்த பல்கலைகழகத்தில் பயின்றே ஒரே நேட்டிவ் ஆப்ரிக்க மாணவர் நெல்சன் மண்டேலா மட்டும் தான்.

1950களில், நெல்சன் மண்டேலா காலையில் குற்றவியல் வழக்கறிஞராகவும், இரவில் முதிர்ச்சியற்ற குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார். இது பலருக்கும் தெரியாது.

மகன்கள்!

மகன்கள்!

நெல்சன் மண்டேலாவின் மகன் எய்ட்ஸ் நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர். நெல்சன் மண்டேலாவின் முதல் மகன் கார் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் 13 வருட இல்லற வாழ்க்கை அரசியல் காரணத்தால் விவாகரத்தில் முடிந்தது. பிறகு, நெல்சன் மண்டேலா தெற்கு ஆப்ரிக்காவின் மொசாம்பிக் அதிபரின் விதவை மனைவியை மறுமணம் செய்துக் கொண்டார்.

விடுதலை!

விடுதலை!

நெல்சன் மண்டேலா தான் இருந்த சிறையில் 27 ஆண்டுகள் ஒரு கல் மேடையில், மெலிசான போர்வை விரித்து படுத்துறங்கி வந்தார்.

1990ம் ஆண்டு விடுதலை பெற்ற போதிலும் கூட, நெல்சன் மண்டேலாவை தீவிரமாக கண்காணிக்கும் தீவிரவாதிகள் பட்டியலில் தான் வைத்திருந்தது அமெரிக்கா. இதனால், 2008 வரையிலும் நெல்சன் மண்டேலா அமெரிக்காவினுள் நுழைய தடையும், சிறப்பு அனுமதி பெற வேண்டிய கட்டாயமும் இருந்தது.

ஸ்பைஸ் கேர்ள்ஸ்!

ஸ்பைஸ் கேர்ள்ஸ்!

ஸ்பைஸ் கேர்ள்ஸ்எனும் ஆங்கில பெண்கள் பாப் பாடல் குழுவினர் நெல்சன் மண்டேலாவை 1997ல் சந்தித்தனர். இது தான் இவர்கள் இவர்களுக்குள் நடந்த முதல் சந்திப்பாகும். இந்த நிகழ்வின் போது நெல்சன் மண்டேலா, இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என நகைத்தப்படி கூறினார்.

ஆட்சி!

ஆட்சி!

நெல்சன் மண்டேலாவின் ஆட்சியின் கீழ், 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டன. இரண்டு மில்லியன் மக்களுக்கு எலக்ட்ரிக் வசதி மற்றும் மூன்று மில்லியன் கூடுதல் மக்களுக்கு நீர் வசதி செய்துத்தரப்பட்டது.. ஆப்பிரிக்காவில் இது சாதாரண காரியம் அல்ல. இன்னும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் வசதி இல்லை. தடகள வீரர் உசேன் போல்ட் மற்றும் பாப் பாடகர் ஏகான் போன்ற பல பிரபலங்கள் பல பகுதிகளுக்கு தங்களால் முடிந்த மின்சாரம் மற்றும் நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படம்!

திரைப்படம்!

நெல்சன் மண்டேலா 1992ல் வெளியான மால்கொல்ம் எக்ஸ் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பள்ளி மாணவர் மத்தியில் ஆசிரியராக தோன்றி மக்கள் உரிமை பற்றி பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

நண்பர்கள்!

நண்பர்கள்!

லிபியாவை ஆட்சி செய்து வந்தவரான மும்மார் கடாபியும் நெல்சன் மண்டேலா மிகவும் நெருங்கிய நபர்கள் ஆவார்கள்.

How Far We Slaves Have Come என்ற புத்தகத்தை நெல்சன் மண்டேலாவும், பிடல்காஸ்ட்ரோவும் சேர்ந்த எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த புத்தகம் அடிமை தனத்தை எதிர்த்து பேசும் புத்தகமாக அமைந்திருந்தது.

மரணம்!

மரணம்!

நெல்சன் மண்டேலாவின் உள்ளங்கை அச்சு, ஆப்ரிக்க கண்டதை குறிப்பது போல அமைந்திருந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நீண்ட நாளாக பாதிக்கப்பட்டிருந்த நுரையீரல் பிரச்சனை காரணமாக தனது 95அகவையில் நெல்சன் மண்டேலா மரணமடிந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: facts, celebrities, insync, pulse
English summary

Interesting Facts To Know About Nelson Mandela!

Interesting Facts To Know About Nelson Mandela!
Subscribe Newsletter