தமிழ் தாத்தா உ.வே. சா. வின் வாழ்வையே திசை மாற்றிய நிகழ்வு எது ? அவரைப் பற்றி அரிய தகவல்கள்!!

By: Gnaana
Subscribe to Boldsky

தஞ்சைத்தரணி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல, பல சான்றோர்களையும், ஆன்மீக ஞானிகளையும், தமிழ் அறிஞர்களையும், இசைக் கலைஞர்களையும், இந்த உலகிற்கு அளித்த உன்னத மண்.

Interesting events that happening to U.V Swaminatha Iyer

அத்தகைய தஞ்சை மண்ணில் பிறந்து, அதுவரை, உலகிற்கு கிடைக்காமல் இருந்த, பல அரிய பழந்தமிழ் காப்பியங்கள் எல்லாம், பெரும் நிலக்கிழார்கள், செல்வந்தர்கள் வீடுகளின் பரணில் ஓலைச்சுவடிகளாக, செப்பேடுகளாக உறங்கிய அந்த பழந்தமிழர் பாரம்பரியத் தொன்மையை, இலக்கிய வன்மையை உலகிற்கு எடுத்தியம்பும் வண்ணம், பலவித இன்னல்களுக்கிடையே அவற்றை சேகரித்துப் பதிப்பித்து, தமிழின் புகழை, மொழி ஆளுமையை, உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர், உ.வே.சா அவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்த ஊர் :

பிறந்த ஊர் :

குடந்தை எனும் கும்பகோணம் நகரில் இருந்து, சில கி.மீ. தொலைவில் உள்ள உத்தமதானபுரம் எனும் சிற்றூர்தான், உ.வே.சா அவர்கள் பிறந்த ஊர். ஒரு தமிழ் இசைக்கலைஞரின் மகனாகப் பிறந்த உ.வே.சா, அன்றைய வழக்கப்படி, திண்ணைப்பள்ளி முறையில், இளம் வயதிலேயே, தமிழ் மொழியையும், இசையையும் கற்றார்.

பின்னர், சைவத்திரு மடங்களில் பழமையான தருமை ஆதீனம் போல, தமிழ்த் தொண்டாற்றிய திருவாவடுதுறை ஆதீனத்தில், தமிழில் மகா வித்வான் என அழைக்கப்பட்ட திருச்சி,மீனாட்சிசுந்தரம் அவர்களிடம், சில ஆண்டுகாலம், தமிழ் பயின்று, தமிழ் அறிஞர் எனும் பட்டம் பெற்றார்.

இதன் மூலம், பழம்பெரும் புகழ்மிக்க, குடந்தை அரசினர் கல்லூரியில் சில ஆண்டு காலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், சென்னை மாநிலக் கல்லூரியிலும், தமிழ் ஆசிரியப்பணி ஆற்றினார்.

உ.வே.சா வின் தமிழ்ப் பணி :

உ.வே.சா வின் தமிழ்ப் பணி :

இவர் செய்த தமிழ்ப் பணிகளை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இவர் இல்லையென்றால், சிலப்பதிகாரம் எனும் நூலையே இன்றுவரை, நாம் அறிந்திருக்க மாட்டோம். கண்ணகி யாரென்று தமிழர் அறியாமலேயே இருந்திருப்பர்.

மணிமேகலையின் துறவறம், அமுத சுரபி எல்லாம், நாமறியாமலேயே, போயிருக்கும். மணிமேகலை எனும் காப்பியம் பற்றி எதுவும் அறியாமல், பல பிற்கால சரித்திரப் புதினங்கள், மணிமேகலை இல்லாமலேயே, பூம்புகார், மணி பல்லவம் மற்றும் வஞ்சிமாநகரை மட்டுமல்ல, சமணமதத்தையும் கடந்திருக்கும்.

சீவகசிந்தாமணி எனும் நூலைப் பற்றி நாம் அறியாமலே, இருந்திருப்போம்.

இன்று அகநானூறு புறநானூறு என்று பிரித்து அறியப்படும், பண்டைய கவிதைகள் யாவும், அவை உருவாகிய நோக்கத்தை அறியாமல், ஒரே வகையில் இருந்திருக்கும். சங்க இலக்கியங்கள் என்று இன்று பெருமையாக மேற்கோள் காட்டும் நூல்களெல்லாம், ஓலைச்சுவடிகளில் மண்ணோடு மண்ணாகி இருக்கும்.

இது போல, ஏராளமான பழந்தமிழ் நூல்களை, தம் உடல் சிரமம் பாராமல், கண் துஞ்சாமல், கொண்ட எண்ணத்தில் உறுதியுடன் இருந்து, தம் சுக துக்கம் மறந்து தமிழ்நாடெங்கும் பயணம் செய்து, கண்டெடுத்து, மீட்டவர் உ.வே.சா. அவர்கள்.

இதற்காக, அவர் பட்ட சிரமங்கள், வார்த்தைகளில் அடங்காது. நூல்களைத் தேடிச் செல்லும் இடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அவமானங்கள் அவரை சமயத்தில், மனம் சோர்வடைய வைத்திருந்தாலும், தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருந்து, இலக்கை அடைந்தார், உ.வே.சா. அவர்கள்.

பண்டைய நூல்களைத் தேடும் நெடிய பயணம், ஒன்றும் அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை, ஐயா அவர்களும் செல்வந்தருமில்லை, வறுமையில் வாடிய, தமிழ் அறிஞர்தான்.

 வறுமை காலம் :

வறுமை காலம் :

தமிழைத் தரணியெங்கும் பரப்பி, தமிழரை அடிமைத்தளையில் இருந்து தலை நிமிரச்செய்த மீசைக்காரன், எம் பாட்டின் தலைவன் பாரதியும், வாழும் காலத்தில், வளமான வாழ்வை வாழ்ந்திடவில்லை,

தேசியக்கவி என்று பிற்காலம் கொண்டாடும் அவர் வீட்டில் அன்று, வறுமையே, செல்வமாக இருந்தது. ஆயினும், அவரின் புரட்சிக் கனல், விடுதலை வேட்கை, சமூகச் சாடல், என்றும் நீர்த்ததில்லை! வறுமை நெருங்க முடியாத, அனல் தெறிக்கும் அக்னிப் பிழம்பாக அல்லவா, வாழ்ந்து மறைந்தார், எம் கவி, கம்பீரமாக!

அதே போன்ற நிலையில் தான், உ.வே.சா அவர்களும் வாழ்ந்திருந்தார். பசி கூட சோர்ந்துபோகும், மிக வறுமையான குடும்பச் சூழ்நிலை கொண்டதுதான், அவர் வீடும்.

இருந்தபோதிலும், தனது தேடுதல் வேட்கையை வறுமை தாக்க, ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை. எந்த நிலையிலும், தமது இலட்சிய தாகத்தை இழக்காமல், நூல்களை சேகரிப்பதில் இருந்து, பின்வாங்காமல் இருந்தார்.

வாழ்ந்தபின், அவர்களைக் கொண்டாடும் பிற்கால தலைமுறைகளைப் படைத்த இயற்கை, அவர்கள் வாழும் காலத்தில் ஏன் உயிர்த்தெழவில்லை?

 இயற்கையின் முரண்பாடுகளில், உள்ள ஒற்றுமை இது!

இயற்கையின் முரண்பாடுகளில், உள்ள ஒற்றுமை இது!

வறுமையில் வாடிய குடும்பம் என்றாலும், உ.வே.சாவின் தந்தை, கல்வி ஒன்றே, என்றும் நிலையானது என்று, இவரை ஓய்வில்லாமல் படிக்கக் வைத்திருக்கிறார். சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தந்தை அந்த நினைப்பை மாற்றி, நீ படித்துக்கொண்டிருக்க வேண்டும், என்று அறிவுறுத்தி, தொன்மையான தமிழ் இலக்கண நூல்கள் மற்றும் ஆங்கிலத்தை கற்க வைத்தார்கள்.இதனால், நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.

இலக்கிய அறிவால், தந்தையின் இராமாயண விரிவுரைகளில் உதவி செய்து, நல்ல பெயர் பெற்று, குடும்ப வறுமை சிறிதளவில் சரியாக, வருமானத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார் உ.வே.சா.

ஆயினும், தமிழைக் கற்கவேண்டும் என்ற அவரின் வேட்கை விலகவில்லை. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் அவர்களிடம் பாடம் கற்க வந்ததுதான், அவரின் தமிழ் ஆர்வத்திற்கு தக்கதோர் வாய்ப்பாக அமைந்தது.

மடத்தில் இருந்த காலம் :

மடத்தில் இருந்த காலம் :

இதன் மூலம்தான், மகாவித்வான் அவர்களின் அணுக்கமும், ஆதீனகர்த்தரின் அருகாமையும் கிடைத்தது. அதுவே, குடும்பத்துடன் திருவாவடுதுறையில், குடியேற வைத்தது.

மடத்தில் இருந்த காலத்தில்தான், தமிழில் முதல் புதினம் எனும் பெயர்பெற்ற பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதிய, மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதுபோல, பல தமிழறிஞர்களுடன் பழகும் வாய்ப்பும், உ.வே.சா அவர்களுக்கு கிடைத்தது.

உ.வே.சா அவர்களின் வாழ்வை, திசைமாற்றிய நிகழ்வு !!

உ.வே.சா அவர்களின் வாழ்வை, திசைமாற்றிய நிகழ்வு !!

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளைக்கிணங்க, குடந்தை முன்சீபாக வந்திருந்த இராமசாமி அவர்களை சந்தித்து, தாம் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மாணாக்கர் என்றும், தாம் படித்த நூல்களின் பெரும்பட்டியலை வாசித்தபோதும், அவற்றை ஒரு அணு அளவேனும் இலட்சியம் செய்யாது, இவற்றால் ஒன்றும் பயன் இல்லை, இந்த நூல்களின் மூலத்தை அறிந்திருக்கிறீர்களா" சீவக சிந்தாமணியைப் படித்திருக்கிறீர்களா என்று அவர் கேட்க, அவை கிடைக்க வில்லை, என்று இவர் மெல்லக்கூற, முன்சீப் உடனே, இவரிடம் சீவக சிந்தாமணி நூலின் நகலை கையில் கொடுத்து, படித்து வாருங்கள் என்று அனுப்ப, அதன் பின்னர் தான் படித்து, அந்த நூலின் பெருமையை, தமிழ் மொழியின் ஆளுமையை, வளத்தை உணர்கிறார்.

சமண மதக்கருத்துக்களை கொண்ட அந்த நூலைப் பல முறை படித்து, வார்த்தைகளின் விளக்கம் பெற முடியாமல், முன்சீப் அவர்களிடம் விவாதித்து, அதிலும் தெளிவு ஏற்படாமல், பல சமண அறிஞர்களிடம் சென்று, உ.வே.சா அவர்கள் விளக்கங்களைப் பெற்றதாக, அறிய முடிகிறது.

அதன் பின்னான முன்னேற்றம் :

அதன் பின்னான முன்னேற்றம் :

அதுபோன்ற சமண அறிஞர்களின் உரையாடலில் தான், சீவகனைப் பற்றிய அந்த காவியத்தைப் பற்றிய பல செவிவழிச் செய்திகளை அறிய முடிகிறது, மேலும், சிந்தாமணியின் நூலாசிரியர், திருத்தக்க தேவரின் வரலாற்றையும் அறிந்து கொள்கிறார்.

இதுபோல, தேடி சேகரித்த அனைத்துத் தகவல்களையும், அந்த நூற்பதிப்புடன் சேர்த்து, வெளியிட, அவை யாவும் நூலைப்பற்றிய, முழுமையான அறிமுகத்தை, படிப்பவர்களுக்குத் தந்தது.

பல்லாண்டுகாலம், அவர் பாடுபட்டு திரட்டிய தகவல்களை, அவர்கள் படிக்கும்போது, அவற்றையும் தெரிந்துகொள்ள வைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. சைவ மடத்திற்கு தொடர்புடைய சைவராக இருந்தாலும், சமண சமயத்தின் நூலான சிந்தாமணியில், சமயங்கள் தலையிட அவர் அனுமதித்ததில்லை,

சமயங்களைக் கடந்த, தமிழ் மொழியின் சுவையை நூலில் அனுபவிக்கும் போது, அதற்குத் தடை எதற்கு என்றவர், உ.வே.சா. அவர்கள்.

அவரின் நினைவுச்சின்னம்:

அவரின் நினைவுச்சின்னம்:

இந்த நூல்களை அச்சிடும் சமயத்தில், பிழை திருத்துவதை, தாமே, பல நாளிரவுகள், விடிய விடிய திருத்தி இருக்கிறார், அதை சிலர், தாமும் சரிபார்த்துத் தருவதாகக் கூறினாலும், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், உங்கள் உழைப்பை, உங்கள் திருத்தங்களை, தாங்கள் செய்தது என்று கூறிக்கொள்வர், யாரிடமும் தராமல், நீங்களே, தொடருங்கள் என்றிருக்கிறார்.

இத்தனை சாதனைகள் படைத்து, தமிழின் ஆளுமையை உயர்த்திய, உ.வே.சா அவர்கள், உத்தமதானபுரம் கிராமத்தில் இளைய வயதில் வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக, மாற்றியிருக்கிறது, தமிழக அரசு.

சென்னை பெசன்ட் நகரில் இவர் பெயரில், ஒரு நூல் நிலையம் இயங்கி வருகிறது, இதில், பல அச்சில் வெளிவராத ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டுள்ளன, பல திருக்கோவில் புராணங்களில் சொல்லாத தகவல்களும் அவற்றில் இருக்கின்றன, என்பதுதான், உ.வே.சா அவர்களின் உழைப்பின் வலிமையாகும்.

சேமிப்பில் இருக்கும் ஓலைச்சுவடிகளில் இருந்து, தற்காலத்தில் கூட, சில பழைய நூல்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன, என்பதே, அவரின் தேடலுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாகும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

Interesting events that happening to U.V Swaminatha Iyer

Interesting events that happening to U.V Swaminatha Iyer
Story first published: Friday, December 8, 2017, 17:30 [IST]
Subscribe Newsletter